இந்தியத் தேசிய கொடுக்கல்கள் நிறுவனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(இந்தியாவின் தேசிய பணம் செலுத்துதல் கழகம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இந்தியத் தேசிய கொடுப்பனவு நிறுவனம்
भारतीय राष्ट्रीय भुगतान निगम
வகைஇந்திய இலாபநோக்கற்ற சட்டங்கள் பகுதி 25 நிறுவனம்
நிறுவுகை2008
தலைமையகம்மும்பை, மகாராட்டிரம், இந்தியா[1]
முக்கிய நபர்கள்பாலச்சந்திரன் எம், தலைவர் ஏபி. ஓட்டா, முதன்மை செயல் அலுவலர் & மேலாண் நிறுவனர்[2]
தொழில்துறைகொடுப்பனவு
உற்பத்திகள்தேசிய நிதிய பரிமாற்றம் (NFS), தேசிய தானியங்கி கணக்குத் தீர்வகம் (NACH), உடனடி கொடுப்பனவு சேவை (IMPS), ரூபே, காசோலை துண்டிப்பு அமைப்பு (CTS), ஆதார்வழிச் செயல்படு கொடுப்பனவு அமைப்பு (AePS), ஒருமித்த கொடுப்பனவு இடைமுகப்பு(UPI), *99#
பணியாளர்700+
இணையத்தளம்www.npci.org.in

இந்திய தேசிய கொடுப்பனவு நிறுவனம் (National Payments Corporation of India, NPCI) இந்தியாவின் அனைத்து சில்லறைக் கொடுப்பனவு அமைப்புக்களுக்கும் மைய நிறுவனமாக விளங்குகின்றது; இதனுடைய இலக்கு நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் எவ்விடத்திலிருந்தும் எந்நேரத்திலும் இணையக் கொடுப்பனவுகளை செய்ய இயலுமாறு செய்வதாகும். 2008ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இது நிறுவனங்கள் சட்டம், 2013-ன் பகுதி 25-ன் கீழ் இலாபநோக்கற்ற அமைப்பாக விளங்குகின்றது. இதனை நாட்டின் மையவங்கியான இந்திய ரிசர்வ் வங்கி வளர்த்தெடுக்கின்றது.

இது உள்நாட்டு அட்டைக் கொடுப்பனவு பிணையம் ரூபே உருவாக்கத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது; இதனால் பன்னாட்டு அட்டை திட்டங்களின் மீதான சார்பு குறைந்துள்ளது. தற்போது ரூபே அட்டை நாட்டின் அனைத்து தன்னியக்க வங்கி இயந்திரங்களிலும் (2,22,278+)*, விற்பனை முனை கணினிகளிலும் (12,20,763+)* பெரும்பாலான இணைய வணிக நிறுவனங்களிலும் (30,000+)* ஏற்கப்படுகின்றது. 300க்கும் மேற்பட்ட கூட்டுறவு வங்கிகளும் வட்டார ஊரக வங்கிகளும் ரூபே அட்டையை வெளியிட்டுள்ளன.

மேற்சான்றுகள்[தொகு]

  1. "National Payments Corporation of India". Npci.org.in. Archived from the original on 2011-09-06. பார்க்கப்பட்ட நாள் 2011-03-16.
  2. "Mobile money transfer fee cut to 10p". Indianexpress.com. பார்க்கப்பட்ட நாள் 2011-03-16.