தகவல் தொடர்பு அமைச்சகம், இந்தியா
![]() | |
துறை மேலோட்டம் | |
---|---|
ஆட்சி எல்லை | இந்திய அரசு |
தலைமையகம் | சன்சார் பவன் 20, அசோகா சாலை, புது தில்லி, இந்தியா |
ஆண்டு நிதி | ₹75,265.22 (US$940) (2021–22)[1] |
பொறுப்பான அமைச்சர்கள் |
|
அமைப்பு தலைமைகள் |
|
கீழ் அமைப்புகள் |
|
வலைத்தளம் | https://www.dotindia.co.in/ & https://www.indiapost.gov.in/vas/Pages/IndiaPostHome.aspx |
இந்தியத் தொலைத்தொடர்பு அமைச்சகம் (Ministry of Communications) என்பது இந்திய அரசின் அமைச்சகங்களில் ஒன்றாகும். இதன் அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் மற்றும் இணை அமைச்சர் தேவுசிங் சௌகான் ஆவர். இந்த அமைச்சகத்தின் கீழ் இந்தியத் தொலைத் தொடர்புத் துறை மற்றும் இந்திய அஞ்சல் துறைகள் செயல்படுகிறது. 19 சூலை 2016 அன்று தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்ச்கத்தை பிரித்து இந்த அமைச்சகம் நிறுவப்பட்டது.[2]
அமைச்சகத்தின் கீழ் உள்ள பொதுத்துறை நிறுவனங்கள்=[தொகு]
- பிஎஸ்என்எல்
- இந்திய தொலைபேசி தொழில் நிறுவனம்
- பாரத் அகண்ட அலைக்கற்றை வலையமைப்பு
- இந்திய தொலைத்தொடர்பு ஆலோசனை நிறுவனம்
ஆய்வு அமைப்பு[தொகு]
- தொலைத்தொடர்பு கருவிகள் மேம்பாடு மையம்
சிறப்பு அலகுகள்[தொகு]
- கம்பியற்ற தொலைத்தொடர்புக்கு திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்பு பிரிவு
- தொலைத்தொடர்பு பொறியியல் மையம்[3]
- தொலைத்தொடர்பு கணக்குகளின் கட்டுப்பாட்டாளர்
- தொலைத்தொடர்பு அமலாக்கம் மற்றும் கண்காணிப்பு மையம்
இலக்குகள்[தொகு]
- இ-அரசு: இ-சேவைகளை வழங்குவதற்கான மின் உள்கட்டமைப்பை வழங்குதல்
- இ-இன்டஸ்ட்ரி: மின்னணு கருவிகள் உற்பத்தி மற்றும் ஐடி-ஐடிஇஎஸ் துறையை மேம்படுத்துதல்
- இ-புதுமை/ஆர்&டி: ஆர்&டி கட்டமைப்பை செயல்படுத்துதல் - ஐசிடி&இயின் வளர்ந்து வரும் பகுதிகளில் புதுமை/ஆர்&டி உள்கட்டமைப்பை உருவாக்குதல்/ஆர்&டி மொழிபெயர்ப்புக்கான பொறிமுறையை நிறுவுதல்
- இ-கற்றல்: மின்-திறன் மற்றும் அறிவு நெட்வொர்க்கை மேம்படுத்துவதற்கான ஆதரவை வழங்குதல்
- இ-பாதுகாப்பு: இந்தியாவின் இணைய இடத்தைப் பாதுகாத்தல்
- இணைய நிர்வாகம்: இணைய நிர்வாகத்தின் உலகளாவிய தளங்களில் இந்தியாவின் பங்கை மேம்படுத்துதல்.