உள்ளடக்கத்துக்குச் செல்

கொங்கணர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கொங்கணர்
கொங்கண சித்தர்
பதவிசித்தர்
சுய தரவுகள்
பிறப்பு
இறப்பு
சமயம்இந்து சமயம்
பெற்றோர்
Era9 ஆம் நூற்றாண்டு
உட்குழுசைவ சமயம்
சைவ சித்தாந்தம்
Creedசைவ சித்தாந்தம்
கோயில்([ஊதியூர்,வையப்பமலை)
பதவிகள்
Teacherபோகர்
Literary worksKonganar Mukkaandam (3000 songs), Mukkaanda Suthiram, Vaippu Nool, Patchini, Sarakku Vaippu 100, Navakiraga Kakisham, Konganar Vakkiyam 10, Suthiram 13, Konganar 40, Konganar 8, Konganar Thitchavithi

கொங்கண சித்தர் ("Koṅgaṇar Siddhar")[1] அல்லது கொங்கணர் அல்லது கொங்கணவர் பதினெண் சித்தர்களுள் முக்கியமான சித்தராகக் கருதப்படுபவர்.

எழில் கொஞ்சும் கேரளத்தின் கொங்கண் பிரதேசத்தில் புளிஞர் குடியில் கொங்கணச் சித்தர் பிறந்தார் என்று அகத்தியர் பனிரெண்டாயிரமும் போகர் ஏழாயிரமும் தெரிவிக்கின்றன. கொங்கணரின் குரு போகர் ஆவார். கொங்கணர் சிறந்த முருகன் மற்றும் அம்பிகை பக்தர் ஆவார். முருகனை வழிபடும் முறையையும் மந்திரங்களையும் போகர் கொங்கணருக்கு உபதேசித்துள்ளார்.

முருகப்பெருமான் பழனியம்பதியில் ஆண்டி கோலத்தில் நின்று தரிசனம் தருகிறார். முருகப்பெருமான் பழனியை விட்டு திருவிளையாடல் புரியும் பொருட்டு அளவாய் மலை சென்று அங்கு சித்தர்கள் சேர்த்து வைத்த பொன் மலையை தூக்கி வந்து வைகை பொன்மலை என்ற இடத்தில் வைத்ததாக அதன் தல வரலாறு கூறுகிறது முருகன் பழனியை விட்டு இடம்பெயர்ந்ததை ஞான திருஷ்டியால் அறிந்த போகர் புதிய மூலவராக நவபாஷாணத்தால் ஆன தண்டாயுதபாணியை வடித்தெடுத்தார். தனது சீடரான கொங்கணரை அழைத்து அளவாய் மலை சென்று முருகனின் திருவிளையாடலை நேரில் சென்று அறிந்து வரபணித்தார். அதை ஏற்று கொங்கணரும் பழனியில் இருந்து அளவாய் மலை வந்து நடந்ததை அறிந்து கொண்டு சிறிது காலம் தவம் புரிந்தார். பிறகு அங்கிருந்து வைகை பொன்மலை என்ற தலத்தை அடைந்து அங்குள்ள குகையில் சுமார் 300 வருடங்கள் தவம் புரிந்து முருகன் தரிசனம் கண்டதாக குறிப்புகள் கூறுகின்றன. அங்கிருந்து ஊதியூர் மற்றும் பழனி வந்து போகரை கண்டு அளவளாவி இருந்தார். மறுபடியும் பயணம் மேற்கொண்ட அவர் இறுதியில் திருப்பதி திருமலையில் சித்திரை மாதம் உத்திராடம் நட்சத்திரத்தில் ஜீவசமாதி அடைந்தார்[2]திருப்பூர் மாவட்டம் ஊதியூர் மலையில் கொங்கண சித்தர் தவபீடம் உள்ளது. இது தமிழ்நாட்டின் புகழ்பெற்ற புனித தலங்களில் ஒன்றாகும். கொங்கணச் சித்தர் தமிழ்நாட்டிலுள்ள பல தலங்களிலும் சென்று தவம் செய்ததாகவும் இறுதியில் திருப்பதியில் ஜீவசமாதியானதாகவும் தகவல்கள் உள்ளன. அவர் தங்கியிருந்த மற்ற இடங்களில் முக்கியமானவை வையப்பமலை, அலவாய்மலை, சங்ககிரி ஆகியவையாகும்

இவருக்கு கொங்கணர், கொங்கணச் சித்தர், கொங்கண நாயனார், கொங்கண நாதர் எனப் பல பெயர்களும் உண்டு. இவர்கள் வெவ்வேறானவர்கள் என்பாருமுண்டு.

கொங்கணர் திருவள்ளுவரின் சீடர் என்றும் போகரின் சீடர் என்றும் கூறுகின்றனர். இவர்பெயரால் வைத்திய, இரசவாத, யோக நூல்களும் பாடல்களும் இருக்கின்றன. இவர் கி.பி 7ஆம் நூற்றாண்டில் இருந்தவர். கொங்கு நாட்டைச் சேர்ந்தவர். ஆதலின் இப்பெயர் பெற்றார் என்பர்.[3]

அரச வம்சம்

[தொகு]

கொங்கனர் அடிப்படையில் ஒரு இளவரசர் கொங்குநாட்டில் மகராஜன் எனும் மன்னனின் ஒரே மகனாவார். தனது 16வது வயதிலேயே காடுகளை வலம் வரவேண்டும் என்ற ஆசையை தனது தந்தையிடம் முறையிட அவரும் ஏற்பாடு செய்தார். அந்தப் பயணத்திற்கு பெயர் பூவலம் என்று குறிப்பிடுவர்.

மலை சார்ந்த காடுகளைச் சுற்றி வந்த இளவரசர், தனது கண்களில் படும் பறவை விலங்கு செடி கொடிகள் அனைத்தையும் தனது வாளினால் வெட்டி வீசி எறிந்து கொண்டே வந்து சேர்ந்த மலைதான் ஊதியூர் மலை.[4]

கொங்கணர் பற்றிய கதை ஒன்று உண்டு. கொங்கணர் ஒரு மரத்தின் கீழ் யோகம் செய்து கொண்டிருந்தார். அப்பொழுது மரத்தின் மேல் இருந்த கொக்கு அவர்மீது எச்சம் இட்டது. உடனேகொங்கணர் கண்ணை விழித்து அக்கொக்கை பார்த்தார். அது எரிந்து சாம்பலாயிற்று. அதன் பிறகு அவர் ஊருக்குள் வந்து ஒரு மனைவாயிலில் நின்று பிச்சை கேட்டார். அந்த இல்லத்தரசி கணவருக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்த நேரம். ஆதலால் அவர் பிச்சை கொண்டுவர சிறிது நேரமாயிற்று. நேரங்கடந்து பிச்சை கொண்டுவந்தவரைக் கொங்கணர் சினத்துடன் விழித்து பார்த்தார். உடனே, அவ்வம்மையார் "கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா?" என்று கேட்டார்.கற்பின் திறத்தால் வந்த ஞானத்தை அறிந்த கொங்கணவர் நாணமுற்று,தன்னுடைய சினத்தை வெல்லவேண்டிய உண்மையை அறிந்து மிகவும் தீவிரமாக தவவாழ்வில் கவனம் செலுத்தலானார்.[5]

கொங்கணர் நூல்கள்

[தொகு]

கொங்கணர் நூல்கள் பல உள்ளன.அவற்றுள் சில நூல்களே அறியப்பட்டுள்ளன.

  • தனிக்குணம் 200
  • வாத சூத்திரம் 200
  • வாத காவியம் 3000
  • வைத்தியம் 200
  • சரக்கு வைப்பு 200
  • முக்காண்டங்கள் 1500
  • தண்டகம் 120
  • ஞான வெண்பா 49
  • ஞான முக்காண்ட சூத்திரம் 80
  • கற்ப சூத்திரம் 100
  • உற்பக்தி ஞானம் 21
  • முதற்காண்ட சூத்திரம் 50
  • வாலைக்கும்மி 100
  • ஆதியந்த சூத்திரம் 45
  • நடுக்காண்ட சூத்திரம் 50
  • முப்பு சூத்திரம் 40
  • ஞான சைதண்யம்109
  • கடைக்காண்ட சூத்திரம் 50
  • கொங்கணர் கற்ப உற்பத்தி
  • கொங்கணர் நடு காண்ட சூத்திரம்-50
  • கொங்கணர் சூத்திரம்-15
  • கொங்கணர் சூத்திரம்-50
  • கொங்கணர் 2,3 காண்டம்
  • கொங்கணர் ஆதி சூத்திரம்
  • கொங்கணர் பிரம்மானந்தம்
  • கொங்கணர் ஞான நூல்
  • கொங்கணர் ஞானம்
  • கொங்கணர் கடை காண்டம்
  • கொங்கணர் கடை காண்டம்- 2
  • கொங்கணர் கடை காண்டம்-40
  • கொங்கனார் கடைக் காண்ட சூத்திரம்
  • கொங்கணர் கலைக்கியான சூத்திரம்
  • கொங்கணர் கற்ப கோள்
  • கொங்கணர் கற்ப முறைகள்
  • கொங்கணர் கற்ப சூத்திரம்
  • கொங்கணர் கற்ப உற்பத்தி
  • கொங்கணர் கற்பம்
  • கொங்கணர் மூன்றாம் காண்டம்
  • கொங்கணர் முக்காண்டம்
  • கொங்கணர் முப்பு சுருக்கம்
  • கொங்கணர் முதல் காண்டம்-500
  • கொங்கணர் 1-ஆம் காண்டம்-40
  • கொங்கணர் 1-ஆம் காண்டம்-41
  • கொங்கணர் நடு காண்டம்
  • கொங்கணர் பட்சணி
  • கொங்கணர் பிற காண்டம்
  • கொங்கணர் சரக்கு வைப்பு
  • கொங்கணர் சரக்கு வைப்பு முறை
  • கொங்கணர் செந்தூரம்
  • கொங்கணர் சித்தர் நூல்
  • கொங்கணர் சித்து – 12
  • கொங்கணர் சூத்திரம்
  • கொங்கணர் சூத்திரம் 27-இல் இருந்து
  • கொங்கணர் சூத்திரம்-40
  • கொங்கணர் முதல் காண்டம்-41
  • கொங்கணர் சூத்திரம்-15
  • கொங்கணர் சூத்திரம்-27
  • கொங்கணர் சூத்திரம்-40
  • கொங்கணர் சூத்திரம்-50
  • கொங்கணர் சூத்திரம்-500
  • கொங்கணர் சூத்திரம்-60
  • கொங்கணர் தாண்டகம் சுருக்கம்
  • கொங்கணர் துரிய ஞானம்-15
  • கொங்கணர் உற்பத்தி லயம்-21
  • கொங்கணர் வாக்கியம் முதல் காண்டம்
  • கொங்கணர் -16
  • கொங்கணர் -30
  • கொங்கணர் பாடல்கள்
  • கொங்கணர் வேதாந்த சூத்திரம்
  • கொங்கணர் வைத்திய நூல்

கொங்கணச் சித்தர் வாலைக் கும்மி[6]

[தொகு]

இவர் பெயரில் வழங்கப்படும் பாடல்களில் "வாலைக் கும்மி" என்பது ஒன்று. வாலை என்பது சக்தியின் பெயர். கன்னி என்றும் பொருள். கன்னிப் பெண்ணை முன்நிறுத்தி கும்மி பாடியுள்ளதால் வாலைக்கும்மி என வழங்குகிறது.

இது இவர் பெயரால் வழங்கினாலும் இவரால் பாடப்பட்டது அன்று. இவர் கருத்துக்களை அமைத்து ஆசிரியர் வீரப் பெருமாளின் மாணாக்கர் ஒருவர் பாடியதாகவும், அவர் வலவேந்திரன் துரைவள்ளல் என்ற சிற்றரசன் காலத்தவர் என்றும் அவன் அஞ்செழுத்துணர்ந்த சைவன் என்றும் வாலைக்கும்மி பாடல் கூறுகின்றது.

உசாத்துணை

[தொகு]
  1. pksak_admin. "கொங்கணவர்". Pallikaranai Adhi Parasakthi. பார்க்கப்பட்ட நாள் 2022-04-24.
  2. "திருமலை பெருமாளின் பாதத்தின் கீழ் ஜீவசமாதி பெற்ற கொங்கண சித்தர் – Kongana Siddhar – Divine World" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-11-10.
  3. Team, shakthionline. "கொங்கணருக்கு பெயர் சூட்டிய சித்தர் பிரான்". shakthionline. பார்க்கப்பட்ட நாள் 2021-11-10.
  4. "கொங்கண சித்தர் | கொங்கணர் Konganar Siddhar Thirupathi – Neerodai". நீரோடை (in அமெரிக்க ஆங்கிலம்). 2019-09-25. பார்க்கப்பட்ட நாள் 2021-11-10.
  5. Staranandram (2020-09-11). "கொங்கணர் சித்தரின் சூட்சுமங்கள்". Dr.Star Anand Ram (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-11-10.
  6. "கொங்கணச் சித்தர் | சித்தர் பாடல்கள் | kongana Couplet Siddhar Couplet Tamil::https://www.ytamizh.com/". www.ytamizh.com. பார்க்கப்பட்ட நாள் 2021-09-17.

மேலும் படிக்க

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொங்கணர்&oldid=4047290" இலிருந்து மீள்விக்கப்பட்டது