நிகழ்நேர பெருந்திரள் தீர்வு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

பொருளியலில் நிகழ்நேர பெருந்திரள் தீர்வு (Real Time Gross Settlement - RTGS) என்பது ஒரு வங்கியில் இருந்து இன்னொரு வங்கிக்கு, "நிகழ்நேரத்தில்" பணத்தை இடமாற்றம் செய்யும் முறை. இங்கே நிகழ்நேரம் என்பது, பணம் அனுப்பும் வங்கி, பணம் பெறும் வங்கி ஆகிய இவற்றிடையே நிகழும் நடவடிக்கை, "காத்திருக்கும்" நேரம், ஏதும் இல்லாமல் "நிகழ் நேரத்திலேயே" நடப்பதாக கொள்ளப்படுகின்றது. "மொத்த பணமதிப்புத் தீர்வு" (gross settlement) என்பது ஒன்றுக்கு ஒன்று என்ற வகையில் தீர்க்கப்படுவது; ஒருவருக்கு வரவு அல்லது பற்று இரண்டையும் கணித்து நிகரத்தொகை தீர்க்கப்படுவதன்று. இந்த நடவடிக்கை, உறுதிசெய்யப்பெற்ற, மீள்விக்க இயலாத, முடிவான தீர்வு. இது ஒரே நேரத்தின் அடிப்படையில் நடவடிக்கைளை உடனுக்குடன் கணினி வழித் தீர்வு செய்யும் முறை ஆகும். இது வங்கி வணிக நடவடிக்கைகளைத் தீர்க்க பயன்படுகிறது.


நடவடிக்கை[தொகு]

இதில் நிகழும் கணினி வழியதான பணம் செலுத்தல்-பெறுதல் முறையை ஒரு நாட்டின் நடுவண் (அரசு) வங்கி பராமரிக்கும். நேரடியாக பணத்தாள்கள் போன்ற பருப்பொருள் பண மாற்றம் ஏதும் நிகழ்வதில்லை. ஒரு வங்கி (வங்கி-1) இன்னொரு வங்கிக்கு (வங்கி-2) 1000 பண அலகு (டாலர், உருபாய் போன்றவை) பணம் செலுத்துகின்றது என்றால், நடுவண் வங்கியானது வங்கி-1 இன் கணக்கில் 1000 பண அலகை கழிப்பதும், வங்கி-2 இல் 1000 பண அலகைக் கூட்டுவதும் செய்யும்.

இந்த நிகழ்நேரத் தீர்வுமுறை (RTGS system) அதிக மதிப்புள்ள பண மாற்றங்களை, குறைந்த எண்ணிக்கையிலான நடவடிக்கைகளாகச் செய்வர். இதனால் ஒரு பண-நிதி நிறுவனத்தின் பண நடவடிக்கை பற்றிய தெளிவான கணக்குவழக்கை அறிய உதவுகின்றது.

இம்முறையானது, ஒவ்வொரு நாளின் இறுதியிலும், பண நிறுவனங்களுக்கு இடையே நடைபெறும் கொடுக்கல் வாங்கல்களைத் (செலுத்தல்-பெறுதல்களைத்) தொகுத்துத்தரும் இதித் தீர்வு முறைக்கு (BACS)மற்றொரு மாற்று முறையாக கருதப்படுகின்றது.

சில நாடுகளின் நிகழ்நேர பெருந்திரள் பணத்தீர்வு முறை[தொகு]