தொழிற்றுறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தொழில்துறை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

தொழிற்றுறை (industry) என்பது கிடைக்கும் வள ஆதாரங்களுக்கேற்ப மனிதர்கள் ஈடுபடும் பொருளாதார நடவடிக்கைகளைப் பற்றிய துறை ஆகும். புவியில் மனிதர்களின் தொழிலைப் பல்வேறு இடங்களில் கிடைக்கும் வள ஆதாரங்களே தீர்மானிக்கின்றன. அவற்றுள் உணவு சேகரித்தல், வேட்டையாடுதல், மீன்பிடித்தல், சுரங்கத்தொழில், உதிரிப் பாகங்களை ஒன்றிணைத்தல், வணிகம் போன்ற பல தொழில்கள் அடங்கும். இத்தகைய தொழில்களால் மனிதர்கள் பயனை அடைகின்றனர். எனவே, இத்தகைய மனிதர்களின் நடவடிக்கைகள் பொருளாதார நடவடிக்கைகள் என அழைக்கப்படுகின்றன. பொருளாதார உற்பத்தியின் ஒரு பகுதியாகும். பல தொழிற்றுறைகளில் இலாபம் ஈட்டுவதற்கு முன் பெருமளவு பண முதலீடு தேவைப்படுகின்றது. மென்பொருள், ஆய்வு போன்ற துறைகளில் அறிவும் திறனும் முதலீடாகப் பயன்படுகின்றன.

தொழிற்றுறைகளை வகைப்படுத்தல்[தொகு]

தொழில்களை அவற்றின்ன் பரிணாம வளர்ச்சியின் அடிப்படையில்

 1. முதல் நிலைத்தொழில்கள்
 2. இரண்டாம் நிலைத்தொழில்கள்
 3. மூன்றாம் நிலைத்தொழில்கள்
 4. நான்காம் நிலைத்தொழில்கள்
 5. ஐந்தாம் நிலைத்தொழில்கள்

என வகைப்படுத்தலாம்.

முதன்மைத் தொழில்[தொகு]

முதன்மைத்தொழில்களில் மனிதர்கள் இயற்கை வள ஆதாரங்களோடு நேரிடையாக இணைந்து செயல்படுவர். இவற்றை பழைமையான தொழில்கள் என அழைக்கலாம்.இத்தொழில்களில் ஈடுபடுபவர்களை " சிவப்பு கழுத்துப்பட்டை பணியாளர்கள் " ( Red collar workers) என அழைக்கிறோம்.

 1. உணவு சேகரித்தல்
 2. வேட்டையாடுதல்
 3. மரம் வெட்டுதல்
 4. வேளாண்மை
 5. மீன்பிடிப்பு
 6. சுரங்கத் தொழில்
 7. காடுகள் பராமரிப்பு

இரண்டாம்நிலை தொழில்[தொகு]

மனிதகள் மூலப்பொருள்களை உற்பத்தி முறைகளுக்கு உட்படுத்தி அவற்றை முடிவுற்ற பொருளாக மாற்றுவதன் மூலம் மூலப்பொருள்களின் பயன்பாட்டினையும், மதிப்பினையும் பெருக்குகின்றனர் இந்த உற்பத்தித் தொழில்கள் இரண்டாம் நிலைத்தொழில்கள் என அழைக்கப்படுகின்றன. இரண்டாம் நிலைத்தொழில் புரியும் பணியாளர்கள் "நீல கழுத்துப்பட்டை தொழிலாளர்கள்" (Blue collar workers) என அழைக்கப்படுகின்றனர்.

 1. உற்பத்தி
 2. கட்டுமானம்

மூன்றாம் நிலைத் தொழில்[தொகு]

இரண்டாம் நிலைத் தொழில்களின் வளர்ச்சியை மேம்படுத்தும் தொழில்கள் மூன்றாம் நிலைத் தொழில்கள் ஆகும் தொழில் ந்ட்பத்தில் சிறப்பு மிக்க தொழில் நுட்பப் பணியாளர்களும், வங்கிப் பணியாளர்களும் மூன்றாம் நிலைத் தொழில் புரிவோர் ஆவர்.இவர்கள் "வெளிர் சிவப்புக் கழுத்துப்பட்டைப் பணியாளர்கள்" ( pink collar workers ) என அழைக்கப்படுகின்றனர்.

 1. வணிகம்
 2. போக்குவரத்து
 3. தகவல் தொடர்பு சேவைகள்

நான்காம் நிலைத் தொழில்[தொகு]

தனித்தன்மை கொண்ட சூழல்களில் பணிபுரிவோர் நான்காம் நிலைத்தொழிலாளர்கள் என அழைக்கப்படுவர். பொதுவாக இத்தொழில்கள் நகரங்களில் அதிகம் காணப்படுகின்றன. இவர்கள் வெள்ளை கழுத்துப்பட்டை தொழிலாளர்கள் (White collar workers ) என அழைக்கப்படுகிறார்கள்.

 1. மருத்துவம்
 2. சட்டம்
 3. கல்வி
 4. பொழுது போக்கு
 5. கேளிக்கை
 6. நிர்வாகம்
 7. ஆய்வு மற்றும் வளர்ச்சி

ஐந்தாம் நிலைத்தொழில்[தொகு]

ஆலோசனை வழங்குவோர் மற்றும் திட்டமிடுவோர் போன்ற உயர் நிலையில் உள்ளவர்கள் இவ்வகையில் அடங்குவர். இவர்கள் தங்க கழுத்துப்பட்டை பணியாளர்கள் ( Gold collar workers )என அழைக்கப்படுவர்.

வளர்ந்து வரும் நாடுகளில் முதல் மற்றும் இரண்டாம் நிலைத் தொழில்களிலும், வளர்ச்சியடைந்த நாடுகளில் மூன்று, நான்கு மற்றும் ஐந்தாம் நிலைத்தொழில்களிலும் மக்கள் ஈடுபடுகின்றனர்.

வரலாறு[தொகு]

தொழில்துறை, தொழிற்புரட்சியின் போது, ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க நாடுகளில் முக்கிய துறையாக உருவானது. இது முந்தைய வணிக, நிலப்பிரபுத்துவப் பொருளாதார முறைமைகளைப் பல்வேறு விரைவான தொழில்நுட்ப முன்னேற்றங்களினால் நிலைகுலைய வைத்தது. நீராவி இயந்திரங்கள், மின்தறிகள், உருக்கு நிலக்கரி பெரும்படித் தயாரிப்பு, என்பன இவ்வாறான தொழில்நுட்பங்களுள் சிலவாகும். இரயில் பாதைகளும், நீராவிக் கப்பல்களும், முந்திய காலங்களில் நினைத்துப்பார்க்க முடியாத அளவு தூரத்திலிருந்தது. உலகம் தழுவிய சந்தை வாய்ப்புக்களை ஒருங்கிணைத்ததால், தனியார் நிறுவனங்கள் முன்னெப்பொழுதும் இல்லாதவாறு எண்ணிக்கையிலும், செல்வத்திலும் வளர்ச்சியடைந்தன. தொழிற்புரட்சிக்குப் பின்னர், உலகப் பொருளாதார உற்பத்தியின் மூன்றிலொரு பங்கு அளவு, தொழில் துறையிலிருந்தே பெறப்பட்டது. இது விவசாயத்துக்கான உற்பத்திப் பங்கை விடக் குறைவானதாகும். ஆனால், இப்பொழுது சேவைத் துறையின் பங்கு, தொழில் துறையின் பங்கிலும் அதிகமாகும்.

சமூகம்[தொகு]

ஒரு தொழில்துறை சமூகத்தைப் பல வழிகளில் வரையறுக்க முடியும். இன்று, தொழிற்துறை பெரும்பாலான சமூகங்கள் மற்றும் நாடுகளின் ஒரு முக்கிய பகுதியாக உள்ளது. ஒரு அரசாங்கமானது தொழில்துறை வேலை வாய்ப்பு, தொழில்துறை மாசடைதல், நிதி மற்றும் தொழில்துறைத் தொழிலாளர்களைக் கட்டுப்படுத்தும், தொழில்துறைக் கொள்கைகள் சிலவற்றைக் கொண்டிருக்க வேண்டும்.

தொழில்துறைத் தொழிலாளர்[தொகு]

ஒரு தொழில்துறை சமுதாயத்தில், தொழிற்துறைத் தொழிலாளர்கள் முழு அங்கத்தவர்களில் ஒரு முக்கிய பகுதியாக உள்ளனர். இது உற்பத்தி துறையிலும் பொதுவாகக் காணப்படுகின்றது. தொழிலாளர் சங்கம் என்பது சம்பளம், வேலைசெய்யும் மணிநேரம், மற்றும் வேலை நிலைமைகள் போன்ற முக்கிய பகுதிகளில் பொதுவான இலக்குகளைக் கொண்டுள்ள தொழிலாளர்களின் அமைப்பாகும்.

உலகில் தொழில்துறையின் பரம்பல்[தொகு]

== தொழில் துறைகளும், பிரபல தொழில் நிறுவனங்களும் ==

தொழில்துறை உற்பத்தியின் அடிப்படையில் நாடுகள் பட்டியல்[தொகு]

சர்வதேச நாணய நிதியத்தின் கருத்துப்படி சந்தை மாற்று விகிதத்தில் தொழில்துறை உற்பத்தியில் மூலம் பெரிய நாடுகள், 2013
Economy
2013 ஆம் ஆண்டில் சந்தை மாற்று விகிதத்தில் தொழில்துறை உற்பத்தியில் அடிப்படையில் நாடுகள் (பில்லியன் கணக்கான அமெரிக்க டாலர்)
 ஐரோப்பிய ஒன்றியம்
4
(01)  சீனா
4
(02)  அமெரிக்கா
3
(03)  சப்பான்
1
(04)  செருமனி
1
(05)  உருசியா
762
(06)  பிரேசில்
576
(07)  ஐக்கிய இராச்சியம்
523
(08)  கனடா
520
(09)  பிரான்ஸ்
515
(10)  இத்தாலி
501
(11)  தென் கொரியா
477
(12)  சவூதி அரேபியா
466
(13)  இந்தியா
530
(14)  மெக்சிக்கோ
454
(15)  இந்தோனேசியா
408
(16)  ஆத்திரேலியா
406
(17)  எசுப்பானியா
358
(18)  துருக்கி
222
(19)  ஐக்கிய அரபு அமீரகம்
218
(20)  நோர்வே
216
உலகின் ஏனைய நாடுகள்
5

The twenty largest countries by industrial output at market exchange rates in 2013, according to the IMF and CIA World Factbook

"https://ta.wikipedia.org/w/index.php?title=தொழிற்றுறை&oldid=2143469" இருந்து மீள்விக்கப்பட்டது