உள்ளடக்கத்துக்குச் செல்

சன் பார்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சன் பார்மா
வகைபொதுநிறுவனம்
நிறுவுகை1983
நிறுவனர்(கள்)திலீப் சங்வி
தலைமையகம்மும்பை, மகாராட்டிரம், இந்தியா
முதன்மை நபர்கள்இஸ்ரேல் மகோவ்
(தலைவர்)
திலீப் சங்வி
(மேலாண் இயக்குநர்)
தொழில்துறைமருந்து நிறுவனம்
உற்பத்திகள்மருந்துகள், ஜெனிரிக் மருந்துகள்
வருமானம் 166.33 பில்லியன் (US$2.1 பில்லியன்) (2013-14)[1]
இயக்க வருமானம் 71.1 பில்லியன் (US$890 மில்லியன்) (2013-14)[1]
நிகர வருமானம் 56.6 பில்லியன் (US$710 மில்லியன்) (2013-14)[1]
மொத்தச் சொத்துகள் 138.37 பில்லியன் (US$1.7 பில்லியன்) (2013-14)[1]
மொத்த பங்குத்தொகை 293.7 பில்லியன் (US$3.7 பில்லியன்) (2013-14)[1]
உரிமையாளர்கள்திலீப் சங்வி
பணியாளர்32,700 (மார்ச் 2015)[2]
இணையத்தளம்www.sunpharma.com

சன் பார்மா அல்லது சன் ஃபார்மாசிட்டிகல்ஸ் தொழிற்சாலைகள் நிறுவனம் (Sun Pharma, Sun Pharmaceuticals Industries Limited, முபச524715 , தேபசSUNPHARMA ), மும்பையைத் தலைமையிடமாகக் கொண்ட ஒரு பன்னாட்டு மருந்து நிறுவனமாகும். 1983 ஆம் ஆண்டு திலீப் சங்வியால் குஜராத் மாநிலத்திலுள்ள வாபி நகரில் துவங்கப்பட்டது. மும்பையை தலைமையிடமாகக் கொண்ட அந்நிறுவனம் தற்போது இதயவியல், நரம்பியல், இரையகக் குடயலியவியல் மற்றும் நீரிழிவு நோய்சர்க்கரை நோய்க்கான மருந்துகளை தயாரித்து வருகிறது. 2014 ஆம் ஆண்டு மற்றொரு மருந்து தயாரிக்கும் நிறுவனமான ரான்பாக்ஸியை வாங்கியது. இதனால் இந்நிறுவனம் நாட்டிலேயே மிகப்பெரிய மருந்துகள் உற்பத்தி செய்யும் நிறுவனமாக திகழ்கிறது.[3]

இந்நிறுவனத்தின் முக்கியமான சந்தைகள் இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகும். இந்நிறுவனத்தின் தற்போதைய மொத்த விற்பனை சுமார் $12 பில்லியன் ஆகும், இது 2015ன் இறுதியில் $20 பில்லியனை எட்டும் என்று அறிக்கைகள் கூறுகின்றன. சுமார் 26 தொழிற்சாலைகளில் மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன். இந்நிறுவனம் 1994 ஆம் ஆண்டு பங்குச்சந்தையில் பட்டியிலடப்பட்டது. தற்போது மிகவும் லாபகரமாக விளங்கும் மருந்து நிறுவனங்களில் இதுவும் ஒன்றாகும்[4]. இஸ்ரேல் மகோவ் இந்நிறுவனத்தின் தற்போதைய தலைவர் ஆவார்.

இந்நிறுவனத்தின் வளர்ச்சிக்கு மற்ற மருந்து தயாரிக்கும் நிறுவனங்களை விலைக்கு வாங்கி, அதன் மருந்துகளை சன் பார்மா பெயரில் விற்பது உதவி புரிந்தது. சன் ஃபார்மா 1996 ஆம் ஆண்டு க்னோல் ஃபார்மஸிட்டிகல்ஸ் மற்றும் எம்.ஜே ஃபார்மஸிட்டிகல்ஸை கைப்பற்றியது. கரகோ ஃபார்மஸிடிகல்ஸை கைப்பற்றியதன் மூலமாக அமெரிக்க மருந்து சந்தையில் நுழைந்தது. மேலும் சன் ஃபார்மா பல்வேறு மருந்து நிறுவனங்களோடு கூட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளது. 2010 ஆம் ஆண்டு டாரோ ஃபார்மஸிட்டிகல்ஸ் நிறுவனத்தில் சுமார் 67% பங்குகளை வாங்கியது.

2012 ஆம் ஆண்டு டுசா ஃபார்மஸிட்டிகல்ஸ் என்ற அமெரிக்க மருந்து தயாரிக்கும் நிறுவனத்தை வாங்கியது[5]. 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ரான்பாக்சி லேபாரட்டரிஸ் நிறுவனத்தைக் கைப்பற்ற போவதாக அறிவித்தது. சுமார் $4 பில்லியன் மதிப்புள்ள ரான்பாக்ஸியை சன் ஃபார்மா பங்குகள் வாயிலாக விலைக்கு வாங்கியது. இந்த பங்கு பரிவர்த்தனைக்குப் பிறகு அமெரிக்காவில் இயங்கும் மிகப்பெரிய இந்திய மருந்து நிறுவனமாக அறிவிக்கப்பட்டது சன் ஃபார்மா. உலகிலேயே 5 ஆவது மிகப்பெரிய ஜெனரிக் மருந்துகள் தயாரிக்கும் நிறுவனமாக திகழ்கிறது இந்நிறுவனம்[6].

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2015-03-16. பார்க்கப்பட்ட நாள் 2015-11-20.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2017-10-02. பார்க்கப்பட்ட நாள் 2015-11-20.
  3. "SUN PHARMACEUTICAL INDUS (SUNP:National Stock Exchange of India): Stock Quote & Company Profile - Businessweek". Businessweek.com. பார்க்கப்பட்ட நாள் 2 July 2015.
  4. "Crisil Ratings". Archived from the original on 2015-09-23. பார்க்கப்பட்ட நாள் 2015-11-20.
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2002-06-09. பார்க்கப்பட்ட நாள் 2015-11-20. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  6. "Corporate Website: Acquisitions". Archived from the original on 2011-08-10. பார்க்கப்பட்ட நாள் 2015-11-20.

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சன்_பார்மா&oldid=3850859" இலிருந்து மீள்விக்கப்பட்டது