உள்ளடக்கத்துக்குச் செல்

பம்பாய் வங்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பம்பாய் வங்கி
Bank of Bombay
நிலைகல்கத்தா வங்கி மற்றும் மதராஸ் வங்கியுடன் இணைக்கப்பட்டது.
பிந்தியதுஇம்பீரியல் பேங்க் ஆப் இந்தியா
நிறுவுகை15 ஏப்ரல் 1840
செயலற்றது27 சனவரி 1921
தலைமையகம்பம்பாய், பம்பாய் மாகாணம், பிரித்தானிய இந்தியா
சேவை வழங்கும் பகுதிபிரித்தானிய இந்தியா
தொழில்துறைவங்கித்தொழில்,
நிதிச் சேவைகள்

பம்பாய் வங்கி இந்தியா விடுதலை பெறுவதற்கு முந்தைய பிரித்தானிய இந்தியாவின் மூன்று மாகாண வங்கிகளில், இரண்டாவது வங்கியாகும். கல்கத்தா வங்கியும், மதராஸ் வங்கியும் இதர இரு வங்கிகளாகும். 1840 ஏப்ரல் 15 அன்று பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் சாசனத்திற்கு ஏற்ப நிறுவப்பட்டது. இது, பம்பாய் (தற்போதைய மும்பை) நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டது. பம்பாய் வங்கி, சாதாரண வணிக வங்கி மேற்கொள்ள வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டது. சென்னை வங்கி, அந்த நேரத்தில் வேறு எந்த மைய வங்கியும் இல்லாத காரணத்தால், இது ஒரு நடுவன் வங்கியின் ஒரு சில பணிகளையும் மேற்கொண்டது.

1921 சனவரி 27 அன்று பம்பாய் வங்கி, இதர இரு மாகாண வங்கிகளான கல்கத்தா வங்கியுடனும், மதராஸ் வங்கியுடனும் இணைந்து இம்பீரியல் பேங்க் ஆப் இந்தியா என உருவாக்கப்பட்டது. இந்திய வங்கிகளை கட்டுப்படுத்தி நெறிப்படுத்தும் இந்திய நடுவன் வங்கியான பாரத ரிசர்வ் வங்கியால் இந்திய இம்பீரியல் வங்கியை பாரத ஸ்டேட் வங்கி என 1955 ஏப்ரல் 30 அன்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

இதனையும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
  • THE EVOLUTION OF THE STATE BANK OF INDIA, Volume 1 — The Roots 1806-1876 by Amiya Kumar Bagchi [1]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பம்பாய்_வங்கி&oldid=1907487" இலிருந்து மீள்விக்கப்பட்டது