இந்திய வங்கிச் சீர்தரம் மற்றும் நெறிகளுக்கான வாரியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்திய வங்கிச் சீர்தரம் மற்றும் நெறிகளுக்கான வாரியம்
Banking Codes and Standards Board of India
துறை மேலோட்டம்
அமைப்புபெப்ரவரி 18, 2006
தலைமையகம்மும்பை, மகாராட்டிரம்
அமைப்பு தலைமை
  • ஏ சி மகஜன், தலைவர்
வலைத்தளம்www.bcsbi.org.in

இந்திய வங்கிச் சீர்தரம் மற்றும் நெறிகளுக்கான வாரியம் (The Banking Codes and Standards Board of India) இந்தியாவில் வங்கிச் சேவைகளை நுகர்வோர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் சுதந்திரமான வங்கித் தொழில் கண்காணிப்பு அமைப்பாகும். "வாடிக்கையாளர்களுக்கு வங்கிகளின் கடமை நெறிகளை" வங்கிகள் கடைபிடிப்பதை மேற்பார்வையிடுகிறது. இது ஓர் ஈட்டுத்தொகை வழங்கும் அமைப்பல்ல; அமைப்புரீதியான கடைபிடிப்பு குறைபாடுகளை அடையாளம் காட்டுவதற்காகவே தனிநபர் குறைகளை கவனிக்கின்றது. பெப்ரவரி 18, 2006இல் சங்கங்களின் பதிவு சட்டம் 1860இன்படி சுதந்திரமான, தன்னாட்சி பெற்ற தனிச் சங்கமாக பதிவு செய்துள்ளது.[1] இந்த வாரியத்திற்கு இந்திய ரிசர்வ் வங்கி முதல் ஐந்து ஆண்டுகளுக்கான செலவை ஏற்பதன் மூலம் நிதி ஆதரவு தந்துள்ளது.[2]

முதன்மை நோக்கங்கள்[தொகு]

  • தங்கள் வாடிக்கையாளர்களுக்கு நியாயமான சேவைகள் தரும் பொருட்டு வங்கிகளுக்கான தன்னார்வ, முழுமையான சீர்தரங்களையும் நெறிகளையும் திட்டமிடுதல், சிறப்பாக்குதல், உருவாக்குதல், மேம்படுத்துதல், பரப்புரை ஆற்றல், மற்றும் அச்சிடல்.
  • இந்தச் சீர்தரங்களும் நெறிகளும் பேணப்படுவதை கண்காணிக்கவும் உறுதி செய்யவும் தனியான, தன்னாட்சி பெற்ற கண்காணிப்பாளராக இயங்குதல்.
  • உலகின் பிற பகுதிகளில் நிகழ்காலத்தில் கடைபிடிக்கப்படும் சீர்தரங்களையும் நெறிகளையும் கண்டறிந்து ஆராய்தல்.
  • வங்கிகளுடன் சீர்தரங்களையும் நெறிகளையும் கடைபிடிக்க வரைமொழி உடன்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ளுதல்; உடன்பாடு கண்ட வங்கி ஊழியர்களுக்கு பயிற்சி வழங்குதல்.

ஆட்சிக் குழாம்[தொகு]

தலைவர் ஒருவருடன் ஆறு உறுப்பினர்கள் அடங்கிய ஆட்சிக் குழாமால் வாரியம் நிர்வகிக்கப்படுகிறது.

உறுப்பினர்கள்[தொகு]

பெப்ரவரி 2013 நிலவரப்படி, 69 பதிவுற்ற வணிக வங்கிகளும், 11 ஊரக கூட்டுறவு வங்கிகளும் 54 மண்டல் ஊரக வங்கிகளும் இந்த வாரியத்தில் உறுப்பினராக உள்ளன.

மேற்சான்றுகள்[தொகு]

  1. "Annual Report 2006 - 2007" (PDF). Archived from the original (PDF) on 11 அக்டோபர் 2012. பார்க்கப்பட்ட நாள் 27 February 2013.
  2. "Banking Codes and Standards Board of India". Archived from the original on 23 ஜனவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 27 February 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புகள்[தொகு]