இலங்கை வங்கி
Appearance
வகை | பொது |
---|---|
நிறுவுகை | 1939 [1] |
தொழில்துறை | நிதி |
உற்பத்திகள் | வங்கி மற்றும் நிதியியல் தொடர்பான சேவைகள் |
இணையத்தளம் | web |
இலங்கை வங்கி (Bank of Ceylon) இலங்கையின் மிகப் பெரிய அரசுடமை வங்கி. இதன் தலைமைக் காரியாலயம் இலங்கையின் வர்த்தக மற்றும் அரசியல் தலைநகரமான கொழும்பில் அமைந்துள்ளது. இது 303 உள்நாட்டுக் கிளைகளையும் 3 வெளிநாட்டுக் கிளைகளையும் தன்னகத்தே கொண்டு தனது சேவையினை விரிவாக்கி உள்ளது. இவ்வங்கியானது பல்வேறுபட்ட சில்லறை, மொத்த, சர்வதேச, முதலீட்டு வங்கியியல், பல்வேறுபட்ட சேவைகள், கடனட்டை வசதி, வரவட்டை வசதி, நகை அடகு சேவை போன்ற பல்வேறு சேவைகளை வழங்குகிறது.
வரலாறு
[தொகு]- 1939: இலங்கை வங்கியினை சேர். அன்ரியு கல்டிகொட் அவர்கள் ஆரம்பித்ததுடன் அவரே முதலாவது தலைவருமாவார். அக்காலப்பகுதியின் பிரித்தானிய ஆளுநரான அன்றுவ் கல்டிகொட் அவர்கள் வைபவபூர்வமாக ஆடி மாதம் முதலாம் திகதி 1939 அன்று ஆரம்பித்து வைத்தார்.
- 1941: இதன் முதலாவது கிளையை கண்டியிலும் அதனைத் தொடர்ந்து காலி, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திரிகோணமலை, பதுளை மற்றும் பாணந்துறையிலும் நிறுவியது.
- 1949: இலங்கை வங்கி தனது முதலாவது கடல் கடந்த வங்கியை ஐக்கிய இராச்சியத்தில் இங்கிலாந்தில் தொடங்கியது.
- 1961: இலங்கை அரசாங்கத்தினால் இலங்கை வங்கி தேசிய மயமாக்கப்பட்டது.
- 1972: விவசாய உற்பத்தியாக்கள் சட்டமானது நாடு பூராகவும் பயிர்த்தொழில் சேவை நிலையங்களை உருவாக்குவதற்குக் காரணமாக அமைந்தது. இதன் விளைவாக நாட்டின் கிராம புறங்களுக்கும் இலங்கை வங்கியின் கிளைகள் விரிவாக்கப்பட்டன.
- 1979: சுதந்திரமான பரிமாற்று கட்டுபாட்டு விதிகள் அதனுடைய வெளிநாட்டு நாணய அலகு நிலையத்தை திறப்பதற்கு வழிவகுத்தது.
- 1981: மாலைதீவில் கிளை திறக்கப்பட்டது
- 1982: இது இலங்கையின் முதலாவது வியாபார வங்கியாகத் தெரிவு செய்யப்பட்டது.
- 1989: இலங்கையில் முதன் முறையாக வீசா அட்டையினை அறிமுகப்படுத்தியது.
- 1995: இலங்கை வங்கி தனது கடல் கடந்த வங்கி கிளையினை பாக்கிஸ்தானில் கராச்சியில் நிறுவியது.
- 1995: தனது கடல் கடந்த வங்கிக் கிளையினை இந்தியாவில் சென்னையில் நிறுவியது.
இலங்கை வங்கியால் பேணப்படும் வைப்புக்களின் வகைகள்
[தொகு]- நடைமுறைக்கணக்கு (Current Deposits)
- சேமிப்பு கணக்கு (Savings Deposits)
- நிலையான வைப்பு(Fixed Deposits)
ஏனைய தொழிற்பாடுகள்
[தொகு]- நிலையான வைப்புகளை பேணல்.
- நகை அடகுபிடித்தல்.
- நாணயமாற்றம் செய்தல்.
- சர்வதேச கொடுக்கல் வாங்கல்களைப் பேணல்.
- ATM அட்டை, கடனட்டை(Credit card) வழங்கல்.
இலங்கையின் சில வணிக வங்கிகள்
[தொகு]- இலங்கை வங்கி
- மக்கள் வங்கி
- கொமர்சியல் வங்கி
- ஹட்டன் நசனல் வங்கி
- சம்பத் வங்கி
- செலான் வங்கி
- பான் ஏசியா வங்கி
- யூனியன் வங்கி
- நேசன் டிரஸ்ட் வங்கி