ஆக்சிஸ் வங்கி
![]() |
|
வகை | பொது |
---|---|
நிறுவுகை | அகமதாபாத், 1994. |
தலைமையகம் | மும்பை, இந்தியா |
முக்கிய நபர்கள் | சீக்கா சர்மா, மேலாண் இயக்குனர் & முதன்மை செயல் அதிகாரி |
தொழில்துறை | வங்கி வணிக வங்கிகள் |
பணியாளர் | 13,389 (2007)[1] |
இணையத்தளம் | ஆக்சிஸ் வங்கி வலைத்தளம் |
ஆக்சிஸ் வங்கி (முபச: 532215 , வார்ப்புரு:LSE) முன்பு யுடிஐ வங்கி என அறியப்பட்டது, இந்தியாவில் தாராளமயக் கொள்கையின்படி 1994ஆம் ஆண்டு பாரத ரிசர்வ் வங்கி தனியார்துறையில் புதிய வங்கிகளை அனுமதித்தப் பிறகு நிறுவப்பட்ட முதல் வங்கியாகும். இந்த வங்கியை யுனிட் டிரஸ்ட்டின் சிறப்பு நிர்வாகி (UTI-I), இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (LIC) பொது காப்பீட்டுக் கழகம், தேசிய காப்பீட்டுக் கழகம், நவ இந்தியா காப்பீட்டுக் கழகம், ஓரியண்டல் காப்பீட்டுக் கழகம் மற்றும் யுனைடட் காப்பீட்டுக் கழகம் ஆகியன இணைந்து உருவாக்கின. இந்த வங்கியின் பெயர் ஏப்ரல் 2007ஆம் ஆண்டு யுடிஐ பெயருள்ள பிற அமைப்புக்களுடனான குழப்பத்தை நீக்க ஆக்சிஸ் வங்கி என மாற்றப்பட்டது.[2] 20 ஏப்ரல் 2009 அன்று முன்னாள் ஐசிஐசிஐ வங்கியின் பெண் அதிகாரி சீக்கா சர்மா வங்கியின் முதன்மை செயல் அதிகாரியாக பொறுப்பேற்றுக்கொண்டார்.[3]
மார்ச் 31,2009 கணக்குப்படி வங்கிக்கு மொத்த சொத்து மதிப்பு ரூ.13,745.04 கோடியாகவும் நிகர இலாபம் ரூ.1,812.93 கோடியாகவும் இருந்தது.
இந்தியாவின் முதல் நான்கு பெரிய வங்கிகள் பட்டியலில் பாரத ஸ்டேட் வங்கி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் எச்டிஎஃப்சி வங்கி யுடன் இடம் பெற்றுள்ளது.
கிளைகள் பரவல்[தொகு]
அக்டோபர் 2009 நிலவரப்படி, ஆக்சிஸ் வங்கிக்கு 925 கிளைகள் மற்றும் 3900 தானியங்கி பணவழங்கிகள் உள்ளன.
இந்த வங்கி ஐசிஐசிஐ வங்கி, எச்டிஎஃப்சி வங்கி இவற்றைப் போலல்லாமல் தனது கடன்களை பெரும் நிறுவனங்களுக்கே கொடுத்து வருகிறது. கூடுதல் வட்டி கிடைக்கக்கூடிய தனிநபர் வங்கி சேவைகளை குறைத்து வருகிறது. இருப்பினும் மற்ற வங்கிகளுக்கிணையான வட்டி இலாபத்தை தனது சீர்மையான செயல்திறனால் காட்டி வருகிறது.[4]