இந்தியாவின் புதிய வங்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தியாவின் புதிய வங்கி (New Bank of India) 1936இல் லாகூரில் நிறுவப்பட்ட வணிக வங்கியாகும். இவ்வங்கி, தனது தலைமையகத்தை 1947இல் அமிர்தசரஸ்க்கும், 1956இல் புது தில்லிக்கு‌ம் மாற்றிக் கொண்டது. இவ்வங்கி, 1965இல் தித்வானா தொழில்துறை வங்கியையும், 1969இல் சாவ்லா வங்கியையும், 1971இல் சகுகாரா வங்கியையும் தன்னுடன் இணைத்துக் கொண்டது. இவ்வங்கியானது பஞ்சாப் மற்றும் காஷ்மீர் வங்கியையும் தன்னுடன் இணைத்துக் கொண்டது.

இணைத்துக் கொண்ட வங்கிகள்[தொகு]

  • தித்வானா தொழில்துறை வங்கி 1925இல் தித்வானாவில் நிறுவப்பட்ட வங்கியாகும்.
  • 1913ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட சாவ்லா வங்கி பன்னுவில் தனது பதிவு அலுவலகத்துடன் செயற்பட்டு வந்தது. இவ்வங்கிக்கு டேராடூனில் ஒரு கிளை அலுவலகம் செயற்பட்டது. இந்திய பிரிவினையின் போது இவ்வங்கியில் கணக்கு வைத்திருந்தவர்களிலும், இவ்வங்கிக்கு கடனளித்தவர்களிலும் 95% விழுக்காட்டிற்கும் அதிகமானவர்கள் இந்திய பகுதிகளுக்கு இடம்பெயர்ந்தனர்.
  • சகுகாரா வங்கி 1912ஆம் ஆண்டில் லூதியானாவில் தொடங்கப்பட்ட வங்கியாகும். இவ்வங்கிக்கு பாகிஸ்தானிலும் கிளைகள் செயற்பட்டு வந்தன. இந்திய பிரிவினையின் போது இந்த கிளைகளை இழக்க நேர்ந்தது.

இணைப்பு[தொகு]

இந்திய அரசு 1980இல் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட போது இவ்வங்கியும் தேசியமயமாக்கப்பட்டது. 1993ஆம் ஆண்டில் இவ்வங்கியை பஞ்சாப் தேசிய வங்கி தன்னுடன் இணைத்துக் கொண்டது. [1][2] ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கி, மற்றொரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியை தன்னுடன் இணைத்துக் கொண்டது இதுவே முதல்முறையாகும். இதற்கு முன்பாக இதுபோ‌ன்றதொரு இணைப்பானது இந்தியாவில் வேறு எங்கும் நடைபெறவில்லை.[3]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]