பீகார் வடக்கு கிராம வங்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பீகார் வடக்கு கிராம வங்கி
Uttar Bihar Gramin Bank
வகைமண்டல ஊரக வங்கி
தலைமையகம்முசாபர்பூர், இந்தியா
சேவை வழங்கும் பகுதிஅக்ராரியா, தர்பங்கா, கிழக்கு சம்பாரண், கோபால்கஞ்ச், கட்டிஹார், கிசன்கஞ்சு, மாதேபுரம், மதுபனி, முசாபர்பூர், பூர்ணியா, சகார்சா, சரண், சேஹார், சீதாமரி, சீவான், சுபால், மேற்கு சம்பாரண் & வைசாலி.
உரிமையாளர்கள்இந்திய அரசு (50%) பீகார் அரசு (15%) இந்திய மத்திய வங்கி (35%)
தாய் நிறுவனம்நிதி அமைச்சகம் (இந்தியா) , இந்திய அரசு
இணையத்தளம்ubgb.in

பீகார் வடக்கு கிராம வங்கி (Uttar Bihar Gramin Bank, உத்தர் பீகார் கிராமின் வங்கி) என்பது இந்தியாவின் பீகார் மாநிலத்தில் உள்ள ஒரு மண்டல ஊரக வங்கி ஆகும்.[1] இது இந்திய அரசின் நிதி அமைச்சகத்துக்குச் |சொந்தமான வங்கி. கிளை வலையமைப்பு, பணியாளர்கள் எண்ணிக்கை மற்றும் செயல்பாட்டுப் பரப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியாவிலுள்ள மிகப்பெரிய மண்டல ஊரக வங்கிகளில் இதுவும் ஒன்றாகும்.[2][3]

மண்டல ஊரக வங்கிச் சட்டம், 1976 (21-ன் 1976) 23 ஏ பிரிவின் துணைப் பிரிவு (1)-ன் கீழ் இந்திய நிதி அமைச்சகம் அரசிதழில் 1976ஆம் ஆண்டில் வெளியிட்ட அறிவிப்பின்படி, உத்தர பீகார் க்ஷேத்ரிய கிராமின் வங்கி மற்றும் கோசி க்ஷேத்ரிய கிராமின் வங்கி (பிராந்திய கிராமப்புற வங்கிகளை மாற்றுதல்) ஆகியவற்றை இணைத்து இந்த வங்கியை இந்திய அரசு உருவாக்கியது.[4] இது பீகார் மாநிலத்தில் உள்ள இந்திய மத்திய வங்கியால், இப்பகுதியின் ஒரே மண்டல ஊரக வங்கி என்ற வகையில் நிதிநல்கை செய்யப்படுகிறது.[1][5] உத்தர பீகார் கிராமின் வங்கியின் தலைமையகம் முசாபர்பூரில் செயல்படுகிறது.[6][7]

2023 ஆகத்து திங்களின்படி பீகார் வடக்கு கிராம வங்கியின் தலைவர் சோஹைல் அகமது ஆவார்.[1]

வட்டார அலுவலகம்[தொகு]

பீகார் வடக்கு கிராம வங்கி 14 வட்டார அலுவலகங்களைக் கொண்டுள்ளது.[8]

 • அராரியா, ஏடிபி சௌக், அராரியா.
 • பெட்டியா, சந்தை நிலையம்பெட்டியா.
 • சப்ரா, தஹியவன், சப்ரா.
 • தர்பங்கா, தேவேந்திர லோக், லஹ்ரியாசரை, தர்பங்கா.
 • கோபால்கஞ்ச், வைபவ் உணவக வளாகம், கோபால்கஞ்ச்.
 • ஹாஜிப்பூர், ஹாஜிபூர்.
 • ஜஞ்சர்பூர், கிராந்தி பவன், ஜஞ்சர்பூர், மதுபானி.
 • மதுபானி, பரிஷத் பஜார், மதுபானி.
 • மோதிஹரி, நாராயண் வளாகம், பாலுவா தால், மோதிஹரி.
 • முசாபர்பூர், ராம்ரேகா வளாகம், முசாபர்பூர்.
 • பூர்ணியா, ஸ்ரீ நகர் ஹடா, பூர்ணியா.
 • சகார்சா, டிபி சாலை, சஹர்சா.
 • சீதாமரி, தும்ரா சாலை, சீதாமரி.
 • சீவான், ராஜ்வான்சி நகர், சிவன்.

செயல்படும் பகுதிகள்[தொகு]

பீகார் வடக்கு கிராம வங்கி பீகார் மாநிலத்தில் 18 மாவட்டங்களில் 1032 கிளைகளின் ஒருங்கிணைப்பு மூலம் செயல்படுகிறது.[9][10]

உத்தர பீகார் கிராமின் வங்கியின் இந்திய நிதிசார் முறைமைக் குறியீடு (IFSC):CBIN0R10001 [11]

விருது[தொகு]

வேளாண்மைக்கும் ஊர்ப்புற வளர்ச்சிக்குமான தேசிய வங்கி ஏற்பாடு செய்த மாநில கடன் கருத்தரங்கில், மண்டல ஊரகப் பிரிவில் சுய உதவிக் குழுக்களை வங்கியுடன் இணைத்த வகையில் சிறந்த செயல்பாட்டிற்காக வங்கிக்கு விருது வழங்கப்பட்டது.[12]

ஆட்சேர்ப்பு[தொகு]

ஒவ்வொரு ஆண்டும் வங்கி பணியாளர் தேர்வாணையம் நடத்தும் பொது எழுத்துத் தேர்வு மூலம் வங்கி அதிகாரிகள் நியமனம் செய்யப்படுகின்றனர்.[13]

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 "State wise list of Regional Rural Banks". http://financialservices.gov.in/banking/StatewiseListRRBs.pdf. 
 2. "Central Bank of India and Wipro Sign 5 Year Strategic Partnership". http://www.wipro.com/newsroom/Central-Bank-of-India-and-Wipro-sign-5-year-Strategic-Partnership. 
 3. Dr. N K Thingalaya. "Banking Spread: Gramin Banks versus Other Banks". http://www.iibf.org.in/scripts/monthlycolumn.asp. 
 4. "About Us". http://www.ubgb.in/about.php. 
 5. "Central Bank of India". http://www.sebi.gov.in/dp/cbiletterofoffer.pdf. 
 6. "Uttar Bihar Gramin Bank Facts: Uttar Bihar Gramin Bank is a Gramin Bank and its Headquarters is situated in Muzzafarpur". http://www.bankinformations.com/bank_logo_and_head_office_detail.aspx?banktype=gramin_bank&bank=uttar_bihar_gramin_bank. 
 7. "Uttar Bihar Gramin Bank". http://www.fundoodata.com/companies-detail/Uttar-Bihar-Gramin-Bank/68680.html. 
 8. "Regional Offices". http://www.ubgb.in/regionaloffi.php. 
 9. "Financial inclusion plan for 40 banks" இம் மூலத்தில் இருந்து 21 September 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130921060150/http://www.telegraphindia.com/1110914/jsp/bihar/story_14503446.jsp. 
 10. "Central Bank of India and Wipro Sign 5 Year Strategic Partnership". http://www.wipro.com/newsroom/Central-Bank-of-India-and-Wipro-sign-5-year-Strategic-Partnership. 
 11. "Central Bank Of India, Uttar Bihar Gramin Bank Muzaffarpur branch - IFSC, MICR Code, Address, Contact Details, etc.". https://banksifsccode.org/central_bank_of_india/bihar/muzaffarpur/uttar_bihar_gramin_bank_muzaffarpur. 
 12. Vithika Salomi. "Nabard puts Bihar's credit potential in priority sector at Rs 40,829 crore" இம் மூலத்தில் இருந்து 2013-09-21 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130921060826/http://articles.timesofindia.indiatimes.com/2013-02-10/patna/37019762_1_priority-sector-state-credit-seminar-nabard. 
 13. "Common Written Examination". http://www.ibps.in/html/cwe_rrb.htm. 

வெளி இணைப்புகள்[தொகு]