ஒருமித்த கொடுக்கல் இணைப்பிடைமுகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒருமித்த கொடுக்கல் இணைப்பிடைமுகம்
நிறுவுகை2016
தலைமையகம்மும்பை, மகாராட்டிரம், இந்தியா[1]
முக்கிய நபர்கள்நந்தன் நிலெக்கணி ரகுராம் கோவிந்தராஜன்
தொழில்துறைநிதி
உற்பத்திகள்நடவடிக்கைகளுக்கான இணைய இயக்குதளம்
தாய் நிறுவனம்இந்தியத் தேசிய கொடுக்கல்கள் நிறுவனம்
இணையத்தளம்அலுவல்முறை வலைத்தளம்

ஒருமித்த கொடுக்கல் இணைப்பிடைமுகம் (Unified Payments Interface, UPI) கூடிவரும் திறன்பேசி ஏற்பு, இந்திய மொழிகளில் இடைமுகங்கள், அனைவருக்கும் இணைய மற்றும் தரவு அணுக்கம் ஆகிய போக்குகளைப் பயன்படுத்தும் முகமாக அடுத்தத் தலைமுறை இணையவழி உடனடி கொடுக்கல்களுக்கு வசதி புரியும் கட்டமைப்பும் சீர்தர செயலி நிரலாக்க இடைமுகங்களின் தொகுதியும் ஆகும்.[2]இந்திய ரிசர்வ் வங்கியின் குறைந்த பணத்தாள்கள், மிகுதியாக எண்மம் என்ற இலக்கை நோக்கி இந்தியத் தேசிய கொடுக்கல்கள் நிறுவனம் இதனை துவக்கியுள்ளது. உடனடி கொடுக்கல் சேவை (IMPS) தளத்தின் மேலாக இ.தே.கொ.நி இதனை வடிவமைத்துள்ளது. இதன் மூலம் கைபேசி மூலமாக பணத்தை மற்றவருக்கு உடனடியாக மாற்றுவது/கொடுப்பது இயலும்.[3]

யுபிஐ இணைபிடைமுகத்தைக் கொண்டு வங்கிகளும் வங்கியல்லாதோரும் கைபேசி குறுஞ்செயலிகளை அறிமுகப்படுத்தும் போது பயனர்கள் தங்களுக்கான யுபிஐ அடையாளத்தை பெற வேண்டும். கைபேசி வங்கிப் பணிகளை பயன்படுத்துவோர் ஏற்கெனவே எம்-பின் எனப்படும் கைபேசி குறியீட்டை பெற்றிருப்பர். மற்றவர்கள் இதனைப் பெறவேண்டும். இந்த எம்-பின் தான் யுபிஐ கொடுக்கலில் இரண்டாம் கட்ட உறுதியளிப்பதாக அமையும். ஒருவருக்குப் பணம் கொடுக்க பெறுநரின் யுபிஐ அடையாளமும் தன்னுடைய எம்பின்னும் தெரிந்திருந்தால் போதுமானது. இதனால் நீண்ட வங்கிக் கணக்கெண்ணையும் சிக்கலான ஐஎஃப்எசுசி குறியீடுகளையும் பகிரவேண்டியத் தேவையில்லை.[4] இணையவழி வாங்கல்களில் ஒருவரது கைபேசியில் வங்கிச் செயலி வழியாக எம் பின்னைப் பயன்படுத்தி பணம் வழங்க முடியும். இதனால் வீட்டு வாயில்களில் பொருளுக்கு எதிர் பணம் கொடுக்கும் செயற்பாடுகளிலும் நேரடியாக பொருள் பெற்றபிறகு யுபிஐ மூலம் இணைய அங்காடிக்கு உடனடியாகப் பணம் செலுத்தலாம்.

மேற்சான்றுகள்[தொகு]

{{இந்தியாவில் வங்கித் தொழில்} தொழில் பெயிண்டிங் வேலை பெயிண்டிங் வேலை பெயிண்டிங் ஒர்க் }