உள்ளடக்கத்துக்குச் செல்

கோடக் மகிந்தரா வங்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கோடக் மகிந்தரா வங்கி மஹாராஷ்டிரா மாநிலத்தின் மும்பை நகரத்தை தலைமை இடமாக கொண்டு செயல்படும் தனியார் வங்கியாகும். இது 2003 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் துணை தலைவராகவும் நிர்வாக அதிகாரியாகவும் உதய் கோடக் பணியாற்றுகிறார். கோடக் பினான்சியல் லிமிடெட் என்ற நிதி நிறுவனமாக செயல்பட்டு வந்த நிறுவனமே பின்னாளில் கோடக் வங்கியாக உருவெடுத்தது. இது போல நிதி நிறுவனம் ஒன்று வங்கியாக மாற்றப்படுவது இதுவே முதல் முறையாகும். முன்னதாக, வங்கியாக மாற்றப்படுவதற்கான இந்திய ரிசர்வ் வங்கியின் உரிமம் பெறப்பட்டது. கோடக் மகிந்திரா வங்கியானது ஐஎன்ஜி வைசியா வங்கியை தன்னோடு இணைத்துக்கொண்டது.[1]

சான்றுகள்[தொகு]

  1. "kodak bank". பார்க்கப்பட்ட நாள் ஆகத்து 18, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோடக்_மகிந்தரா_வங்கி&oldid=3920808" இலிருந்து மீள்விக்கப்பட்டது