தாஸ் வங்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தாஸ் வங்கி (ஆங்கில மொழி: Dass Bank) இந்தியாவில் செயல்பட்டுவந்த வணிக வங்கியாகும். இது, ஆலமோகன் தாஸ் என்பவரால் 1939இல் கல்கத்தாவில் தொடங்கப்பட்டது. இவ்வங்கி வங்காளம் முழுவதும் 60 கிளைகளுடன் செயற்பட்டுவந்தது. இந்தியப் பிரிவினையில் பாகிஸ்தான் பிரிந்து தனிநாடான போது இவ்வங்கியை மூடும் நிலை ஏற்பட்டது. ஏனெனில் இவ்வங்கியின் அதிகமான கிளைகள் வங்காளத்தின் கிழக்கு பகுதியில் அமைந்திருந்தன. இப்பகுதிகள் புதிய பாகிஸ்தான் நாட்டின் பகுதிகளாயின.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Dass capital". Business Line. January 31, 2000. http://www.thehindubusinessline.in/2000/01/31/stories/103124m3.htm. பார்த்த நாள்: July 21, 2012. [தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாஸ்_வங்கி&oldid=3247569" இலிருந்து மீள்விக்கப்பட்டது