சிகா சர்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிகா சர்மா
பிறப்பு19 நவம்பர் 1958 (அகவை 64)
இந்தியா
படித்த இடங்கள்

சிகா சர்மா (Shikha Sharma 19 நவம்பர் 1958) வங்கி நிருவாகி ஆவார். இந்தியாவின் தனியார் வங்கிகளின் மூன்றாவது பெரிய வங்கியான ஆக்சிஸ் வங்கியின் தலைவரும் மேலாண்மை இயக்குநரும் ஆவார்.[1]

இளமைக் காலம்[தொகு]

சிகா சர்மாவின் தந்தை படை அதிகாரியாகப் பணி புரிந்ததால் பல ஊர்களுக்குச் சென்றார். எனவே அந்த ஊர்களில் இருக்கும் பள்ளிகளில் சிகா சர்மா கல்வி கற்றார். பின்னர் தில்லியில் உள்ள சிறீராம் பெண்கள் கல்லூரியில் பொருளியலில் இளங்கலைப் படிப்பும் ஆமதாபாத் இந்தியன் மேலாண்மை நிறுவனத்தில் எம்பிஏ படித்தும் பட்டம் பெற்றார். மென்பொருள் தொழில் நுட்பத்தில் முதுகலைப் பட்டமும் இவர் பெற்றார்.

பணிகள்[தொகு]

  • 1980 ஆம் ஆண்டில் ஐசிஐசிஐ வங்கியில் பணியில் சேர்ந்தார்.
  • 1992 இல் ஐசிஐசிஐ செக்குரிடீஸ் குழுமத்தைத் தொடங்கினார்.
  • ஐசிஐசிஐ புருடென்சியல் வாணாள் காப்பீட்டுக் கழகத்தில் இயக்குநராக 2009 வரை பொறுப்பில் இருந்தார்.
  • 2009 சூன் முதல் ஆக்சிஸ் வங்கியின் மேலாண்மை இயக்குநராகவும் முதன்மைச் செயல் அதிகாரியாகவும் இருந்து வருகிறார்.

மேலும் பார்க்க[தொகு]

http://economictimes.indiatimes.com/markets/expert-view/we-need-to-make-sure-that-customers-are-not-starved-of-daily-cash-needs-shikha-sharma/articleshow/55327960.cms

சான்றாவணம்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிகா_சர்மா&oldid=2734413" இருந்து மீள்விக்கப்பட்டது