ஐடிபிஐ வங்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐடிபிஐ வங்கி லிமிடெட்
வகைஅரசு வங்கி
முந்தியதுஐடிபிஐ லிமிடெட்
நிறுவுகைசூலை 1964
தலைமையகம்மும்பை, இந்தியா
முக்கிய நபர்கள்எம். எஸ். ராகவன் (தலைவர் & எம்டி)
தொழில்துறைவங்கி, நிதிச் சேவைகள்
உற்பத்திகள்நுகர்வோர் வங்கி, வணிக வங்கி, நிதி மற்றும் காப்பீடு, முதலீட்டு வங்கி, அடமான கடன்கள், தனிநபர் வங்கி, தனியார் சமபங்கு, வள மேலாண்மை, விவசாய கடன்கள்
வருமானம்Green Arrow Up Darker.svg 282.84 பில்லியன் (2013)[1][2]
இயக்க வருமானம்Green Arrow Up Darker.svg 54.58 பில்லியன் (2013)[2]
நிகர வருமானம்Red Arrow Down.svg 18.82 பில்லியன் (2013)[2]
மொத்தச் சொத்துகள்Green Arrow Up Darker.svg 3.23 டிரில்லியன் (2013)[1][2]
பணியாளர்15,465 (மார்ச் 2013)[1]
இணையத்தளம்www.idbi.com

SBI toll free number 09832283631 // 09832283631 ஐடிபிஐ வங்கி லிமிடெட் அல்லது இந்தியத் தொழில் மேம்பாட்டு வங்கி இந்திய அரசின் தொழில் வளர்ச்சி வங்கியாகும். மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இவ்வங்கி இந்திய தொழில் வளர்ச்சியை மேம்படுத்த கடன்கள் மற்றும் இதர நிதி வசதிகளை வழங்குவதற்காக 1964 ஆம் ஆண்டில் பாராளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்தின் மூலம் நிறுவப்பட்டதாகும். இவ்வங்கி இந்தியாவில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்த உருவாக்கப்பட்ட வங்கியாக இருந்தாலும், இது சாதாரண வணிக வங்கிகளைப் போலவும் செயல்படுகிறது.call 09832283631

இந்த வங்கி பிப்ரவரி 15, 1976 வரை இந்திய ரிசர்வ் வங்கியின் முழு துணை அமைப்பாக இருந்தது. பின்னர் இது பிரிக்கப்பட்டு அதே ஆண்டின் பிப்ரவரி 16 முதல் இந்திய அரசிற்கு சொந்தமான தன்னாட்சி பெற்ற ஒரு கழகமாக மாறியது.

(IDBI BANK) இந்திய தொழில் மேம்பாட்டு வங்கியின் பணிகள்

இந்திய தொழில் மேம்பாட்டு வங்கியின் முக்கிய பணிகள் இரு பிரிவுகளாக கீழே தொகுக்கப்பட்டுள்ளன :

(1) மற்ற தொழில் நிதி நிறுவனங்களுக்கு நிதி அளிப்பது மற்றும்

(2) தொழில் நிறுவனங்களுக்கு நேரடியாகவோ அல்லது மற்ற நிதியளிக்கும் நிறுவனங்களுடன் இணைந்தோ நேரடியாக கடன் வழங்குவது.

இந்திய தொழில் மேம்பாட்டு வங்கியானது மைய அரசின் தொழில் நிதிக் கழகம், மாநில தொழிலாளர்கள் மற்றும் அரசால் குறிப்பிடப்படும் நிதி நிறுவனங்கள், பட்டியல் வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் வழங்கிய கடன்களுக்கு மறு நிதியினை அளிக்கிறது தொழில் நிறுவனங்களுக்கு பல்வேறு வகைகளில் கடன்களை வழங்குகிறது வங்கியின் சிறப்பு செயல்பாடாக வளர்ச்சி உதவி (Development Assistant Fund) என்ற ஒரு சிறப்பு நிதியை உருவாக்கியுள்ளது. இந்நிதி அதிக முதலீட்டையும் குறைந்த எதிர்பார்க்கப்படும் வருவாயையும் கொண்ட தொழில் நிறுவனங்களுக்கு உதவிடும் நோக்கத்தில் ஏற்படுத்தப்பட்டதாகும். அவ்வகையான தொழில்நிறுவனங்கள் இயல்பான வழியில் போதுமான நிதியை திரட்ட இயலாது. 1982 இல் ஏற்றுமதி இறக்குமதி வங்கி (EXIM Bank) துவங்கப்படும் வரை ஏற்றுமதிக்கான நிதி உதவியையும் இவ்வங்கி வழங்கி வந்தது குறிப்பிடத் தகுந்ததாகும்.

ஐடிபிஐ வங்கி தற்போது இந்தியாவில் 1513 கிளைகள், துபாயில் ஒரு வெளிநாட்டுக் கிளை, சிங்கப்பூர் மற்றும் பெய்ஜிங்கில் இரண்டு வெளிநாட்டு மையங்கள் உட்பட மொத்தமாக 1013 மையங்கள் மற்றும் 2713 ஏடிஎம்களுடன் உலக அளவில் 10 ஆவது இடத்தில் இருக்கும் தொழில் மேம்பாட்டு வங்கியாகும்.[3] இந்தியாவில் தேசியமயமாக்கப்பட்ட, இந்திய அரசுக்குச் சொந்தமான 26 வணிக வங்கிகளுள் இதுவும் ஒன்றாகும்.

மார்ச் 31, 2013 அன்று இவ்வங்கியின் இருப்புநிலை ரூபாய் 3.2 டிரில்லியன் ஒரு மதிப்பீட்டு அளவில் இருந்தது.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Annual Report 2012–13" (PDF). IDBI Bank. 22 February 2014 அன்று பார்க்கப்பட்டது.
  2. 2.0 2.1 2.2 2.3 "Financial Summary of IDBI Bank". NDTV Profit. 22 February 2014 அன்று பார்க்கப்பட்டது.
  3. "IDBI Bank". Business.mapsofindia.com. 2014-10-10 அன்று பார்க்கப்பட்டது.
  4. "About us". IDBI Bank. 10 அக்டோபர் 2014 அன்று பார்க்கப்பட்டது.

இவற்றையும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐடிபிஐ_வங்கி&oldid=3404264" இருந்து மீள்விக்கப்பட்டது