டி. பி. எஸ். வங்கி
Appearance
வகை | பொதுத் துறை |
---|---|
நிறுவுகை | 1968 |
தலைமையகம் | சிங்கப்பூர் |
தொழில்துறை | வங்கி |
உற்பத்திகள் | நிதித் துறை |
இயக்க வருமானம் | ▲ $8.064 பில்லியன் சிங்கப்பூர் டாலர்கள் [1] |
பணியாளர் | 18,000[1] |
இணையத்தளம் | www.dbs.com |
டி.பி.எஸ் வங்கி (DBS Bank) சிங்கப்பூரில் அமைந்துள்ள வங்கியாகும். இவ்வங்கியின் முந்தைய பெயர் தி டெவலப்ட் பேங்க் ஆப் சிங்கப்பூர் (The Development Bank of Singapore) ஆகும். இவ்வங்கி 2003 ஆம் ஆண்டு ஜூலை மாதம் டி.பி.எஸ் வங்கி எனப் பெயர் மாற்றம் பெற்றது.[2] நாட்டின் தொழிற்துறை நிதிச் சேவைகளைக் கையாளுவதற்காக சிங்கப்பூர் அரசால் 1968-ல் இவ்வங்கி உருவாக்கப்பட்டது. இன்று 100-க்கும் மேலான கிளைகளுடன் சிங்கப்பூரில் இயங்கி வருகிறது. தென்கிழக்காசியாவின் மிகப்பெரிய வங்கி இது ஆகும். மேலும் பாதுகாப்பான நிதியுடைய வங்கி என 2009 முதல் 2013 வரை தொடர்ச்சியாக 5 வருடங்கள் அறிவிக்கப்பட்டது.[2] இவ்வங்கி 250 கிளைகளுடன் 50 நகரங்களில் 1,100 க்கும் அதிகமான தானியங்கிப் பண வழங்கி இயந்திரங்களைக் கொண்டுள்ளது.[3]