கேரள கிராம வங்கி
வகை | பொதுப் பங்கு நிறுவனம் |
---|---|
நிறுவுகை | தெற்கு மலபார் கிராம வங்கி (1976) வடக்கு மலபார் கிராம வங்கி (1976) கேரள கிராம வங்கி (2013) |
தலைமையகம் | மலப்புறம், கேரளா, இந்தியா |
சேவை வழங்கும் பகுதி | கேரளா, இந்தியா |
முதன்மை நபர்கள் | சாஜி கே. வி. (தலைவர்) |
தொழில்துறை | வங்கித்தொழில் நிதிச் சேவைகள் |
உற்பத்திகள் | நுகர்வோர் வங்கி, வணிக வங்கி, நிதி மற்றும் காப்பீடு, அடமானக் கடன்கள், தனிநபர் வங்கி, சேமிப்புகள், வள மேலாண்மை |
வருமானம் | ₹ 11120 மில்லியன் (2013)[1] |
இலாபம் | ₹ 400 மில்லியன் (2013) |
மொத்தச் சொத்துகள் | ₹ 122360 மில்லியன் (2013) |
உரிமையாளர்கள் | இந்திய அரசு, கேரள அரசு, கனரா வங்கி |
இணையத்தளம் | www |
கேரள கிராம வங்கி அல்லது கேரள கிராமீண் வங்கி என்பது இந்தியாவின் கேரளத்தில், மலப்புறத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஊரக வங்கியாகும். 20,000 கோடி இந்திய ரூபாய் அளவிற்கு வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் இவ்வங்கியானது இந்தியாவில் செயல்பட்டு வரும் ஊரக வங்கிகளில் மிகப்பெரிய வங்கியாகும். இது, இந்திய நடுவன் அரசு, கேரள அரசு, கனரா வங்கி ஆகிவற்றிற்குச் சொந்தமான வங்கியாகும்.
கேரளத்தில் செயற்பட்டு வரும் வங்கிகளில், மூன்றாவது பெரிய வங்கியான இது, தனது 570 கிளைகள், 4 சேவை மையங்கள், 3 மிகச் சிறிய கிளைகள், 10 மண்டல அலுவலகங்கள், 230க்கும் அதிகமான தானியங்கி பணவழங்கிகள் மற்றும் 294 கிசாக் வங்கி மையங்கள் உடன் சிறப்பாக செயற்பட்டு வருகிறது. இவ்வங்கியின், கடன்-வைப்பு விகிதமானது 100 விழுக்காட்டிற்கும் மேலாக உள்ளது. இந்த விகிதமானது கேரளாவில் செயல்பட்டுவரும் அனைத்து பெரிய வங்கிகளை விட அதிகமாகும்.
வரலாறு
[தொகு]1973ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட வடக்கு மலபார் கிராம வங்கியையும், தெற்கு மலபார் கிராம வங்கியையும் இணைத்து 2013ஆம் ஆண்டில் இவ்வங்கி உருவாக்கப்பட்டது. முழுவதும் அரசுக்கு சொந்தமான இவ்வங்கி அதன் சமூக கடமைகளைப் பூர்த்தி செய்வதிலும், மத்திய, மாநில அரசுகள் வகுக்கும் கொள்கைகள் மற்றும் திட்டங்களை செயற்படுத்துவதிலும் முதலிடத்தில் உள்ளது.
கேரளாவின் 14 மாவட்டங்களிலும் சிறப்பாக செயல்பட்டுவரும் இவ்வங்கி, கேரளத்தில் செயல்பட்டுவரும் ஒரேயொரு மண்டல ஊரக வங்கியாகும். கடந்த நிதியாண்டில் 20% வளர்ச்சி அடைந்துள்ள இவ்வங்கி அடுத்த ஒன்றிரண்டு ஆண்டுகளில் தனது கிளைகளின் எண்ணிக்கையை 1000 அளவிற்கு உயர்த்த திட்டமிட்டுள்ளது.[2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://www.bseindia.com/bseplus/StockReach[தொடர்பிழந்த இணைப்பு] AdvanceStockReach.aspx?scripcode=532483
- ↑ "Formation of Kerala Gramin Bank notified following merger of two RRBs | Business Line". Thehindubusinessline.com. 2013-07-09. பார்க்கப்பட்ட நாள் 2013-09-14.
- ↑ Viswanath, Chandrakanth (2013-07-15). "KGB to expand operations in all Panchayats". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2013-09-14.