ஆதித்யா பூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆதித்யா பூரி
Aditya Puri.jpg
பிறப்பு1950
சண்டிகர்
படித்த இடங்கள்
பணிதொழில் முனைவோர்

ஆதித்யா பூரி என்பவர் எச்டிஎப்சி வங்கியின் மேலாண்மை இயக்குநராக 1994 ஆம் ஆண்டு முதல் இருந்து வருபவர். பார்ச்சுன் தொழில் தலைவர்கள் 2016 பட்டியலில் ஆதித்யா பூரி 36ஆவது இடத்தில் உள்ளார்.[1]

பஞ்சாப் மாநிலம் குருடாசுப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆதித்யா பூரி சண்டிகரில் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் வணிகவியல் பட்டப் படிப்பும், பின்னர் பட்டயக் கணக்காளர் படிப்பும் முடித்தவர்.

1992 இல் மலேசியா சிட்டி வங்கியில் முதன்மை அதிகாரியாகப் பணியாற்றினார். பின்னர் எச்டிஎப்சி வங்கியின் மேலாண்மை இயக்குநராக 1994 இல் பொறுப்பேற்றார். தனியார் வங்கியின் தலைவர்களில் அதிக சம்பளம் வாங்கும் நபராக முதலிடத்தில் இவர் உள்ளார்.[2]

பெற்ற சிறப்புகள்[தொகு]

பரோன்ஸ் என்னும் அமெரிக்க நிதி இதழ் ஆதித்யா பூரியை 30 சிறந்த முதன்மை செயல் அதிகாரிகள் பட்டியலில் ஒருவராகச் சிறப்பித்துள்ளது.[3]

மேற்கோள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆதித்யா_பூரி&oldid=2734421" இருந்து மீள்விக்கப்பட்டது