செட்டிநாடு வங்கி
நிலை | தானாக கலைக்கப்பட்டது |
---|---|
நிறுவுகை | 1929 |
செயலற்றது | 1965 |
தலைமையகம் | ரங்கூன், இந்தியா |
சேவை வழங்கும் பகுதி | இந்தியா |
தொழில்துறை | வங்கித்தொழில், நிதிச் சேவைகள் |
செட்டிநாடு வங்கி இந்தியாவில் செயல்பட்டுவந்த ஒரு வணிக வங்கியாகும். இது நாட்டுக்கோட்டை நகரத்தார் சமூகத்தினரால் தொடங்கப்பட்ட வங்கிகளில் ஒன்றாகும். 1929ஆம் ஆண்டில் ரங்கூனை தலைமையிடமாகக் கொண்டு, இரண்டு குடும்பத்தினர் இணைந்து இவ்வங்கியை நிறுவினர்.[1] இந்திய நிறுமச் சட்டம் 1913ன் படி இந்நிறுவனம், ஒரு தனியார் நிறுவனமாக பதிவு செய்யப்பட்டது. இவ்வங்கியை தொடங்கிய இரு குடும்பத்தினரில் ஒன்றான கானசகதான் குடும்பத்தினர் இதனை நிர்வகித்தனர். இவ்வங்கி, சார்டர்டு வங்கி, இந்திய இம்பீரியல் வங்கி, சிட்டி வங்கி, லாய்ட்சு வங்கி ஆகிய வங்கிகளிடமிருந்து கடனைப் பெற்று தனது வாடிக்கையாளர்களுக்கு தேவையான நிதி வசதிகளை அளித்து வந்தது.[1]
இதனையும் காண்க[தொகு]
மேற்கோள்களும் சான்றுகளும்[தொகு]
- மேற்கோள்கள்
- சான்றுகள்
- Turnell, Sean (2009) Fiery Dragons: Banks, Moneylenders and Microfinnance in Burma. (NAIS Press). ISBN 9788776940409
- Weerasooria, W. S. 1973. The Nattukottai Chettiar Merchant Bankers in Ceylon.(Delhiwala, Sri Lanka: Tisara Prakasakayo).