புதுவை பாரதியார் கிராம வங்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புதுவை பாரதியார் கிராம வங்கி, இந்தியாவின் புதுச்சேரி ஒன்றிய பிரதேசத்தில் செயற்பட்டுவரும் மண்டல ஊரக வங்கியாகும். புதுச்சேரியில் உள்ள இரண்டு மாவட்டங்களில் முப்பதுக்கும் அதிகமான கிளைகளுடன் 150க்கும் அதிகமான பணியாளர்களையும் கொண்டு செயற்பட்டுவருகிறது. 26 மார்ச் 2008 முதல் மக்களுக்கு வங்கி சேவை வழங்கி வருகிறது. புதுச்சேரியை தலைமையாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் நகைக் கடன், கல்விக் கடன் மக்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும் தொடர் வைப்பு தொகை சேவையும் இங்கு உள்ளது. சில வங்கி கிளைகளில் தானியங்கி சில்லறை வழங்கும் இயந்திரம் உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]