இந்தூர் ஸ்டேட் வங்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்தூர் ஸ்டேட் வங்கி அல்லது ஸ்டேட் பாங்க் ஆப் இந்தூர் என்பது பாரத ஸ்டேட் வங்கியின் துணை வங்கியும், பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைக்கப்பட்ட வங்கியும் ஆகும். இவ்வங்கி தனது தலைமை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைய இந்திய அரசு 2009 அக்டோபரில் முதற்கட்ட அனுமதியை வழங்கியது.[1] இவ்விணைப்புக்கு 2010 சூலை 15 அன்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. 2010 ஆகஸ்டு 26 அன்று இவ்வங்கி பாரத ஸ்டேட் வங்கியுடன் அதிகாரப் பூர்வமாக இணைந்தது.

பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைக்கப்படும் போது இவ்வங்கி 470 கிளைகளுடன் 300 நகரங்களில் செயல்பட்டுவந்தது. 2009 மார்ச் மாதத்தில் இவ்வங்கியின் மொத்த வருவாயானது ரூபாய் 500 பில்லியனைத் தாண்டியது.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்தூர்_ஸ்டேட்_வங்கி&oldid=1907494" இருந்து மீள்விக்கப்பட்டது