இந்திய அஞ்சல் கட்டண வங்கி
வகை | பிரிவு (வணிகம்), இந்திய அஞ்சல் துறை |
---|---|
சேவை வழங்கும் பகுதி | இந்தியா |
முதன்மை நபர்கள் |
|
தொழில்துறை | நிதிச் சேவைகள் |
உற்பத்திகள் | வங்கி |
சேவைகள் | நிதிச் சேவை |
உரிமையாளர்கள் | இந்திய அஞ்சல் துறை, இந்திய அஞ்சல் துறை, தொலை தொடர்பு துறை, இந்திய அரசு |
இந்தியா அஞ்சல் கட்டண வங்கி (India Post Payments Bank) என்பது இந்திய அரசின் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் அஞ்சல் துறையின் உரிமையின் கீழ் செயல்படும் இந்தியத் தபால் துறையின் வணிக பிரிவாகும். 2018-ல் துவங்கப்பட்ட இந்த வங்கி சேவையில் சனவரி 2022 நிலவரப்படி 6 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
வரலாறு
[தொகு]
19 ஆகத்து 2015 அன்று, இந்திய அஞ்சல் துறை இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து பணம் செலுத்தும் வங்கியை நடத்துவதற்கான உரிமத்தைப் பெற்றது. 17 ஆகத்து 2016 அன்று, பணம் செலுத்தும் வங்கியை அமைப்பதற்காக பொது வரையறுக்கப்பட்ட அரசு நிறுவனமாகப் பதிவு செய்யப்பட்டது.[1] இந்திய அஞ்சல் கட்டண வங்கி தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் இந்திய அஞ்சல் துறையுடன் செயல்படுகிறது.[1][2]
இந்திய அஞ்சல் கட்டண வங்கியின் முன்னோட்டத் திட்டம் 30 சனவரி 2017 அன்று ராய்பூர் மற்றும் ராஞ்சியில் தொடங்கப்பட்டது.[1] வங்கியை அமைப்பதற்காக ஆகத்து 2018-ல், மத்திய அமைச்சரவை ₹1,435 கோடி (US$180 மில்லியன்) ரூபாய்க்கு ஒப்புதல் அளித்தது.[3] முதல் கட்டமாக 650 கிளைகள் மற்றும் 3,250 தபால் நிலையங்களை வங்கியின் அணுகல் மையமாக 1 செப்டம்பர் 2018 அன்று திறக்கப்பட்டது.[4][5] முதற்கட்டமாகப் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தபால்காரர்கள் இச்சேவைக்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.[6][7] திசம்பர் 2020க்குள் சுமார் 4 கோடி வாடிக்கையாளர்களை வங்கி பெற்றுள்ளது.[8] சனவரி 2022-ல், இந்தியா அஞ்சல் கட்டண வங்கி 8 கோடி வாடிக்கையாளர்களைக் கடந்துள்ளது.[9]
சேவைகள்
[தொகு]
இந்திய அஞ்சல் கட்டண வங்கியானது இந்தியாவின் 155,015 தபால் நிலையங்களையும் வங்கியின் அணுகல் மையமாகவும், 3 லட்சம் தபால்காரர்கள் மற்றும் கிராம தபால் ஊழியர்களை வங்கி சேவைகளை வழங்கவும் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.[1][2]
இந்திய அஞ்சல் கட்டண வங்கி சேமிப்புக் கணக்குகள், பணப் பரிமாற்றம் மற்றும் மூன்றாம் தரப்பினர் மூலம் காப்பீடுகள், இரசீது மற்றும் பயன்பாட்டுக் கொடுப்பனவுகளை வழங்குகிறது.[1][10][11]
இந்த வங்கி கீழே குறிப்பிட்ட அம்சங்களையும் வழங்குகிறது:
- கணக்கு: வங்கி சேமிப்புக் கணக்கு மற்றும் நடப்புக் கணக்குகளை ₹2 இலட்சம் வரையில் வழங்குகிறது.
- விரைவான எதிர்வினை குறியீடு அட்டை: கணக்கு எண்கள், தனிப்பட்ட அடையாள எண் மற்றும் கடவுச்சொற்களை நினைவில் வைத்திருக்க வேண்டிய தேவையை நீக்கி வாடிக்கையாளர்கள் விரைவான் எதிர்வினை குறியீடு கட்டணங்களைப் பயன்படுத்தலாம்.
- ஒருமித்த கொடுக்கல் இணைப்பிடைமுகம்
- உடனடி கொடுக்கல் சேவை
- தேசிய மின்வழி நிதி மாற்றம்
- நிகழ்நேர பெருந்திரள் தீர்வு
- பாரத் கட்டணம் செலுத்து முறைமை
- நேரடி பலன் பரிமாற்றம்
- ரூபே பற்று அட்டை
- ஆதார் இணைக்கப்பட்ட கட்டணச் சேவை
இந்திய அஞ்சல் கட்டண வங்கியானது சுமார் 17 கோடி அஞ்சல் சேமிப்பு வங்கிக் கணக்குகளை தன் கணக்குகளுடன் இணைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.[12]
மேலும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 "About IPPB - IPPB". ippbonline.com. Retrieved 2018-09-05.
- ↑ 2.0 2.1 "All you want to know about...India Post Payment Bank". @businessline. https://www.thehindubusinessline.com/opinion/columns/slate/all-you-want-to-know-about/article24856746.ece.
- ↑ Press Information Bureau. "Cabinet approves Revised Cost Estimate for setting up of India Post Payments Bank". pib.nic.in. Retrieved 2018-09-05.
- ↑ "India Post Payments Bank launched: Some important facts about IPPB". dna. https://www.dnaindia.com/business/photo-gallery-india-post-payments-bank-launched-some-important-facts-about-ippb-2657993.
- ↑ Agarwal, Nikhil (2018-09-04). "India Post Payments Bank replaces ATM/debit cards with QR cards. How to use them". Livemint. https://www.livemint.com/Money/Dw9KVmmOnVvh7V6w7ttn9K/India-Post-Payment-Bank-ippb-app-ATM-debit-cards-QR-cards.html.
- ↑ Sharma, Devansh (2018-08-20). "Your friendly neighbourhood postman is about to become a banker". The Economic Times. https://economictimes.indiatimes.com/news/et-explains/your-friendly-neighbourhood-postman-is-about-to-become-a-banker/articleshow/65451533.cms.
- ↑ Sengupta, Devina; Singh, Karunjit (2018-08-31). "Government expects India post payments bank to be profitable after 2 years: Communications minister Manoj Sinha". The Economic Times. https://economictimes.indiatimes.com/industry/banking/finance/banking/government-expects-india-post-payments-bank-to-be-profitable-after-2-years-communications-minister-manoj-sinha/articleshow/65616188.cms.
- ↑ "India Post Payments Bank adds 2.48 crore customers in a year". September 2020.
- ↑ "India Post Payments Bank customer base crosses 5-crore mark". The Economic Times. https://economictimes.indiatimes.com/industry/banking/finance/banking/india-post-payments-bank-customer-base-crosses-5-crore-mark/articleshow/88978866.cms.
- ↑ Gupta, Komal (2018-09-03). "Explained: India Post Payments Bank, in 5 points". Livemint. https://www.livemint.com/Industry/J2dr9UXU2KbyGwpe1ATGrM/Explained-India-Post-Payments-Bank-in-5-points.html.
- ↑ "India Post Payments Bank will deliver banking services to every Indian's doorstep, says PM Modi". www.businesstoday.in. Retrieved 2018-09-27.
- ↑ Livemint (2018-08-31). "India Post Payments Bank launched: 10 things to know". Mint. https://www.livemint.com/Industry/0ZCVVXLyO8E9W3DPLodsqK/India-Post-Payments-Bank-launch-tomorrow-10-things-to-know.html.