பொன்னூதி மலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பொன்னூதி மலை

கொங்கண சித்தர் தங்கி நெருப்பூதி பொன் செய்ததால் இந்த மலை பொன்னூதி மலை என்று அழைக்கப்படுகிறது சஞ்சீவி மலையின் ஒருபகுதி எனக் கருதுவதால் சஞ்சீவி மலை என்றும் அழைக்கப்படுகிறது. அருணகிரிநாதர்-பாடிய திருபுகழ்(106) பாடப்பெற்ற புன்னிய தலமான முருகப் பெருமான் தலம் இங்கே அமைந்துள்ளது. இம் மலையில் தமிழர்களின் பண்பாட்டைச் சித்தரிக்கும் கலைப் பொக்கிஷங்களான புராதனச் சின்னங்கள் காணப்படுகின்றன. மேலும் இம்மலையைச் சுற்றி வரலாற்றுப் பெருமைகள் தாங்கிய பல்வேறு தொல்லியல் சிற்பங்கள் உள்ளன.

தமிழ்ச் சமூகத்தின் வாழ்க்கை முறை, பண்பாடு ஆகியவற்றை விளக்கும் பல்வேறு சிற்பங்கள் மற்றும் கல்வெட்டுகள் தற்போது மலையடிவாரத்தில் காணப்படுகிறது.

தமிழினத்தின் பெருமைமிகு வரலாற்றைக் கொண்ட சோழர் காலத்திய 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நந்தி சிற்பங்களும், நாக சிற்பங்களும் காணப்படுகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பொன்னூதி_மலை&oldid=2377163" இருந்து மீள்விக்கப்பட்டது