பொதுப் பங்கு நிறுவனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பொது நிறுவனம் (public company) அல்லது பொதுப் பங்கு நிறுவனம் (publicly traded company)பொதுவில் வணிக ஈடு நிறுவனம், பொதுவில் வாங்கப்பட்ட நிறுவனம் (publicly held company), பொதுவில் வரையறுக்கப்பட்ட நிறுவனம் (ஐக்கிய இராச்சியத்தில்) என்றெல்லாம் குறிப்பிடப்படுபவை ஓர் கடப்பாடு வரையறுக்கப்பட்ட நிறுவனம் (வணிகம்) ஆகும். இவை தங்கள் பத்திரங்களையும் (மூலதனப் பங்குகள்/ஈடுகள், பிணைப் பத்திரங்கள்/கடன்கள் போன்றவை) நிதி திரட்டல் ஆவணங்களையும் வழக்கமாக ஓர் பங்குச் சந்தை மூலமாகவோ அல்லது நேரடி வணிகச் சந்தைகளில் சந்தை நிதி நிறுவனங்களின் சேவை முகப்புகள் மூலமாகவோ பொதுமக்கள் வாங்குமாறு வெளியிடும் நிறுவனமாகும். பொதுவில் வரையறுக்கப்பட்ட நிறுவனங்கள் உள்ளிட்டு, பொது நிறுவனங்கள் தங்கள் வணிக அளவையும் உள்நாட்டு சட்டங்களைப் பொறுத்தும் பங்குச் சந்தையொன்றில் பட்டியலிடப்பட்டிருக்கலாம் அல்லது இடப்படாதும் இருக்கலாம்.

பொது நிறுவனங்களும் பொதுத்துறை நிறுவனங்களும் வெவ்வேறானவை. பொதுத்துறை நிறுவனங்கள் முழுமையாகவோ பகுதியோகவோ அரசுடமையாக்கப்பட்டவை ஆகும். பொது வழக்கில் இவை பொது நிறுவனங்கள் எனக் குறிப்பிடப்படலாம்.

பொதுப் பங்கு நிறுவனத்தின் நிதி ஆவணங்கள்[தொகு]

பொதுவாக, பொதுப்பங்கு நிறுவனத்தின் பங்குகள் பரவலான முதலீட்டாளர்களுக்கு சொந்தமாக உள்ளன; தனிப்பங்கு நிறுவனமொன்றில் நிறுவனப் பங்குகள் ஒப்பீட்டளவில் மிகக் குறைந்த முதலீட்டாளர்களுக்கே சொந்தமாக இருக்கும். பெருமளவில் பங்குதாரர்கள் இருப்பதாலேயே ஒரு நிறுவனம் பொதுப்பங்கு நிறுவனமாகி விடாது. ஐக்கிய அமெரிக்காவில் 1934 பங்குச் சந்தை சட்டத்தின் கீழுள்ள நிறுவனங்கள் பொதுப்பங்கு நிறுவனங்களாகும். முதல் பொதுப்பங்கு நிறுவனமாக 1601ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட டச்சு கிழக்கிந்திய கம்பனி கருதப்படுகிறது[சான்று தேவை].