விஜயா வங்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விஜயா வங்கி
வகைபொதுப் பங்கு நிறுவனம் முபச532401
நிறுவுகை1931, மங்களூர், இந்தியா.
தலைமையகம்பெங்களூரு, இந்தியா
முக்கிய நபர்கள்ஸ்ரீ கிஷோர் குமார் சான்சி, (மேலாண்மை இயக்குநர் & முதன்மை செயல் அதிகாரி)
தொழில்துறைநிதிச் சேவைகள்
வணிக வங்கி
பணியாளர்13,700 (2014-15)
இணையத்தளம்www.vijayabank.com
அட்டாவர் பாலகிருஷ்ணா செட்டி, விஜயா வங்கியின் நிறுவனர் மற்றும் இயக்குநர்

விஜயா வங்கி (Vijaya Bank) இந்தியா முழுவதும் செயல்பட்டுவரும் நடுத்தர அளவு இந்தியப் பொதுத்துறை வங்கியாகும். இவ்வங்கி, இந்திய அரசால் தேசியமயமாக்கம் செய்யப்பட்ட பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாகும்.

வரலாறு[தொகு]

விஜயா வங்கி, 'ஸ்ரீ அட்டாவர் பாலகிருஷ்ண செட்டி என்பவரால் 1931 அக்டோபர் 23 அன்று மங்களூர் பன்ட்ஸ் ஹாஸ்டல் என்னும் இடத்தில் தொடங்கப்பட்டது.[1] விஜயதசமி நாளில் தொடங்கப்பட்டதால் இது விஜயா வங்கி என அழைக்கப்பட்டது.[2] கர்நாடகாவின் தக்சின கன்னடா மாவட்ட விவசாயிகளிடம் வங்கியை பயன்படுத்துதல், சிக்கனம் மற்றும் தொழில் தொடங்கும் பழக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கத்திற்காகவே இவ்வங்கி தொடங்கப்பட்டது. 1958 ஆம் ஆண்டில் இவ்வங்கி அட்டவணை படுத்தப்பட்ட வங்கியாக மாறியது. 1963 - 68 காலகட்டத்தில் இவ்வங்கியானது 9 சிறிய வங்கிகளை தன்னுடன் இணைத்ததன் மூலமாக படிப்படியாக, இந்தியா முழுவதும் செயல்படும் வங்கியாக வளர்ந்தது. 1980 ஏப்ரல் 15 அன்று, இந்திய அரசால் இவ்வங்கி தேசியமயமாக்கம் செய்யப்பட்டது.

சித்தகங்கா மட மேளாவின்போது விஜயா வங்கியின் எஸ்எஸ் மடக் கிளை ஏற்பாடு செய்திருந்த ஸ்டாலிற்கு விஜயா வங்கியின் பொது மேலாளர் வருகைபுரிந்தபோது.

மேற்கோள்கள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விஜயா_வங்கி&oldid=3572017" இருந்து மீள்விக்கப்பட்டது