எச்டிஎஃப்சி வங்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
எச்டிஎஃப்சி வங்கி லிமிடட்.
வகைபொது (BSE 500180, NyseHDB)
நிறுவுகை1994
நிறுவனர்(கள்)தீபக் பரேக்
தலைமையகம்மும்பை, இந்தியா
தொழில்துறைவங்கி
காப்புறுதி
மூலதனச் சந்தைகள் மற்றும் தொடர்புள்ள தொழில்கள்
உற்பத்திகள்நிதி சேவைகள்[1]
இணையத்தளம்எச்டிஎஃப்சி.கொம்

எச்டிஎஃப்சி வங்கி லிமிடட். (முபச500180 , தேபசHDFCBANK , நியாபசHDB) இந்தியாவில் தாராளமயமாக்கல் கொள்கையின்படி பாரத ரிசர்வ் வங்கி தனியார்துறையில் வங்கிகள் திறக்க அனுமதித்தப்பிறகு 1994ஆம் ஆண்டு ஆகத்து திங்கள் நிறுவப்பட்ட ஓர் வணிக வங்கியாகும். இந்தியாவில் 1977ஆம் ஆண்டு நிறுவப்பட்ட முதன்மையான வீட்டுக்கடன் நிறுவனமான வாழ்விட மேம்பாடு நிதி நிறுவனத்தால்(Housing Development Finance Corporation) முன்னெடுக்கப்பட்டது. 1995 சனவரி திங்கள் முதல் முறையான வணிக வங்கியாக செயல்பட துவங்கியது. இவ்வங்கிக்கு 1506 கிளைகளும், 3573 தானியங்கி பணவழங்கிகளும் 635 ஊர்களில் பரவியுள்ளது[2]. இவையனைத்தும் நிகழ்நேர அடிப்படையில் இணைக்கப்பட்டுள்ளன. செப்டம்பர் 30, 2008 அன்றைய தகவல்படி வங்கியின் மொத்த சொத்து ரூ.1006.82 பில்லியனாக இருந்தது.[3] 2008-09 நிதியாண்டில் நிகர இலாபமாக ரூ.2244.9 கோடி காட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டைவிட 41% கூடுதலாகும். மொத்த வருமானம் 58% உயர்ந்து ரூ.19,622.8 கோடியாக இருந்தது.[4]


எச்டிஎப்சி வங்கி இந்தியாவின் நான்கு பெரிய வங்கிகளில் ஒன்றாகும். மற்றவை பாரத ஸ்டேட் வங்கி,ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கியாகும்.[5]

வரலாறு[தொகு]

2008ஆம் ஆண்டு பஞ்சாப் செஞ்சூரியன் வங்கியை அதன் 1000 கிளைகளுடன் கையகப்படுத்தியது.இதற்கு முன்னர் பிப்ரவரி 26,2000 அன்று மும்பை டைம்ஸ் ஆஃப் இந்தியா குழுமத்தால் தனியார்துறையில் துவக்கிய டைம்ஸ் வங்கியை கையகப்படுத்தி யுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எச்டிஎஃப்சி_வங்கி&oldid=2573530" இருந்து மீள்விக்கப்பட்டது