யூகோ வங்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
யூகோ வங்கி
நிறுவுகை6 சனவரி, 1943
தலைமையகம்கல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா
சேவை வழங்கும் பகுதிஉலகம் முழுவதும்
முக்கிய நபர்கள்அருண் கவுல் (தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர்)
தொழில்துறைவங்கித்தொழில்,
நிதி சேவைகள்
உற்பத்திகள்நுகர்வோர் வங்கி,
வணிக வங்கி,
நிதி மற்றும் காப்பீடு,
முதலீட்டு வங்கி,
அடமானங்கள்,
தனிநபர் வங்கி,
வள மேலாண்மை
இலாபம் 02510 கோடிகள் (2014ஆம் ஆண்டில்)
உரிமையாளர்கள்இந்திய அரசு
பணியாளர்24,109 (2013ஆம் ஆண்டில்)
இணையத்தளம்www.ucobank.com

யூகோ வங்கி இந்தியாவில் செயல்பட்டுவரும் மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாகும். இது 1943ஆம் ஆண்டில் யுனைடெட் கமர்சியல் வங்கி என்னும் பெயரில் கல்கத்தாவில் தொடங்கப்பட்ட வங்கியாகும். 2013 சூன் 1 அன்றைய நிலவரப்படி, 4000 சேவை மையங்களையும் 44 மண்டல அலுவலகங்களையும் கொண்டு இவ்வங்கி இந்தியா முழுவதும் சிறப்பாக செயலாற்றி வருகிறது. மேலும் இவ்வங்கிக்கு ஆங்காங் மற்றும் சிங்கப்பூரில் இரு அயல்நாட்டுக் கிளைகளும் செயல்படுகின்றன.

2013-14 நிதியாண்டில் இவ்வங்கியானது ரூபாய் 4550 பில்லியன் அளவிலான வணிக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. 2014ஆம் ஆண்டைய தரவின்படி, போர்ப்ஸ் உலகளாவிய சிறந்த 2000 வங்கிகளின் பட்டியலில் இவ்வங்கிக்கு 1860ஆவது இடம் கிடைத்தது.

மேற்கோள்கள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=யூகோ_வங்கி&oldid=2221082" இருந்து மீள்விக்கப்பட்டது