மதராஸ் வங்கி
Jump to navigation
Jump to search
நிலை | கல்கத்தா வங்கி, பம்பாய் வங்கியுடன் இணைக்கப்பட்டது |
---|---|
பிந்தியது | இந்திய இம்பீரியல் வங்கி |
நிறுவுகை | 1 சூலை 1843 |
செயலற்றது | 27 சனவரி 1921 |
தலைமையகம் | மதராஸ், மதராஸ் மாகாணம், பிரித்தானிய இந்தியா |
சேவை வழங்கும் பகுதி | பிரித்தானிய இந்தியா |
தொழில்துறை | வங்கித்தொழில், நிதிச் சேவைகள் |
மதராஸ் வங்கி பிரித்தானிய இந்தியாவின் மதராஸ் மாகாணத்தில் செயற்பட்டுவந்த வங்கியாகும். இது பிரித்தானிய இந்தியாவின் மூன்று மாகாண வங்கிகளில் ஒன்றாகும். கல்கத்தா வங்கியும், பம்பாய் வங்கியும் இதர இரு வங்கிகளாகும். மதராஸ் மாகாணத்தில் இயங்கி வந்த சில மண்டல ஊரக வங்கிகளை ஒன்றிணைத்து, 1843 சூலை 1 அன்று மதராஸை தலைமையிடமாகக் கொண்டு (தற்போதைய சென்னை) இவ்வங்கி தொடங்கப்பட்டது. இவ்வங்கி, இதர இரு மாகாண வங்கிகளுடன் இணைந்து, 1921இல் இந்திய இம்பீரியல் வங்கி என புதிதாக தொடங்கப்பட்டது. இவ்வங்கியே பின்னாளில் பாரத ஸ்டேட் வங்கியாக மாற்றம் பெற்றது.[1]