உள்ளடக்கத்துக்குச் செல்

பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பஞ்சாப் & சிந்து வங்கி
வகைபொதுத்துறை வங்கி
நிறுவுகை24 சூன், 1908
தலைமையகம்ராஜேந்திரா பிலேஸ் புது தில்லி, இந்தியா
முதன்மை நபர்கள்எஸ். ஜதீந்தர் பீர் சிங், இ.ஆ.ப (முதன்மை செயல் அதிகாரி),
எம். கே. ஜெயின்
(நிர்வாக இயக்குநர்)
தொழில்துறைவங்கித்தொழில்
நிதிச் சேவைகள்
உற்பத்திகள்நிதி, அந்நிய செலாவனி, நுகர்வோர் வங்கி
இணையத்தளம்www.psbindia.com

பஞ்சாப் & சிந்து வங்கி (P&SB) வட இந்தியாவில் செயல்பட்டுவரும் இந்தியப் பொதுத்துறை வங்கியாகும். இந்திய அரசுக்கு சொந்தமான (81.42%) வங்கியான இது புது தில்லி தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவருகிறது. இவ்வங்கிக்கு இந்தியா முழுவதும் 1416 கிளைகள் உள்ளன. இவற்றுள் 530 கிளைகள் பஞ்சாப் மாநிலத்தில் உள்ளன. 2012 - 13 நிதியாண்டில் இவ்வங்கி 339 கோடி ரூபாயை நிகர இலாபமாகவும், நிகர NPA 2.14% ஈட்டியுள்ளது. 2013 சூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் இவ்வங்கி ரூபாய் 122 கோடிகளை வருவாயாக ஈட்டியுள்ளது. மேலும் இதே காலாண்டில் இதன் மொத்த வணிகம் ரூபாய் 1,42,000 கோடிகளாக உள்ளது. மேலும் இவ்வங்கியின் வணிகமானது ஒரு ஊழியருக்கு ரூபாய் 14 கோடிகளாகவும், ஒரு கிளைக்கு ரூபாய் 108 கோடிகளாகவும் உள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]

இதனையும் காண்க

[தொகு]