வடக்கு மலபார் கிராம வங்கி
Jump to navigation
Jump to search
வகை | பொதுத்துறை வங்கி (சிண்டிகேட் வங்கி உதவியுடன்) |
---|---|
நிறுவுகை | 1976ஆம் ஆண்டு மண்டல ஊரக வங்கிச் சட்டத்தின்கீழ். |
தலைமையகம் | கண்ணூர், கேரளா, இந்தியா |
தொழில்துறை | நிதிச் சேவைகள் வணிக வங்கி |
இணையத்தளம் | www.nmgbank.com |
வடக்கு மலபார் கிராம வங்கி (NMGB) இந்தியாவின் கேரளத்தில் செயற்பட்டுவந்த மண்டல ஊரக வங்கியாகும். 1976ஆம் ஆண்டு மண்டல ஊரக வங்கிச் சட்டத்தின்கீழ் பட்டியலிடப்பட்ட வணிக வங்கியாகும். கேரளத்தின் கண்ணூரை தலைமையிடமாகக் கொண்டு கேரளத்தின் ஏழு மாவட்டங்களில் செயற்பட்ட இவ்வங்கி வடக்கு மலபார் பகுதி மக்களுக்கு தேவையான நிதிச் சேவைகளை வழங்கியது. 2013 சூன் 14 அன்றைய நிலவரப்படி இவ்வங்கிக்கு 222 கிளைகள் செயல்பட்டன. தெற்கு மலபார் கிராம வங்கியுடனான இணைப்பிற்கு முன்பாக, வேறு எந்த இந்திய மண்டல ஊரக வங்கியும் ஈட்டாத அளவிற்கு இலாபத்தை ஈட்டியது. இதனால் இவ்வங்கி இதர மண்டல ஊரக வங்கிகளில் இருந்து வேறுபட்டது.
நிர்வாக இயக்குனர்கள்[தொகு]
தெற்கு மலபார் கிராம வங்கியுடன் இணைந்து கேரள கிராம வங்கியாக மாறுவதற்கு முன்பாக கீழ்க்காணும் நபர்கள் இதன் நிர்வாக இயக்குனர்களாக பணியாற்றினர்.[1]
- பி. மாது (தலைவர்)
- தபுன் குமார் பிரதாப்
- வி. அசோகன்
- பி. தினேஷ்
இதனையும் காண்க[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "NMGB Board".