இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
![]() | |
வகை | பொது (மு. ப. ச., இ. தே. ப. ச.) |
---|---|
நிறுவுகை | சென்னை- பிப்ரவரி 10, 1937 |
தலைமையகம் | சென்னை |
முக்கிய நபர்கள் | தலைவர், மேலாண் இயக்குனர் - எம். நரேந்திரா |
தொழில்துறை | வங்கி மூலதன சந்தைகள் மற்றும் தொடர்புடைய தொழில்கள் |
உற்பத்திகள் | கடன்கள், கடனட்டைகள், சேமிப்பு, முதலீடு சாதனங்கள் போன்றவை. |
வருமானம் | ▲₹34,550 கோடி (US$4.5 பில்லியன்) (2011) |
நிகர வருமானம் | ▲ ₹19,578 கோடி (US$2.6 பில்லியன்) (2011) |
மொத்தச் சொத்துகள் | ₹9,21,841 கோடி (US$120 பில்லியன்) (2011) |
இணையத்தளம் | www.iob.in |
இந்தியன் ஓவர்சீசு வங்கி (முபச: 532388 ) இந்தியாவின் ஒரு பொதுத்துறை வங்கியாகும். இது சென்னையைத் தலைமையகமாக கொண்டு செயல்படுகிறது. இந்த வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் எம். நரேந்திரா.
வரலாறு[தொகு]
M.CT.M.சிதம்பரம் செட்டியார் 1937 ஆம் ஆண்டில் அந்நியச் செலாவணி நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் காரைக்குடி, மதராசு, இரங்கூன் ஆகிய மூன்று இடங்களில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளைகளைத் துவங்கினார். விரைவில் மலேசியா, சிங்கப்பூர் ஆகிய இடங்களிலும் கிளைகள் உருவாயின. முதல் உலகப்போர் மற்றும் இரண்டாம் உலகப்போர் காலங்களில் திரைகடலோடித் திரவியம் தேடிய நாட்டுக்கோட்டை செட்டியார்களுக்கு உதவும் வகையில் இந்தியாவுக்கு வெளியில் இவ்வங்கிக்கு அதிகமான கிளைகள் இருந்தன.