கோடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஒரு கோடி (Crore) என்பது, எண்ணிக்கையில் நூறு இலட்சங்களுக்கு சமமாகும். நூறு கோடிகள் சேர்ந்து ஒரு பில்லியன் ஆகும். இது, இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வரும் பழங்கால எண்ணிக்கை முறையாகும். இம்முறையில் எண்களை எழுதும் போது, எண்களுக்கு இடையே தடுப்பான்களை பயன் படுத்தும் இடங்களும் மாறுபடுகின்றன.

எடுத்துக்காட்டு[தொகு]

அயல் நாடுகளில் 30 மில்லியனை 30,000,000 என எழுதுவர். இதுவே கோடி அடிப்படையில் எழுதும் பொழுது, 3,00,00,000 என எழுதப்படும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோடி&oldid=2740200" இருந்து மீள்விக்கப்பட்டது