உள்ளடக்கத்துக்குச் செல்

இந்திய வணிக வங்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிறுவுகை1845 (1845) பம்பாய்,
பிரித்தானிய இந்தியா
செயலற்றது1866 (1866)
அமைவிட எண்ணிக்கை10
உற்பத்திகள்வங்கித்தொழில்

இந்திய வணிக வங்கி, பிரித்தானிய இந்தியாவில் செயற்பட்டுவந்த வணிக வங்கியாகும். 1845ஆம் ஆண்டில் பம்பாய் மாகாணத்தில் (தற்போதைய பம்பாய்) தொடங்கப்பட்ட இவ்வங்கி அயல்நாட்டு நாணயப் பரிமாற்ற வங்கி எனவும் அழைக்கப்பட்டது. இலண்டன், கல்கத்தா, ஆங்காங், பூச்சோ, சாங்காய், ஹங்கோ, யோக்கோகாமா, சிங்கப்பூர் ஆகிய எட்டு கிளைகளுடன் சான் பிரான்சிஸ்கோவில் இருந்து தங்கக் கட்டிகளை இறக்குமதி செய்வதில் முகவராகப் பணியாற்றியது.[1]

வீழ்ச்சி

[தொகு]

20 ஆண்டுகள் சிறப்பாக செயல்பட்ட பின்னர், 1866இல் உலக அளவில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியால், உலகின் பல வங்கிகள் கடும் தோல்வியை சந்தித்தபோது இவ்வங்கியும் தோல்வியை சந்தித்தது.[2]

கலைப்பு

[தொகு]

இந்திய வணிக வங்கி, இந்திய நிறுமச் சட்டத்தின்படி இந்தியாவில் பதிவுசெய்தது. ஆனால் இங்கிலாந்தில், அந்நாட்டின் சட்டப்படி பதிவு செய்யாமல் அங்கே வணிக நடவடிக்கைகளில் செயல்பட்டதால் மாஸ்டர் ஆப் தி ரோல்ஸ் நீதிமன்றம் இவ்வங்கியை கலைக்க உத்தரவிட்டது.[3]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. The Bankers' magazine. BPC (Bankers' Magazine) Ltd. 1867. p. 455. பார்க்கப்பட்ட நாள் 27 February 2012.
  2. "Indian Currency >> Museum >> Paper Money - Early Issues". Reserve Bank of India. பார்க்கப்பட்ட நாள் 27 February 2012.
  3. "The Oriental Bank suspension". The Sydney Morning Herald. 6 May 1884. http://news.google.com/newspapers?id=zeAQAAAAIBAJ&sjid=1pUDAAAAIBAJ&pg=7069,2566398&dq=commercial-bank-of-india&hl=en. பார்த்த நாள்: 28 February 2012. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திய_வணிக_வங்கி&oldid=1914906" இலிருந்து மீள்விக்கப்பட்டது