கல்கத்தா வங்கி
நிலை | பம்பாய் வங்கி, மதராஸ் வங்கியுடன் இணைக்கப்பட்டது. |
---|---|
பிந்தியது | இந்திய இம்பீரியல் வங்கி |
நிறுவுகை | 2 சூன் 1806 |
செயலற்றது | 27 சனவரி 1921 |
தலைமையகம் | கல்கத்தா, வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியா |
சேவை வழங்கும் பகுதி | பிரித்தானிய இந்தியா |
தொழில்துறை | வங்கித்தொழில், நிதிச் சேவைகள் |
கல்கத்தா வங்கி (தற்போதைய பாரத ஸ்டேட் வங்கியின் முன்னோடி) 1806 சூன் 2இல், ரிச்சர்டு வெல்லீசுலி என்பவரால் தொடங்கப்பட்ட வணிக வங்கியாகும். மராத்தா, திப்பு சுல்தான் ஆகியோருக்கு எதிரான போருக்கு தேவையான நிதியை திரட்டுவதற்காகவே இவ்வங்கி நிறுவப்பட்டது. இதுவே இந்தியாவில் தொடங்கப்பட்ட முதலாவது வங்கியாகும். இவ்வங்கி, 1809 சனவரி 2 அன்று வங்காள வங்கி என பெயர்மாற்றம் செய்யப்பட்டது.
கிளைகள்
[தொகு]வங்காள வங்கி, ரங்கூன் (1861), பாட்னா (1862), மிர்சாபுர் (1862), பெனாரசு (1862) ஆகிய இடங்களில் தனது கிளைகளைத் துவங்கியது. 1862ஆம் ஆண்டில் டாக்காவில் இயங்கிய டாக்கா வங்கியை (தொடக்கம் 1846) தன்னுடன் இணைத்துக் கொண்டு தனது கிளையைத் தொடங்கியது.[1] தொடர்ந்து கான்பூரில் தனது அடுத்த கிளையைத் தொடங்கியது.
இணைப்பு
[தொகு]1921 சனவரி 27 அன்று இவ்வங்கியும், இதர இரு மாகாண வங்கிகளான மதராஸ் வங்கி, பம்பாய் வங்கியுடன் இணைக்கப்பட்டு இந்திய இம்பீரியல் வங்கி என்ற புதிய வங்கி தொடங்கப்பட்டது. இந்திய வங்கிகளை கட்டுப்படுத்தி நெறிப்படுத்தும் இந்திய நடுவன் வங்கியான பாரத ரிசர்வ் வங்கி, இந்திய இம்பீரியல் வங்கியை பாரத ஸ்டேட் வங்கி என 1955 ஏப்ரல் 30 அன்று பெயர் மாற்றம் செய்தது.
மேற்கோள்களும் சான்றுகளும்
[தொகு]- மேற்கோள்கள்
- ↑ Banker's Magazine, Vol. 22, p.565-6.
- சான்றுகள்
- http://www.tribuneindia.com/2005/20050626/spectrum/main1.htm 200 years and going strong, The Tribune. Accessed 2006-09-08.
மேலும் காண்க
[தொகு]- The Evolution of the State Bank of India, Volume 1 — The Roots 1806-1876 by Amiya Kumar Bagchi [1]