தேசிய மின்னணு பணப் பரிவர்த்தனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தேசிய மின்னணு பணப் பரிவர்த்தனை அல்லது தேசிய மின்னணு பணப் பரிமாற்றம் (NEFT-National Electronic Fund Ttransfer) என்பது தேசிய அளவில் தனிநபர், நிறுவன அமைப்புகள், குழுமங்கள் ஆகியோர் ஏதாவது ஒரு வங்கியின் கிளையிலிருந்து மற்றொரு வங்கியிலுள்ள தனிநபர் அல்லது நிறுவன அமைப்பு அல்லது குழுமங்களின் கணக்கிற்கு மின்னணு முறையில் பணத்தை அனுப்பிட உதவிடும் முறை ஆகும். ஒரு வங்கி இந்த முறையிலுள்ள நிதிமாற்றத்தில் பங்கேற்க வேண்டுமாயின், அவ்வங்கி அல்லது அவ்வங்கிக்கிளை கணினி வலைத்தள இணைப்பினை ஏற்கும் வசதியுடையதாக இருக்கவேண்டும்.[1]

பணம் பெறுநர்[தொகு]

ஒரு வங்கிக்கிளையில் கணக்கு வைத்துள்ள தனிநபர்கள், நிறுவன அமைப்புகள், குழுமங்கள் தேசிய மின்னணு பணப் பரிவர்த்தனை முறையை பயன்படுத்திப் பணம் பெறலாம். ஆகவே பணத்தைப் பெறுபவர் (பயனாளி) தேசிய மின்னணு பணப் பரிவர்த்தனை இணைப்பில் உள்ள வங்கிக்கிளையில் கணக்கு வைத்திருப்பது அவசியமாகும்.[1]

பணம் அனுப்புநர்[தொகு]

வங்கிக்கிளையில் கணக்கு வைத்துள்ள தனிநபர்கள், நிறுவன அமைப்புகள், குழுமங்கள் இம்முறையை பயன்படுத்தி பணம் அனுப்பலாம்.

வங்கிக்கணக்கு இல்லாதவர்கள் கூட தேசிய மின்னணு பணப் பரிவர்த்தனை இணைப்பிலுள்ள வங்கிக்கிளையில் நுழைந்து அதன் மூலம் தேசிய மின்னணு பணப் பரிவர்த்தனை முறையை பயன்படுத்தி பணம் அனுப்பலாம்.

இத்தகு வாடிக்கையாளர் பணத்தை வங்கியில் செலுத்த வசதியாக தனியானதொரு பரிவர்த்தனைக் குறியீட்டு எண் (50) இம்முறையில் வழங்கப்பட்டுள்ளது. இத்தகு வாடிக்கையாளர்கள் தங்களின் தகவல்களை (முகவரி, தொலைபேசி எண் முதலியன) தரவேண்டும். இதனால், வங்கிக்கணக்கு ஏதுமின்றி பணம் செலுத்துபவர் பணமாற்ற பரிவர்த்தனையைச் செய்திட முடியும்.[1]

மேற்கோள்களும் குறிப்புகளும்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "தேசிய மின்னணு பணப் பரிவர்த்தனை". இந்திய ரிசர்வ் வங்கி. பார்க்கப்பட்ட நாள் 01 சனவரி 2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help)