கனரா வங்கி
வகை | பொதுத்துறை நிறுவனம் BSE, NSE |
---|---|
நிறுவுகை | 1906 |
தலைமையகம் | கனரா வங்கி., 112, Jayacharamarajendra Road, பெங்களூரு இந்தியா |
தொழில்துறை | வங்கி காப்புறுதி Capital Markets, allied industries |
உற்பத்திகள் | கடன், கடன் அட்டைகள், சேமிப்பு, காப்புறுதி |
வருமானம் | ரூ. 5500.35 கோடி |
மொத்தச் சொத்துகள் | ரூ. கோடி மார்ச் 31, 2009. |
இணையத்தளம் | கனரா வங்கி |
கனரா வங்கி (Canara Bank) இந்தியாவின் ஒரு பொதுத்துறை வங்கியாகும். இது கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூரு நகரைத் தலைமையகமாக கொண்டு செயல்படுகிறது.
வரலாறு
[தொகு]வள்ளல் அம்மெம்பால் சுப்பாராவ் பாய் என்பவரால் 1906-ம் ஆண்டு ஜூலை 1-ம் நாள் கனரா இந்து நிரந்தர நிதி என்ற பெயரில் மங்களூரில் இருந்த வங்கி பின்னர் 1910-ஆம் ஆண்டு கனரா வங்கி லிமிடட் என்கிற பெயரில் ஒருங்கிணைக்கப்பட்டது. 1958- இல் இந்திய ரிசர்வ் வங்கி ஹைதராபாத்தைச் சேர்ந்த ஜி. ரகுமத்முல் வங்கியை கையகப்படுத்தச் சொல்லி கனரா வங்கிக்கு உத்தரவிட்டது. 1870-இல் உருவாக்கப்பட்ட இவ்வங்கி 1925- இல் வரையரைக்குட்பட்ட நிறுவனமாக மாறியது. கையகப்படுத்தப்படும் சமயத்தில் இவ்வங்கி ஐந்து கிளைகளைக் கொண்டிருந்தது.
இந்திய அரசு 1969 ஜூலை 19 அன்று கனரா வங்கி உள்ளிட்ட 13 வர்த்தக வங்கிகளை தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளாக மாற்றியது. 1976-ல் கனராவங்கி தனது ஆயிரமாவது கிளையைத் திறந்தது. 1985- இல் மீட்பு நடவடிக்கையில் வட இந்தியாவில் செயல்பட்டு வந்த லஷ்மி வணிக வங்கியைக் கையகப்படுத்தியது இதன் மூலமாக கனரா வங்கிக்கு வட இந்தியாவிலும் 230 கிளைகள் பரவியது.