தொழில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பணி அல்லது தொழில் என்பது ஒருவருடைய வாழ்வாதாரத்திற்கு, வருமானம் ஈட்டக்கூடிய செயல். இதனை உத்தியோகம் அல்லது அலுவல் என்றும் கூறுவர். ஒருவர் பணம் அல்லது சேவை மனப்பான்மை அல்லது இரண்டிற்குமான தம்முடைய உழைப்பை பகுதி நேரமாகவோ அல்லது முழு நேரமாகவோ செலவு செய்தல் தொழில் எனப்படும்.

ஒருவர் செய்யும் தொழிலை அடிப்படையாகக் கொண்டு, அவருடைய சமூக-நிலை(Social Status) நிர்ணயிக்கப்படுகிறது. மாணவர்கள், ஓய்வு பெற்றவர்கள், இல்லத்தரசிகளை தவிர்த்து, பெரும்பாலான மக்கள் தம்முடைய தொழிலுக்காக அதிக நேரத்தைச் செலவு செய்கின்றனர்.

தொழிலின் பிரிவுகள்[தொகு]

முழு நேரத் தொழில், பகுதி நேரத் தொழில், தற்காலிகத் தொழில், சுயவேலை வாய்ப்பு உள்ளிட்ட பல வகையான தொழில்கள் உள்ளன. தம்முடைய துறையை தமது படிப்புக்கு எற்றவாறு தேர்ந்தெடுக்கின்றனர் அல்லது, தொழிலுக்குத் தேவையானவற்றைக் கற்றுக் கொள்கின்றனர்.

அரசு பணி[தொகு]

மத்திய அல்லது மாநில அரசுத்துறை சார்ந்த தொழில்கள் வருமானம் மட்டுமின்றி பிற சலுகைகளையும் தம்முடைய ஊழியர்களுக்கு வழங்குகிறது.

மேலும் பார்க்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தொழில்&oldid=3391256" இருந்து மீள்விக்கப்பட்டது