சௌத் இந்தியன் வங்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சௌத் இந்தியன் வங்கி வரையறுக்கப்பட்டது
வகைதனியார் நிறுவனம்
BSE & NSE
நிறுவுகை1929
தலைமையகம்திரிச்சூர், கேரளா, இந்தியா
முதன்மை நபர்கள்வி.ஜி. மாதவ்,
(மேலாண்மை இயக்குநர் & முதன்மை செயல் அதிகாரி)
தொழில்துறைவங்கித்தொழில்
நிதிச் சேவைகள்
காப்பீடு
மூலதனச் சந்தைகள்
உற்பத்திகள்கடன்கள், சேமிப்புகள், investment vehicles, insurance etc.
வருமானம் 26.4270 பில்லியன்
இணையத்தளம்www.southindianbank.com

சௌத் இந்தியன் வங்கி (South Indian Bank, BSE: 532218, NSE: SOUTHBANK) இந்தியாவில் செயற்பட்டுவரும் தனியார்த் துறையைச் சார்ந்த வைப்பகம் ஆகும். இது இந்தியாவின் கேரள மாநிலத்தின் திரிச்சூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயற்பட்டு வருகிறது. சௌத் இந்தியன் வங்கி தனது 828 கிளைகள், 4 சேவை மையங்கள், 27 விரிவாக்க மையங்கள், 20 மண்டல அலுவலகங்களுடன் இந்தியாவின் 26 மாநிலங்களிலும், 3 ஒன்றியப் பகுதிகளிலும் செயற்பட்டு வருகிறது. இவ்வைப்பகத்திற்கு இந்தியா முழுவதும் 1244 தானியங்கிப் பணவழங்கிகளும், 3 தானியங்கிப் பணம் செலுத்தும் பொறிகளும் செயற்படுகின்றன.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. southindianbank.com
  2. "About us". South Indian Bank Ltd. பார்க்கப்பட்ட நாள் 2010-02-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சௌத்_இந்தியன்_வங்கி&oldid=3679115" இலிருந்து மீள்விக்கப்பட்டது