இந்து சமய அறநிலையத் துறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Hindu Religious and Charitable Endowments Department
இந்து சமய அறநிலையத் துறை
TamilNadu Logo.svg
அமைப்பு மேலோட்டம்
அமைப்பு 1960
ஆட்சி எல்லை தமிழ்நாடு
தலைமையகம் சென்னை
பொறுப்பான அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன்
இணையத்தளம்
http://www.tnhrce.org

இந்து சமய அறநிலையத் துறை தமிழ்நாட்டில் இந்து சமய திருக்கோயில்களின் வளர்ச்சிக்காக தனித்துறை ஒன்று தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது[1].இத்துறைக்கு, மாநில அளவில் ஒரு செயலகம் தலைமைச் செயலகத்தில் உள்ளது. மேலும் தமிழகத்தில் கோவில்களில் பராமரிப்பு, நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள வசதியாக, இந்து சமய அறநிலையத்துறை சேலம், கோவை, திருநெல்வேலி, மதுரை, சென்னை, விழுப்புரம், தஞ்சாவூர், திருச்சி, சிவகங்கை, மயிலாடுதுறை என, 10 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.[2]

இத்துறையின் கட்டுப்பாட்டில் 36,488 கோயில்கள், 56 திருமடங்கள் மற்றும் திருமடங்களுடன் இணைந்த கோயில்கள் 58 உள்ளன. இந்த இந்து சமய நிறுவனங்களுக்கு சொந்தமான அசையா சொத்து 4,78,347.94 ஏக்கர் நிலம், இத்துறையின் கீழுள்ளது. இதன் மூலம் வரும் ஆண்டு வருவாய் உத்தேசமாக 58.68 கோடி மட்டுமே என்று இந்து சமய அறநிலையத் துறை குறிப்பிடுகின்றது.[3] அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் நிர்வகத்துடன் அரசின் யானைகள் புத்துணர்வு முகாம், அன்னதானத் திட்டம் போன்ற பணிகளையும் இத்துறை செய்கிறது.

பணிகள்[தொகு]

 • இந்து சமய திருக்கோயில்களின் வீடுகள், நிலங்கள், கடைகள் மற்றும் காலி இடங்கள்- வாடகை நிர்ணயம்செய்தல் மற்றும் திருக்கோயில்களின் நிர்வாகம் முதலியன.
 • கோயில் பராமரிப்பு, கோயில் சொத்துகளைப் பாதுகாத்தல், பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்தல் ஆகியவையும் இந்து சமய அறநிலையத் துறையின் கடமை[3]
 • இத்துறையின் சார்பில் 2003 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் தமிழகத்தில் உள்ள கோவில்கள் மற்றும் மடங்களைச் சேர்ந்த யானைகளுக்குப் புத்துணர்வு அளிக்கும் வகையில் நல வாழ்வு முகாம் நடத்தப்படுகிறது[4]

வரலாறு[தொகு]

கிழக்கிந்தியக் கம்பெனி 1810, 1817 ஆம் ஆண்டுகளின் சட்டம் இயற்றி இந்துக் கோயில்களின் நிர்வாகத்தில் நுழைந்தது.[5] பின்னர் கிறிஸ்தவ மிஷினரிகளின் எதிர்ப்பால் 1841 முதல் 1862 வரை கோவில் நிர்வாகத்தில் அரசு விலகிக் கொண்டது.[6] வழிபாட்டிடங்களில் ஊழல் அதிகரித்ததாகக் கூறி, 1863 ஆம் ஆண்டு அறநிலையச் சட்டம் போடப்பட்டு, இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்கள் உட்பட இந்து சமயக் கோயில் நிர்வாகத்தில் அரசு தலையிடத் தொடங்கியது.[7] சென்னை மாகாணத்திலிருந்த நீதிக்கட்சி அரசு காலத்தில் திருக்கோயில்கள் மற்றும் இந்து சமய நிறுவனங்களை மேலாண்மை செய்வதற்காக 1925 ஆம் ஆண்டு இந்து சமய அறநிலைய வாரியம் அமைக்கப்பட்டது. சில மாற்றங்களுடன் 1926 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 இல் மெட்ராஸ் இந்து சமயம் மற்றும் அறநிலையச் சட்டம் 1927 உருவானது. இதன்படி ஒரு தலைவரையும் மூன்று உறுப்பினர்களையும் கொண்டதாக வாரியம் அமைக்கப்பட்டது. இவ்வாரியத்தின் கீழ் நிர்வாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.

இந்திய விடுதலைக்குப் பின்னர், ஓய்வுபெற்ற நீதிமன்ற நீதிபதி பி. வெங்கட்ரமணராவ் நாயுடு தலைமையில் ஆறு நபர்கள் கொண்ட குழுவின் அறிக்கையின்படி மெட்ராஸ் இந்து சமயம் மற்றும் அறநிலையச் சட்டம் 1959 நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம் அறநிலைய வாரியங்கள் மாற்றப்பட்டு அறநிலையத் துறை உருவானது. இதன்படி, அறங்காவலர்களால் இயற்றப்படும் தீர்மானங்களுக்கு அரசால் நியமனம் செய்யப்பட்ட நிர்வாக அதிகாரிகள் அனுமதியைப் பெற்று நடைமுறைப்படுத்துவார்கள்.[6]

இந்து அறநிலையத்துறை அரசாணையின்(எண்.25 ​2008) படி தமிழகத்தில் உள்ள திருக்கோயில் நிலங்களை விற்கவோ,​​ நீண்ட கால குத்தகைக்கு விடவோ தடை உள்ளது.ஆனால் இந்த தடையை விலக்கி வணிக நிறுவனங்களுக்கும் அறக்கட்டளைகளுக்கும் நீண்டகாலக் குத்தகைக்கு விட இந்து அறநிலையத்துறை தமிழக அரசுக்கு 2010 ஆம் ஆண்டு பரிந்துரைத்தது. இச்செயல் விமர்சிக்கப்பட்டது.[8]

திருக்கோயில்களின் சொத்து விவரம்[தொகு]

2014 ஆம் ஆண்டு, இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் வரும் திருக்கோயில்களின் அசையாச் சொத்துக்களின் விவரங்கள் இத்துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டன.[9] இந்த இணையதளத்தில், தூத்துக்குடி மாவட்டத் திருக்கோயில்களின் அசையா சொத்து விவரத் தகவலும் இடம்பெற வேண்டும் என்ற கோரிக்கைக்குப் [3] பின்னரே இணையதளத்தில், தூத்துக்குடி மாவட்டத்தின் சொத்து விவரங்கள் சேர்க்கப்பட்டன. தேனி, நாமக்கல் போன்ற மாவட்டங்களின் சொத்து விவரங்கள் இருப்பினும் அவற்றை தொழில்நுட்பக்கோளாறு காரணமாகப் பார்க்க இயலாது.[9]

யு.டி.ஆர் திட்ட செயலாக்கத்தின் போது, இந்து சமய அறநிலையத் துறைக்குக் கீழுள்ள இந்து சமய நிறுவனங்களுக்குச் சொந்தமான நிலங்கள் தனிநபர்களுக்கு பட்டா மாற்றம் செய்யப்பட்டதாக குற்றம் சாற்றப்பட்டு பின்னர் அந்த நிலங்களை மீட்க மதுரை, கோவை நகரங்களைத் தலைமையாகக் கொண்டு இரு மாவட்ட வருவாய் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு கோயில் நிலங்களை மீட்கும் பணி தொடர்ந்து செயல்படுகின்றது.[3]

திருக்கோயில்களுக்கு வாடகை செலுத்தாமை[தொகு]

மிகக்குறைவான வாடகையே வசூலிக்கப்படும் திருக்கோயில் சொத்துகளை அனுபவிப்போர் திருக்கோயிலுக்கு வாடகை செலுத்தாமல் இருக்கும் தொகை பல திருக்கோயில்களில் லட்சங்களையும், கோடிகளையும் தாண்டுகின்றது.இவ்வாறு பாக்கி வைப்போரில் முக்கிய பிரமுகர்களும் அடங்குவர்.

 • 2011ஆம் வருடத் தகவல் படி அமிர்தாஜ்ஜன் நிறுவனம் மட்டும் கபாலீசுவரர் திருக்கோயிலுக்கு வைத்துள்ள பாக்கி ஆறு கோடிக்கும் மேல் (ரூபாய் 6,45,70,697)[10]
 • 2012 ஆம் ஆண்டு விவரப்படி, சென்னை சென்னமல்லீஸ்வரர் திருக்கோயிலுக்கு வரவேண்டிய வாடகைபாக்கி 90 லட்சம் ரூபாய்.[11]
 • 2012 ஆம் ஆண்டு விவரப்படி, காஞ்சிபுரம் குமரக்கோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு காங்கிரஸ் கட்சியின் பிரமுகர்கள் அரங்கநாதன், 19.61 லட்சம் ரூபாயும், நாராயணன், 3.12 லட்சம் ரூபாயும் பாக்கி வைத்துள்ளனர்.[12]
 • சென்னையின் முக்கியப்பகுதிகளில் அமைந்துள்ள திருவான்மியூர் மருந்தீசுவரர் கோயில், திருவொற்றியூர் சிவன் கோயில்களில் வாடகை பாக்கி வைத்திருப்போர் தகவல்கள் தெரியப்படுத்தப்படுகின்றன.
 • ஊட்டியில் 14 லட்சம் ரூபாய் வரை பாக்கி[13]

மற்றவகை[தொகு]

 • திருப்போரூர் முருகன் திருக்கோயிலுக்கு சொந்தமான கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்தை, அபகரிக்கும் முயற்சியில் கோயில் ஆதீனமும் சிலரால் கடத்த முயற்சிக்கப்பட்டார்.[14]
 • சென்னை, கபாலீசுவரர் திருக்கோயிலுக்கு சொந்தமான 180 கோடி ரூபாய் மதிப்பிலான, 30 "கிரவுண்ட்' நிலத்தை மீட்க கோரிக்கை எழுப்பப்பட்டது.[15]

கணக்கில் சேர்க்கப்படாத 1000 கோடி ரூபாய் சொத்துகள்[தொகு]

கொடைக்கானலைச் சார்ந்த வி.என்.ஏ.எஸ்.சந்திரன் எனும் பக்தர் 2003 மார்ச்சில் தனது ஆயிரம் கோடி ரூபாய்க்கு அதிகமாக சொத்தை பழனி முருகன் கோயிலுக்குச் சேருமாறு உயில் எழுதி பதிவு செய்து அதன் பிரதியை அறநிலைய துறை ஆணையருக்கு அனுப்பியும் அந்த சொத்துகள் இதுவரை பழனி முருகன் கோயில் கணக்கில் சேர்க்கப்படவில்லை. வால்பாறை, மூணாறு ஆகிய இடங்களில் உள்ள தேயிலை தொழிற்சாலைகள், வி.என்.ஏ.எஸ் காலணி நிறுவன 90 சதவீத பங்குகள் உட்பட பல சொத்துகள் இதில் அடங்கும்.[16]

நிலம் கையகப்படுத்தல்[தொகு]

 • திருக்கோயில் நிலங்கள் சமத்துவபுரம் அமைக்க, பேருந்து நிலையம் அமைக்க, தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளுக்காக என்று பலவிதங்களில் கையகப்படுத்தப்படுகின்றது.[17]

நில மீட்பு நடவடிக்கைகள்[தொகு]

 • நாகர்கோயிலில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் நிலம்

நாகர்கோயில் பார்வதிபுரம் கே.பி.சாலையில் தனிநபரால் ஆக்கிரமிக்கப்பட்டு விற்கத் திட்டமிடப்பட்டிருந்த திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான 10 சென்ட் நிலம் 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கன்னியாகுமரி மாவட்ட திருக்கோயில்களின் இணை ஆணையர் தலைமையில் மீட்கப்பட்டு ’கோயில் நிலம்’ என்ற அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டது.[18]

மேற்கோள்கள்[தொகு]

 1. http://www.tnhrce.org/index.html
 2. http://www.tn.gov.in/tamiltngov/department/tamil.htm
 3. 3.0 3.1 3.2 3.3 தினமணி; ஏப்ரல் 30; 2014; கோயில் அசையா சொத்து விவரப் பட்டியல்: தூத்துக்குடி மாவட்ட தகவலும் இடம்பெற வேண்டும்
 4. "மேட்டுப்பாளையத்தில் யானைகள் நல வாழ்வு முகாம் இன்று தொடங்கியது". மாலைமலர். https://www.maalaimalar.com/News/TopNews/2018/12/14113257/1217979/Elephants-Rejuvenation-Camp-start-in-Mettupalayam.vpf. பார்த்த நாள்: 14 டிசம்பர் 2018. 
 5. The Regulation Act VII of 1817. கிழக்கிந்தியக் கம்பெனி. 1817. 
 6. 6.0 6.1 பழனியப்பன், அழ. முத்து. "கோயில்களை அரசு நிர்வகிப்பது நல்லதா, இல்லையா? - ஒரு முன்னாள் அதிகாரியின் அலசல்". bbc.com. https://www.bbc.com/tamil/india-43014930. பார்த்த நாள்: 14 December 2018. 
 7. Religious Endowment Act XX of 1863. பிரிடிஷ் அரசு. 1863. 
 8. http://tamil.oneindia.in/news/2010/02/04/hindu-temple-lands-not-be-leased.html
 9. 9.0 9.1 http://tnhrce.org/areg.html
 10. http://www.mylaporetimes.com/2011/12/kapali-temple-officers-keen-to-recover-leased-rented-properties/
 11. http://www.dinamalar.com/news_detail.asp?id=529267&Print=1
 12. http://www.dinamalar.com/news_detail.asp?id=557027&Print=1
 13. http://www.dinamalar.com/news_detail.asp?id=536370&Print=1
 14. http://tamil.oneindia.in/news/2010/10/07/gang-tries-abduct-thiruporoor-aadeenam.html
 15. http://www.dinamalar.com/news_detail.asp?id=544820&Print=1
 16. http://www.dinamalar.com/news_detail.asp?id=1132766
 17. http://tamil.oneindia.in/news/2008/10/31/tn-hindu-munnani-asks-govt-to-protect-temple-lands.html
 18. http://www.dinamani.com/edition_thirunelveli/kanyakumari/2014/09/25/நாகர்கோவில்-அருகே-திருச்செ/article2447955.ece

வெளி இணைப்புகள்[தொகு]