சட்டைமுனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சட்டைமுனி என்பவர் பதினெண் சித்தர்களில் ஒருவராகக் கணிக்கப்பட்டவர். இவர் ஆவணி மாதம் மிருகசீரிடம் மூன்றாம் பாதத்தில் பிறந்தார் [1] என்று கூறும் போகர் இவரைத் தமது சீடராக அறிமுகப்படுத்தி இவரது வரலாற்றையும் தெரிவிக்கிறார்.

வரலாறு[தொகு]

சட்டைமுனியின் பெற்றோர் விவசாயக் கூலிகளாகத் தங்கள் வாழ்க்கையை நடத்தி வந்தனர். சட்டைமுனி கோவில்களில் தட்டையேந்தி யாசகம் பெற்று தாய்தந்தையர்க்கு உதவி வந்தார். ஒருநாள் கோவில் வாசலில் வடநாட்டிலிருந்து வந்த சங்கு பூண்ட ஒரு சித்தரைக் கண்டு அவரிடம் ஏதோ ஓர் அபூர்வ சக்தி இருப்பதை உணர்ந்து சட்டைமுனி அவருடனே கிளம்பிவிட்டார். போகருடைய சீடராக வாழ்ந்த காலத்தில் கொங்கணர், கருவூரார் முதலான பல சித்தர்களின் தொடர்பு அவருக்கு ஏற்பட்டது.

சட்டைமுனி ஊர் ஊராகச் சுற்றி வரும் காலத்தில் தூரத்திலிருந்து தெரியும் திருவரங்கர் கோவில் கலசங்களை கண்டு பேரானந்தம் கொண்டார்.

இக்கோவில் நடைசாத்துவதற்குள் அரங்கனை தரிசித்து விட வேண்டுமென ஆவலாக நடந்தார். ஆயினும் பூசை முடிந்து கோவில் கதவுகள் அடைக்கப்பட்டு விட்டன. ஏமாற்றத்துடன் சட்டைமுனி, கோவில் வாசலில் நின்று அரங்கா! அரங்கா! அரங்கா! என்று கத்தினார். உடனே கதவுகள் தாமாகத் திறந்தன. அரங்கனின் தரிசனம் சட்டைமுனிக்குக் கிடைத்தது. அரங்கனின் ஆபரணங்கள் ஒவ்வொன்றாக கழன்று சட்டைமுனியின் மேல் வந்து சேர்ந்தன. சட்டைமுனி “அரங்கா!” என்று கதறிய சப்தம் கேட்டு திரண்டு வந்த ஊர்மக்கள் வியந்து நின்றனர். அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே இறைவனுடன் ஒன்றாய்க் கலந்தார் சட்டைமுனி. சித்தரின் சமாதி இன்றும் திருவரங்கத்தில் இருப்பதாய் கூறப்படுகிறது[2]

நூல்கள்[தொகு]

 • சட்டைமுனி நிகண்டு – 1200
 • சட்டைமுனி வாதகாவியம் – 1000
 • சட்டைமுனி சரக்குவைப்பு – 500
 • சட்டைமுனி நவரத்தின வைப்பு – 500
 • சட்டைமுனி வாகடம் – 200
 • சட்டைமுனி கற்பம் – 100
 • சட்டைமுனி உண்மை விளக்கம் – 51
 • சட்டைமுனி தீட்சை - 200
 • சட்டைமுனி ஞானம் - 200
 • சட்டைமுனி பின் ஞானம் – 200*சட்டைமுனி சடாட்சர கோவை - 108
 • சட்டைமுனி நிகண்டு சூத்திரம் – 51
 • சட்டைமுனி தண்டகம் - 81
 • சட்டைமுனி மேற்படி சூத்திரம் – 52
 • சட்டைமுனி குரு சூத்திரம் – 25
 • சட்டைமுனி ஞான விளக்கம் - 51

மேற்கோள்கள்[தொகு]

 1. 14 ஆம் நூற்றாண்டு - மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1976, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 71. 
 2. மரு.ச.உத்தமராசன், “தோற்றக் கிராம ஆராய்ச்சியும், சித்த மருத்துவ வரலாறும்”

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சட்டைமுனி&oldid=3537575" இலிருந்து மீள்விக்கப்பட்டது