ஐக்கிய இந்தியா காப்பீட்டு நிறுவனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐக்கிய இந்தியா காப்பீடு நிறுவனம்.
வகைபொதுத்துறை
நிறுவுகை18 பெப்ரவரி 1938; 86 ஆண்டுகள் முன்னர் (1938-02-18)
தலைமையகம்சென்னை, இந்தியா
அமைவிட எண்ணிக்கை2248
சேவை வழங்கும் பகுதிஇந்தியா
முதன்மை நபர்கள்கிரீசு இராதாக்கிருடிணன் (தலைவர் மற்றும் இயக்குனர்)
தொழில்துறைபொதுக் காப்பீடு , நிதிச் சேவைகள்
உற்பத்திகள்இயந்திரக் காப்பீடு, சுகாதாரக் காப்பீடு, தீக்காப்பீடு ,கடல் காப்பீடு, கிராமப்புற காப்பீடு ,தனிமனித விபத்துக் காப்பீடு
இயக்க வருமானம்300 கோடிகள்
உரிமையாளர்கள்இந்திய அரசு
பணியாளர்17,361

ஐக்கிய இந்தியா காப்பீட்டு நிறுவனம் (United India Insurance Company) என்பது ஓர் இந்திய முன்னணி பொது காப்பீட்டு நிறுவனமாகும். இந்நிறுவனம் முழுக்க முழுக்க இந்திய அரசுக்கு சொந்தமானது ஆகும். இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இந்நிறுவனம் செயல்படுகிறது [1]. இந்நிறுவனம் 1938 ஆம் ஆண்டு பிப்ரவரி 18 ஆம் தேதி இணைக்கப்பட்டு 1972 ஆம் ஆண்டு தேசியமயமாக்கப்பட்டது. ஒட்டு மொத்தமாக இந்நிறுவனத்தில் 17361 பணியாளர்கள் பல்வேறு நிலைகளில் பணிபிரிந்து வருகிறார்கள்.

இக்காப்பீட்டு நிறுவனம் முன்னதாக இந்திய பொதுக் காப்பீட்டுக் கழகத்தின் துணை நிறுவனமாக இருந்தது.1999 ஆம் ஆண்டின் இந்தியக் காப்பீடு ஒழுங்காற்று மற்றும் வளர்ச்சி முகமை எனப்படும் ஐ.ஆர்.டி.ஏ சட்டத்தின் படி பொதுக்காப்பீட்டு நிறுவனம் மறு காப்பீட்டு நிறுவனமாக மாறியது. இதன் நான்கு முதன்மை காப்பீட்டு துணை நிறுவனங்களான நியூ இந்தியா உறுதிதிட்டம், ஐக்கிய இந்தியா காப்பீடு, கிழக்கத்திய காப்பீடு மற்றும் தேசிய காப்பீடு போன்ற நிறுவனங்கள் தன்னாட்சி அதிகாரம் பெற்றன [2][3][4].

பன்னிரண்டு இந்திய காப்பீட்டு நிறுவனங்கள், நான்கு கூட்டுறவு காப்பீட்டு சங்கங்கள் மற்றும் ஐந்து வெளிநாட்டு காப்பீட்டாளர்கள் இந்திய இயக்கங்கள் மற்றும் இந்திய ஆயுள் காப்பீட்டு கழகத்தின் தென் மண்டல அமைப்புகளுடன் சேர்த்து ஐக்கிய இந்தியா காப்பீட்டு நிறுவனக் குழுமத்துடன் இணைத்து இந்த நிறுவனத்தை உருவாக்கின. தேசிய மயமாக்கப்பட்ட பின்னர் ஐக்கிய இந்தியாவில் 17361 என்ற எண்ணிக்கையில் கிளைகள் இருந்தன. 2248 அலுவலகங்கள் நாடு முழுவதும் பரவிக்கிடந்தன. 10 மில்லியனுக்கும் அதிகமான காப்பீட்டு சந்தாதார்ர்களுக்கு ஆயுள் காப்பீட்டு வசதியை இவ்வலுவலகங்கள் வழங்கி சேவைபுரிந்தன. பல்வேறு வகையான காப்பீட்டு வகைகளும் இதில் உள்ளடங்கும்.

ஐக்கிய இந்தியா காப்பீட்டு நிறுவனம் பல்வேறு வகையான சிக்கலான காப்பீட்டு திட்டங்களை அதிகமான வாடிக்கையாளர்களுக்காக வடிவமைத்து செயல்படுத்துவதில் முன்னணியில் உள்ளது. எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம், இராச்சீவ் காந்தி பன்னாட்டு வானூர்தி நிலைய நிறுவனம், ஐதராபாத்து, மும்பை பன்னாட்டு வானூர்தி நிலைய நிறுவனம், திருமலை- திருப்பதி தேவசுதானம், கொச்சி மெட்ரோ இரயில் நிறுவனம் போன்ற நிறுவனங்களில் இத்திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்திய அரசாங்கத்தின் உலக சுகாதார நிறுவனக் காப்பீட்டுத் திட்டத்தை மிகப்பெரிய அளவில் செயல்படுத்தி கிராமப்புற மக்களுக்கு காப்பீட்டை எடுத்துச் செல்வதில் ஐக்கிய இந்தியா நிறுவனம் ஒரு முன்னோடி நிறுவனமாகச் செயல்படுகிறது. மேலும், மத்தியப்பிரதேசத்தில் 450000 மில்லியன் பெண்களை சென்று அடைந்த விஜயா ராஜி ஜணனி கல்யான் யோச்சனா திட்டம், நான்கு மாநிலங்களில் 459000 குடும்பங்களை உள்ளடக்கிய சுனாமி சான் பீமா யோச்சனா திட்டம், தேசிய கால்நடை காப்பீட்டுத் திட்டம் போன்றவை வெற்றி பெற்ற திட்டங்களில் சிலவாகும்.

2018-2019 ஆம் ஆண்டுக்கான மொத்த உள்நாட்டு காப்பீட்டுத் தொகை அளவு 16385 கோடி ரூபாயாகும்.

2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2 ஆம் நாள் இந்திய அரசாங்கம் ஐக்கிய இந்தியா காப்பீட்டு நிறுவனத்துடன் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான ஓரியண்டல் காப்பீடு மற்றும் தேசிய காப்பீட்டு நிறுவனத்துடன் ஒருங்கிணைப்பு அறிவிப்பை வெளியிட்டது [5].

நிறுவன அமைப்பு[தொகு]

அலுவலகங்கள் பெயர்கள் எண்.
தலைமை அலுவலகம் 1
பெறுநிறுவன கற்றல் மையம் 1
மண்டல அலுவலகங்கள் 30
பெறுநிறுவன மற்றும் தரகர்கள் பிரிவு 8
பிரதேச அலுவலகங்கள் 432
அலுவலகங்கள் 677
அலுவலகங்கள் 1034
சேவை மையங்கள் 67
மொத்தம் 2248
மொத்த அலுவலர்கள் (தோராயமாக)
வகுப்பு I வகுப்பு II வகுப்பு III வகுப்பு IV மொத்தம்
4834 1953 8158 2416 17361

மேற்கோள்கள்[தொகு]

  1. India, Bank Exams. "United India Insurance to Start AO Recruitment Soon". பார்க்கப்பட்ட நாள் 31 May 2016.
  2. Bengal, Government of West. "United India Insurance Company, Ltd". uiic.co.in. பார்க்கப்பட்ட நாள் 31 May 2016.
  3. "Nationalization". Archived from the original on 2021-08-12. பார்க்கப்பட்ட நாள் 2019-10-12.
  4. "Government Insurance Companies in India – Nationalization and After (United India, National Insurance, LIC, GIC, Oriental Insurance, New India Assurance) | Green World Investor". www.greenworldinvestor.com. பார்க்கப்பட்ட நாள் 31 May 2016.
  5. http://www.moneycontrol.com/news/business/economy/budget-2018-merging-3-psu-general-insurers-is-prudent-says-national-insurance-cmd-2497271.html

புற இணைப்புகள்[தொகு]