கத்தோலிக்கச் சிரியன் வங்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கத்தோலிக்க சிரியன் வங்கி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கத்தோலிக்கச் சிரியன் வங்கி
நிறுவுகை26 நவம்பர் 1920
தலைமையகம்திரிச்சூர், கேரளா, இந்தியா
சேவை வழங்கும் பகுதிஇந்தியா முழுவதும்
தொழில்துறைவங்கித்தொழில்
பணியாளர்2791 (2007-08)[1]
இணையத்தளம்www.csb.co.in

கத்தோலிக்கச் சிரியன் வங்கி வரையறுக்கப்பட்டது இந்தியாவில் செயற்பட்டு வரும் தனியார்த் துறை வைப்பகம் ஆகும். இது கேரள மாநிலத்திலுள்ள திரிச்சூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயற்பட்டு வருகிறது. இந்தியாவில் செயற்பட்டுவரும் மிகப்பழைமை வாய்ந்த வைப்பகங்களில் ஒன்றான இவ்வைப்பகம் 1920 நவம்பர் 26 அன்று தொடங்கப்பட்டது.[2] இந்தியா விடுதலை அடைவதற்கு முன்பாகத் தொடங்கப்பட்ட இவ்வைப்பகம், அடுத்து வந்த புத்தாண்டு நாளிலிருந்து தனது வணிக நடவடிக்கைகளைத் தொடங்கியது. தற்போது இவ்வைப்பகத்திற்கு 431 கிளைகள் செயற்பட்டு வருகின்றன.[3]

மேற்கோள்கள்[தொகு]