உள்ளடக்கத்துக்குச் செல்

திருப்பூர் வடக்கு வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருப்பூர் வடக்கு வட்டம், தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்தின் 9 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும். [1] பழைய திருப்பூர் வட்டத்தின் வடக்குப் பகுதிகளைக் கொண்டு இவ்வட்டம் நிறுவப்பட்டது. இவ்வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும் மற்றும் வட்டாட்சியர் அலுவலகமும் திருப்பூரில் உள்ளது. இவ்வட்டத்தில் 2 உள்வட்டங்களும் 7 வருவாய் கிராமங்களும் உள்ளது.[2]

மக்கள்தொகை பரம்பல்

[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி திருப்பூர் வடக்கு வட்டம் மற்றும் திருப்பூர் தெற்கு வட்டம் 981,247 மக்கள்தொகை கொண்டது. மக்கள்தொகையில் 499,437 ஆண்களும், 481,810 பெண்களும் உள்ளனர். 274,341 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் கிராமப்புறங்களில் 6.6% வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் எழுத்தறிவு 85.31% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 965 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 111,796 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 959 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 76,852 மற்றும் 1,431 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 88.8%, இசுலாமியர்கள் 7.43%, கிறித்தவர்கள் 3.55% மற்றும் பிறர் 0.22% ஆகவுள்ளனர்.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Tirupupur District Revenue Administration
  2. திருப்பூர் வடக்கு வட்ட வருவாய் கிராமங்கள்
  3. திருப்பூர் வட்டத்தின் மக்கள்தொகை பரம்பல்