திருவாங்கூர் ஸ்டேட் வங்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
திருவாங்கூர் ஸ்டேட் வங்கி
வகைபொது
நிலை2017 மார்ச் 31 அன்று பாரத ஸ்டேட் வங்கியுடன் ஒன்றிணைக்கப்பட்டது.
நிறுவுகைதிருவனந்தபுரம், 1945
தலைமையகம்குழும மையம்,
பூஜப்புரா,
திருவனந்தபுரம் கேரளா இந்தியா
முக்கிய நபர்கள்ப. நந்தகுமாரன், மேலாண்மை இயக்குநர்
தொழில்துறைவங்கி
காப்பீடு
மூலதன சந்தைகள் மற்றும் தொடர்புடைய தொழில்கள்
உற்பத்திகள்கடன்கள்
கடனட்டைகள்,
சேமிப்பு
முதலீட்டு சாதனங்கள்
ஆயுள் காப்பீடு முதலியன.
இணையத்தளம்திருவாங்கூர் ஸ்டேட் வங்கி


திருவாங்கூர் ஸ்டேட் வங்கி (SBT) கேரளாவில் நிறுவப்பட்ட ஸ்டேட் வங்கி குழுமத்தைச் சேர்ந்த வங்கியாகும். இந்த வங்கிக்கு கேரள மாநிலத்தில் உள்ள கிளைகள் மற்றும் இந்தியாவின் பிற 16 மாநிலங்களில் உள்ள கிளைகள் உட்பட மொத்தம் 1013 கிளைகள் உள்ளன.

தமிழ்நாடு மாநிலத்தில் மேலும் கிளைகள் தொடங்கி வங்கிச் சேவையை விரிவாக்கம் செய்யவிருக்கும் திருவாங்கூர் ஸ்டேட் வங்கி அதன் மண்டல அலுவலகத்தை மதுரையில் திறக்கவிருக்கிறது. தமிழ்நாடு மாநிலத்தில் நடைபெறவிருக்கும் பணிகளை ஒருங்கிணைப்பதற்கென்றே புதிதாக பொது மேலாளரும் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஒன்றிணைப்பு[தொகு]

2016 ஆம் ஆண்டில், திருவாங்கூர் ஸ்டேட் வங்கி உள்ளிட்ட ஐந்து பொதுத்துறை வங்கிகளான பிகானீர் மற்றும் ஜெய்ப்பூர் ஸ்டேட் வங்கி, ஐதராபாத் ஸ்டேட் வங்கி, பாட்டியாலா ஸ்டேட் வங்கி, ஸ்டேட் பேங்க் ஆஃப் திருவிதாங்கூர், மைசூர் ஸ்டேட் வங்கி ஆகிய வங்கிகள், பாரத ஸ்டேட் வங்கியுடன் ஒன்றிணைக்க திட்டமிடப்பட்டது, இதற்கு இந்திய அரசு 2017 பிப்ரவரி 15 ஆம் தேதி ஒப்புதல் அளித்தது. இறுதியாக 2017 மார்ச் 31 அன்று பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைக்கப்பட்டன.[1]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
State Bank of Travancore
என்பதின் ஊடகங்கள் உள்ளன.


மேற்கோள்கள்[தொகு]

  1. ந. வினோத் குமார் (7 ஆகத்து 2017). "வங்கிகளை இணைக்கலாமா?". கட்டுரை. தி இந்து. 7 ஆகத்து 2017 அன்று பார்க்கப்பட்டது.