இந்தியக் குடியரசின் 17வது அமைச்சரவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய ஆய மற்றும் இணை அமைச்சரவை மே, 2019[தொகு]

இந்த பட்டியல் தற்பொழுது அமைக்கப்பட்டிருக்கும் இந்திய அமைச்சரவையின் பட்டியலாகும்.[1][2][3] அனைத்து அமைச்சர்களும் புது தில்லியில் உள்ள இந்திய ஒன்றிய அமைச்சரவை அலுவலகத்தின்படி அமர்த்தப்பட்டுள்ளனர். அமைச்சரவையில் இடம் பெறுபவர் இந்திய அரசியலைமைப்பில் வரையறுத்துள்ளபடி அமைச்சர் பொறுப்பேற்கும் உறுப்பினர் நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் ஏதாவதொன்றில் உறுப்பினராக இருக்கவேண்டும். அந்த விதியின்படி பிரதமர் நரேந்திர மோதி நாடாளுமன்ற கீழவை அதாவது மக்களவை உறுப்பினராக இருந்துகொண்டு பிரதமர் பொறுப்பை (2019-2024) இந்த அமைச்சரவையின் ஆயுள் முழுவதும் தொடர்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமைச்சர்கள் பின்வரும் மூன்று வகையில் இறங்கு வரிசைகளின் படி பொறுப்பேற்கின்றனர்.

 • ஒன்றிய ஆய அமைச்சர் (cabinet-கேபினட்)- அமைச்சகத்தின் முதுநிலை (அ) மூத்த அமைச்சர். ஆய அமைச்சர் கூடுதலாக பிற அமைச்சகத்தின் அலுவல்களையும், அந்த அமைச்சகத்திற்கு அமைச்சர் நியமனம் செய்யப்படாத பட்சத்தில், மேற்கொள்வார். பிரதமர் தலைமையேற்கும் கேபினட் கூட்டங்களில் இவர்கள் கலந்து கொள்வதால் (கேபினட்) ஆய அமைச்சர் என அழைக்கப்படுகிறார்.
 • ஒன்றிய இணை அமைச்சர் (தனி பொறுப்புகளுடன்)- ஆய அமைச்சர் மேற்பார்வையிடாத (அ) கண்காணிக்காத இலாக்காவை கவனிப்பர்.
 • ஒன்றிய இணை அமைச்சர்- இளநிலை அமைச்சராக ஆய அமைச்சரின் மேற்பார்வையில் (அ) கண்காணிப்பில், அமைச்சகத்தின் பொறுப்புகளை மேற்கொள்வது. உ.தா நிதி அமைச்சகத்தின் இணையமைச்சர் என்பது அந்த அமைச்சகத்தின் வரிவிதிப்பை கண்காணிப்பது ஆகும். கேபினட் கூட்டங்களில் கலந்து கொள்ள மாட்டார்.

அமைச்சரவை[தொகு]

மத்திய ஆய அமைச்சர்கள்[தொகு]

எண் அமைச்சகம் அமைச்சர் ஒளிப்படம் கட்சி
1 இந்தியப் பிரதமர்
பணியாளர் நலன், அணுசக்தி, விண்வெளி,
கொள்கை சார்ந்த விவகாரங்கள் துறை
நரேந்திர மோதி பாரதிய ஜனதா கட்சி
2 உள்துறை அமைச்சர் அமித் சா பாரதிய ஜனதா கட்சி
3 பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாரதிய ஜனதா கட்சி
4 நிதி அமைச்சர்
பெருநிறுவனங்களின் விவகாரத்துறை அமைச்சர்
நிர்மலா சீத்தாராமன் பாரதிய ஜனதா கட்சி
5 வெளியுறவுத் துறை அமைச்சர் சுப்பிரமணியம் செயசங்கர் பாரதிய ஜனதா கட்சி
6 சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர்
சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சர்
நிதின் கட்காரி பாரதிய ஜனதா கட்சி
7 வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர்
நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம்
ஜவுளித் துறை
பியூஷ் கோயல் பாரதிய ஜனதா கட்சி
8 மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்
சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர்
ஸ்மிருதி இரானி

பாரதிய ஜனதா கட்சி
9 பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா பாரதிய ஜனதா கட்சி
10 சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ பாரதிய ஜனதா கட்சி
11 கல்வித் துறை அமைச்சகம்|கல்வி அமைச்சர்
திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு அமைச்சர்
தர்மேந்திர பிரதான் பாரதிய ஜனதா கட்சி
12 விவசாயத் துறை அமைச்சகம் நரேந்திர சிங் தோமர் பாரதிய ஜனதா கட்சி
13 சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் வீரேந்திர குமார் காதிக் பாரதிய ஜனதா கட்சி
14 சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
வேதிப்பொருள் மற்றும் உரத்துறை அமைச்சகம்
மன்சுக் எல். மாண்டவியா பாரதிய ஜனதா கட்சி
15 சுற்றுச்சூழல் மற்றும் வனங்கள் அமைச்சகம்
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
பூபேந்தர் யாதவ் பாரதிய ஜனதா கட்சி
16 திறன் மேம்பாட்டு மற்றும் தொழில் முனைவோர் நலத்துறை அமைச்சர் மகேந்திரநாத் பாண்டே பாரதிய ஜனதா கட்சி
17 நாடாளுமன்ற விவகார அமைச்சர்
நிலக்கரி மற்றும்
சுரங்கத்துறை அமைச்சர்
பிரகலாத ஜோஷி பாரதிய ஜனதா கட்சி
18 ஜல் சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் பாரதிய ஜனதா கட்சி
19 குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் அமைச்சகம் நாராயண் ரானே பாரதிய ஜனதா கட்சி
20 மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்பண்ணை அமைச்சர் பர்சோத்தம் ரூபாலா பாரதிய ஜனதா கட்சி
21 இரயில்வே அமைச்சர்
தகவல் தொடர்பு அமைச்சர்
மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர்
அஸ்வினி வைஷ்னவ் | பாரதிய ஜனதா கட்சி
22 துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சர்
ஆயுஷ் அமைச்சர்
சர்பானந்த சோனாவால் பாரதிய ஜனதா கட்சி
23 ஊரக வளர்ச்சி அமைச்சர்
பஞ்சாயத்து ராஜ் அமைச்சர்
கிரிராஜ் சிங் பாரதிய ஜனதா கட்சி
24 விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிர் சிந்தியா பாரதிய ஜனதா கட்சி
25 உருக்கு அமைச்சகம் இராமச்சந்திர பிரசாத் சிங் ஐக்கிய ஜனதா தளம்
26 உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகம் பசுபதி குமார் பராஸ் லோக் ஜனசக்தி கட்சி
27 ஆற்றல்த் துறை அமைச்சகம்
புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல்
ராஜ்குமார் சிங் பாரதிய ஜனதா கட்சி
28 பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர்
வீட்டுவசதி மற்றும் நகரப்புற விவகாரங்கள் அமைச்சர்
ஹர்தீப் சிங் பூரி பாரதிய ஜனதா கட்சி
29 சுற்றுலாத் துறை அமைச்சகம்
வடகிழக்கு பிரதேச மேம்பாட்டு அமைச்சர்
ஜி. கிஷன் ரெட்டி பாரதிய ஜனதா கட்சி
30 தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர்
இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர்
அனுராக் தாகூர் பாரதிய ஜனதா கட்சி
சான்றுகள்: Official Government of India publication

மத்திய இணை அமைச்சர் (தனி பொறுப்புகளுடன்)[தொகு]

 1. சந்தோஷ் குமார் கங்க்வார் - தொழிலாளர் & வேலைவாய்ப்புத் துறை
 2. ராவ் இந்தர்ஜித் சிங் - புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை
 3. ஸ்ரீபாத் யசோ நாயக் -யோகா மற்றும் ஆயுர்வேதம், யுனானி, இயற்கை, சித்த, ஹோமியோபதி மருத்துவத் துறைகள் (AYUSH); மற்றும் பாதுகாப்புத் துறை
 4. ஜிதேந்திர சிங் - வடகிழக்கு பிரதேச மேம்பாடு, பிரதமர் அலுவலகம், பணியாளர் துறை, பொதுமக்கள் குறை தீர்வு மற்றும் ஓய்வூதியம் மற்றும் அணுசக்தி துறை மற்றும் விண்வெளித் துறை
 5. கிரண் ரிஜிஜு - இளைஞர் நலம் & விளையாட்டுத் துறை மற்றும் சிறுபான்மையோர் விவகாரங்கள்
 6. பிரகலாத் சிங் படேல் - பண்பாடு & சுற்றுலாத் துறை
 7. ராஜ்குமார் சிங் - மின்சக்தி, நிலக்கரி மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறை மற்றும் திறன் மேம்பாடு & தொழில்முனைவுத் துறை
 8. ஹர்தீப் சிங் பூரி - வீட்டுவசதி, நகர்புற வளர்ச்சி, விமானப் போக்குவரத்து மற்றும் வணிகம் & தொழில்கள்
 9. மன்சுக் எல். மாண்டவியா - கப்பல் துறை, வேதியல் மற்றும் உரத் துறை

மத்திய இணை அமைச்சர்[தொகு]

தனிப் பொறுப்பு அற்ற இராஜாங்க அமைச்சர்கள்:

 1. பக்கன் சிங் குலாஸ்தே - இரும்புத் துறை
 2. அஸ்வின் குமார் சௌபே - சுகாதாரம் & குடும்ப நலத் துறை
 3. அர்ஜுன் ராம் மேக்வா - நாடாளுமன்ற விவகாரம், கனரகத் தொழில்கள் & பொதுத்துறை நிறுவனங்கள்
 4. ஜெனரல்(ஓய்வு) வி. கே. சிங் - சாலைப் போக்குவரத்து & நெடுஞ்சாலைகள் துறை
 5. கிருஷ்ணன் பால் - சமூக நீதி & உரிமையளிப்புத் துறை
 6. ராவ் சாகேப் தன்வே - நுகர்வோர் நலன், உணவு & பொது விநியோகம்
 7. ஜி. கிஷன் ரெட்டி - உள்துறை
 8. புருசோத்தம் ரூபாலா - வேளாண்மை & உழவர் நலம்
 9. ராம்தாஸ் அதவாலே - சமூக நீதி & உரிமையளிப்புத் துறை
 10. நிரஞ்சன் ஜோதி - ஊரக வளர்ச்சித் துறை
 11. பாபுல் சுப்ரியா - சுற்றுச்சூழல், வனம் & பருவ நிலை மாற்றம்
 12. சஞ்சீவ் குமார் பல்யான் - கால்நடை வளர்ப்பு, பால் பண்ணை & மீன் வளத் துறை
 13. சஞ்சய் சாம்ராவ் தோத்திரி - மனித வள மேம்பாடு, தகவல் தொடர்பு, மின்னணுவியல் & தகவல் தொழில் நுட்பத் துறை
 14. அனுராக் தாக்கூர் - நிதித் துறை & பெருநிறுவனங்களின் விவகாரங்கள் துறை
 15. சென்னபசப்பா சுரேஷ் அங்காடி - இரயில்வே துறை
 16. நித்தியானந்த ராய் - உள்துறை
 17. ரத்தன் லால் கட்டாரியா - நீர் வளம், சமூக நீதி & அதிகாரமளித்தல் துறை
 18. வி. முரளிதரன் - வெளியுறவுத் துறை & நாடாளுமன்ற விவகாரங்கள் துறை
 19. ரேணுகா சிங் சரௌதா - பழங்குடி மக்கள் மேம்பாட்டுத் துறை
 20. சோம் பிரகாஷ் - தொழில் மற்றும் வணிகம்
 21. இராமேஷ்வர் தெலி - உணவுப் பதப்படுத்தும் தொழில் துறை
 22. பிரதாப் சந்திர சாரங்கி - குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை
 23. கைலாஷ் சௌத்திரி - வேளாண்மை & உழவர் நலம்
 24. தேவஸ்ரீ சௌத்திரி - மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை

மேற்கோள்கள்[தொகு]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

உசாத்துணை[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]