கொங்குத் தமிழ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்
கொடுந்தமிழ்
செந்தமிழ்
தனித்தமிழ்
நற்றமிழ்
முத்தமிழ்
துறை வாரியாகத் தமிழ்
அறிவியல் தமிழ்
ஆட்சித் தமிழ்
இசைத்தமிழ்
இயற்றமிழ்/இயல்தமிழ்
சட்டத் தமிழ்
செம்மொழித் தமிழ்
தமிழிசை
நாடகத் தமிழ்
மருத்துவத் தமிழ்
மீனவர் தமிழ்
முஸ்லிம் தமிழ்
பிராமணத் தமிழ்
வட்டார வழக்குகள்
திருநெல்வேலித் தமிழ்
அரிசனப் பேச்சுத் தமிழ்
குமரி மாவட்டத் தமிழ்
கொங்குத் தமிழ்
செட்டிநாட்டுத் தமிழ்
சென்னைத் தமிழ்
மட்டக்களப்புப் பேச்சுத் தமிழ்
நாஞ்சில் தமிழ்
மணிப்பிரவாளம்
மலேசியத் தமிழ்
யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழ்
சுனூன் தமிழ்
பெங்களூர் தமிழ்

தொகு

கொங்குத் தமிழ் (Kongu Tamil) அல்லது கோயம்புத்தூர் தமிழ் என்பது கொங்கு நாட்டில் பேசப்படும் வட்டார வழக்கு மொழியாகும். இவ்வட்டார வழக்கு மொழியை கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி,கரூர், கிருஷ்ணகிரி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் வசிக்கும் மக்களால் பேசப்படுகிறது. இவ்வழக்கு இதற்கு முன்பு ”காங்கி” என்ற பெயராலும் அழைக்கப்பட்டது.[1]

கொங்கு என்ற சொல்லுக்குத் கங்க என்பது பொருள். எனவே கங்கர் பேசும் மொழியாதலால், காங்கி எனப்பெயர்பெற்றது என சொல்லப்படுகிறது. இம்மொழிக்கு சுயமரியாதை இயக்கம் தோன்றிய பின் கொங்குத் தமிழ் என்று பெயர் மாற்றப்பட்டது. மேலும் இவர்கள் வாழ்ந்த இடத்தை கொங்கு நாடு எனவும் அழைத்தனர்.

தமிழின் சிறப்பு 'ழ' என்பது போல் கொங்குத் தமிழின் சிறப்பு 'ற' மற்றும் 'ங்' என்பனவாகும். என்னுடைய, உன்னுடைய என்பதை என்ற, உன்ற என்றும், என்னடா என்பதை என்றா என்பார்கள். சாப்பிட்டுவிட்டு, குளித்துவிட்டு என்பனவற்றை சாப்டுபோட்டு, "தண்ணிவார்த்துகுட்டு”, 'தண்ணிஊத்திக்கிட்டு' என்று கூறுவார்கள். மரியாதை கொடுத்துப் பேசும் தமிழ் கொங்குத் தமிழ். ஏனுங்கோ, சொல்லுங்கோ, வாங்கோ, போங்கோ என்று எதிலும் 'ங்கோ' போட்டு மரியாதையாகப் பேசுவார்கள். பெரியவர்களிடம் பேசும் போது 'ங்கோ' என்பதற்கு பதில் 'ங்' போட்டும் பேசுவார்கள். சொல்லுங், வாங், போங், சரிங், இல்லீங் என்று 'கோ' வை சொல்லாமல் முழுங்கி விடுவார்கள்.

கொங்குப் பகுதியில் புழங்கும் சில சொற்கள்[தொகு]

(அகரவரிசையில்)

[தொகு]

 • அக்கட்ட, அக்கட்டு, அக்கட்டாலே - அந்த இடம், அந்த இடத்திலே. (நீ அக்கட்டாலே போய் உட்காரு, move aside)
 • அக்கப்போர் - சண்டை/தொந்தரவு
 • அகராதி - எல்லாம் தெரிந்தார்போல நடத்தல்
 • அந்திக்கு - இரவுக்கு
 • அங்கராக்கு - சட்டை
 • அட்டாரி, அட்டாலி - பரண்
 • அப்பச்சி, அப்புச்சி - தாய்வழித் தாத்தா
 • அப்பத்தாள்- தந்தைவழித் பாட்டி (அப்பாவின் ஆத்தாள்)
 • அப்பாறு - அப்பாவின் அப்பா
 • அம்மிணி - பெண்ணைக் குறிக்கும்
 • அமுச்சி - அம்மாயி - அம்மத்தாள் - அம்மாவின் அம்மா
 • அல்லெ (காசரகோடு பாஷையிலும் (கேரளத்தின் காசரகோடு மாவட்டத்தில் பேசப்படும் மலையாளம்) கன்னடத்திலும் அல்லே / அல்லி -இடம்) - இடம் (உ.தா. அந்த அல்லெ உக்காரு - அந்த பக்கம் உட்கார்)
 • அஸ்கா(வ்) - வெஞ்சர்க்கரை
 • அரசாணிக்காய் - பரங்கிக்காய்
 • குச்சுக்கோ - உக்காருங்க (வயதான பெரியவர்கள் பேசும் வழக்குச் சொல்)
 • அத்துவாணம் - நிலையற்றது
 • அண்ணாந்து - மேலே பார்த்து

[தொகு]

 • ஆசாரி - மரவேலைசெய்வோர் (மலையாள பிரயோகத்தில்)
 • ஆசாரம் - வீட்டினுள் உள்ள முற்பகுதி
 • ஆகாவழி - ஒதவாக்கரை - ஒன்றுக்கும் உதவாதவன்
 • ஆட்டம் - போல என்று பொருள்படும் ஒரு சொல்(be like): (அக்காளாட்டம் சும்மா இரு - அக்காளைப் போல் சும்மா இரு)
 • ஆத்தா, ஆயா (அப்பாயி) - அப்பாவின் அம்மா
 • ஆம்பாடு - காலும் இடுப்பும் சேரும் மடிப்பான இடம் (ஆம்பாட்டிலே தேய்த்துக் குளி)
 • ஆரு - யார்
 • ஆன - ஆனை - யானை
 • ஆட்டாங்கல் - ஆட்டு உரல்

[தொகு]

 • இக்கிட்டு - இடர்பாடு
 • இட்டேறி / இட்டாறி - தடம் (வயல்களினிடையே செல்லும் வரப்புப்பாதை, வண்டிப்பாதை)
 • இண்டம் பிடித்தவன் - கஞ்சன்

[தொகு]

 • ஈய்க்குமாறு(சீமாறு) - விளக்குமாறு
 • ஈருளி - பேன், ஈர் முதலியவற்றை நீக்கப் பயன்படும் கருவி

[தொகு]

 • உண்டி - (மாதிரி) = ஹுண்டியல் -> ஹுண்டி   -> உண்டி = Making hole? - தர்பூசணியில் உண்டிபோட்டுக்கொடு; எப்படி இருக்கிறதென்று பார்க்கலாம்
 • உக்காரு - உட்கார்
 • உப்புசம், உக்கரம் - புழுக்கம்
 • உறம்பிர - உறைம்பிரை - ஒறமொறை- சொந்தக்காரர்கள் - விருந்தாளி (உறவின்முறை). உறன் பரை = உறம்பரை
 • உன்ற - உன்றன்/உன்னுடைய

[தொகு]

 • ஊக்காலி (?ஊர்க்காலி) - பெரியவர்கள் சொல் மதியாமல் தான்தோன்றித்தனமாக சுற்றுபவர்களை ஊக்காலி என்பர். (ரவுடி)
 • ஊளமூக்கு - சளி நிரம்பிய மூக்கு (மலையாள பிரயோகத்தில் - ஊளை - சளி)
 • ஊட்டுக்காரி - வீட்டுக்காரி - மனைவி - மனையாள்
 • ஊறுபட்ட - ஏகப்பட்ட (எ.க:சோத்துல ஊறுபட்ட உப்பு . உறு - மிகை. )

[தொகு]

 • எச்சு - அதிகம்(மலையாள பிரயோகத்தில், எச்சு - அதிகம்)
 • எகத்தாளம் - நக்கல், பரிகாசம், திமிர்
 • எழுதிங்கள் - கொங்கு பெண் மக்களுக்கு செய்யப்பெறும் சடங்கு
 • எரவாரம் - கூரையின் கீழ் பகுதி (தாள்வாரம்)
 • என்ற - என்றன்/என்னுடைய (mine)
 • எந்தநேர் - எவ்விடம்/எந்தப்பக்கம் (where)
 • எடைப்பால் சோறு - இடைப்பகல் உணவு
 • எச்சிப் பணிக்கம் - எச்சில் துப்பும் கலம்

[தொகு]

 • ஏகமாக - மிகுதியாக, பரவலாக
 • ஏதாச்சும் - ஏதாவதும்
 • ஏகதேசம் - ஏறக்குறைய
 • ஏனம் - பாத்திரம்
 • ஏத்தவாரி - கிணற்றில் ஏற்றம் பூட்டி நீர் இறைத்த பகுதி

[தொகு]

 • ஐயன்/அய்யன்- பெரியவர் அல்லது அப்பா/தந்தையின் தந்தை

[தொகு]

 • ஒட்டுக்கா - ஒரேயடியாக, இணைந்து (ரெண்டு பேரும் ஒட்டுக்காகப் போயிட்டு வாங்க - இருவரும் இணைந்து சென்று வாருங்கள்)(மலையாள பிரயோகத்தில், ஒட்டாகே - ஆக கூடி, -உம்)
 • ஒடக்கா(ய்) - ஓணான்
 • ஒப்புட்டு - போளி
 • ஒளப்பிரி - உளறு "இவன் என்ன இப்படி ஒளப்பிரிக்கிறான்"
 • ஒருசந்தி - ஒரு வேளை மட்டும் உண்டு விரதம் இருத்தல்
 • ஒலக்கை/ரக்க - உலக்கை (உரலில் குத்தப் பயன்படும் கருவி)
 • ஒன்ற - உன்னுடைய
 • ஒருவாடு - மிக அதிகமாக(மலையாளச்சொல்)
 • ஒருக்கா - ஒரு முறை
 • ஒரம்பர - விருந்தினர்

[தொகு]

 • ஓரியாட்டம் - சண்டை: அவிய பங்காளிகளுக்குள்ள எப்பவுமே ஓரியாட்டம்தான்.(மலையாள பிரயோகம், ஓரியிடுக - கூவலிடுக, கத்தலிடுக)

[தொகு]

 • கட்டுத்தரை - மாட்டுத் தொழுவம்
 • கட்டுசோத்து விருந்து - கட்டுச்சாத விருந்து, வளைகாப்பு
 • கடைகால், கடக்கால் - அடித்தளம்
 • கடகோடு - கடைசி (அந்த கோட்டிலே பாரு - அந்த கடைசியிலே பாரு)
 • கடையாணி - அச்சாணி
 • கரடு - சிறு குன்று
 • கல்யாணம் (கண்ணாலம்) - திருமணம்
 • காணியாச்சி - குலதெய்வம் (பெண்)
 • காராட்டு காலம் - இனப்பெருக்க காலம் (காராட்டு காலத்தில் திரியும் பூனை ஒரு மாதிரி மதத்துடன் இருப்பதால் அதற்கு காராட்டுப் பூனை என்று பெயர்)
 • குக்கு - உட்கார்
 • குச்சிகிழங்கு - மரவள்ளிகிழங்கு
 • கூம்பு - கார்த்திகை தீபம் (கூம்பு அவிகிறதுக்குள்ளே அந்தக் காரியத்தைப் பண்ணிடு)
 • கூதல் - குளிர், கூதகாலம்- குளிர்காலம் (மலையாள பிரயோகத்தில்)
 • கொரவளை \ தொண்டை - குரல்வளை
 • கொடாப்பு ‍- கோழிகளை அடைத்து வைக்கப் பயன்படும் பெரிய கூடை (தென் மாவட்டங்களில் பஞ்சாரம் என்று சொல்லப்படும்)
 • கொழு - இரும்பாலான ஏர்முனை
 • கொழுந்தனார் - கணவரின் தம்பி
 • கொழுந்தியாள் - கணவனின் தங்கை, மனைவியின் தங்கை
 • கொட்டமுத்து - ஆமணக்கு
 • கோடு - "அந்தக் கோட்டிலே உட்கார்", பழைமைச்சான்று: "கோடுயர் அடுப்பு" "பக்கம் உயர்ந்த அடுப்பு" (புறநானூறு 164)
 • கோடி - நீரில் நனையாத துணி/பதுத்துணி
 • கொங்காடை- மழைக்கு பாதுகாக்கும் ஆடை-சணல் சாக்கில் செய்தது
 • கூச்சம் - மரத்தூண்
 • கள்ளக்காய் - நிலக்கடலை
 • கரிஞ்சிக்குட்டிக் கீரை - மணத்தக்காளிக் கீரை
 • கவைக்கோல் / கவ்வக்கோல் -

முனையில் இரண்டாக பிரிக்கப்பட்ட குச்சி

 • கம்பத்தாட்டம் - கோவில் திருவிழாவில் ஆடும் ஆட்டம்

[தொகு]

 • சடவு - பிரச்சினம், பிரச்சனை செய்ய, தொந்தரவு, வெறுப்பு (அவனுட சடவு எடுக்கமுடியல - அவன் தொந்தரவு தாங்கமுடியல) (மலையாள பிரயோகத்தில், சடவு, சடைக - மனந்தளர்க, தடைபடுத்துக)
 • சாடை பேசுகிறான் - குறிப்பாகத் (மறைமுகமாகத்) தாக்கிப் பேசுகிறான்
 • சாங்கியம் - சடங்கு
 • சாயங்காலம் - மாலை
 • சல்லை- சல்ல - இடர், (அ) மூங்கில் சல்லை
 • சிலுவாடு - சிறு சேமிப்பு
 • சீக்கு - நோய் (மலையாள பிரயோகத்தில், சீக்கு, சீத்தை - அழுக்கு, அசுத்தம்)
 • சீக்கடி - கொசுக்கடி
 • சொள்ளை - கொசு
 • சீரழி - நிலைகுலைதல் (அங்கிங்கே அலைந்து சீரழியவேண்டாம்)
 • சீறாட்டு - கோபம்/பிடிவாதம். (கட்டிக் கொடுத்து மூன்றுமாசம் கூட ஆகலை. அதுக்குள்ளே பிள்ளை சீறாடிட்டு வந்துவிட்டது) (மலையாள பிரயோகத்தில், சீறுக-கோபிக்க)
 • சீவகட்டை - சீவல்கட்டை- துடைப்பம்
 • சீவக்காய் - சியக்காய்
 • சுல்லான் (சுள்ளான்?) - கொசு
 • செகுனி, செவுனி - தாடை/கன்னம்
 • செம்புலிகுட்டி - செம்மறியாட்டுக்குட்டி
 • சோங்கு - சோலைபோலும் மரஞ்செடித்தொகுதி
 • சேந்துதல் - தண்ணீர் இறைப்பது (கிணற்றிலே இருந்து தண்ணீர் சேந்தி வா = தண்ணீர் இறைத்துக்கொண்டு வா)
 • சோறு - அன்னம்
 • சீப்பம்பால் - சீம்பால்
 • சாளை - வீடு (காட்டுச்சாளை - தோட்டத்து வீடு)
 • சயனம் - சகுனம்

[தொகு]

 • தண்ணி வார்க்க, தண்ணி ஊத்திக்க - குளிக்க
 • தவளை/ பொங்கத்தவளை - பித்தளையாலான பொங்கல் பானை
 • தவக்கா - தவளை(உயிரினம்) (frog)
 • தாரை - பாதை
 • தொண்டுபட்டி - மாடு/ஆடு அடைக்கும் இடம், தொழுவம் (ஆட்டைத் தொண்டுபட்டியிலே அடை)
 • துழாவு - தேடு
 • திரட்டி (திரட்டு) - பெண்ணின் முதிர்ச்சி விழா, பூப்பு நன்னீராட்டு விழா
 • தும்பி - பூச்சி (உதாகரித்து), தட்டாந்தும்பி
 • தொறப்பு - பூட்டு, தொறப்பு கை - திறவுகோல்
 • தாவாரம் - தாழ்வாரம்
 • தடுக்கு - தென்னை ஓலைப் பாய்
 • தெரக்கு - மும்முரம் (தெரக்கா வேலை செய்யுறாங்க)

[தொகு]

 • நங்கை, நங்கையாள் - அண்ணி (அண்ணணின் மனைவி/ மனைவியின் அக்காள்)
 • நலுங்கு - பயத்தால் உடல் நலம் குன்றிய (குழந்தைகள் உடல் நலம் குன்றி இருந்தால் மட்டுமே நலுங்கு என்ற சொல்லை புழங்குவார்கள், பெரியவர்களுக்கு இச்சொல்லைச் சொல்ல மாட்டார்கள் - அவர்கள் குழந்தை நலுங்கிவிட்டதாம்)
 • நசியம் - மாடுகள் சினையாகும் பருவம்
 • நச்சு - வாசாலம், பேசிக்கொண்டே இருப்பது/தொந்தரவு
 • நியாயம் (நாயம்) - பேச்சு (அவன் பேச்சு யாருக்கு வேணும் - அவன் நியாயம் யாருக்கு வேணும், அங்கே என்னடா பேச்சு - அங்கே என்னடா நாயம் )
 • நீசத்தண்ணி - பழையசோற்றுத்தண்ணீர்
 • நோக்காடு - நோய், வலி: அவனுக்கென்ன நோக்காடோ தெரீல. இன்னைக்கு வரல).
 • நோம்பி (நோன்பு) - திருவிழா

[தொகு]

 • பகவதியாயி நோன்பு (பவுதியாயி நோம்பி) - பகவதி அம்மன் திருவிழா
 • படு - குளம்போன்ற ஆழமில்லாத நீர்நிலை
 • படி, பறை, சம்பா, ஆலாக்கு - அரிசியளப்பு அளவைகள்
 • பழமை - பேச்சு (அங்கே என்ன பேச்சு - அங்கே என்ன பழமை)
 • பன்னாடி - கணவன்,
 • பாலி - குளத்தை விடச் சிறிய நீர்நிலை.
 • பாச்சை, பாற்றை- கரப்பான் பூச்சி (மலையாள பிரயோகத்தில், பாற்ற - கரப்பான்)
 • பிரி - பெருகு, கொழு ("பெண்கள் மாசமாக இருக்கும்பொழுது வயிறு பிரியும்")
 • புண்ணியர்ச்சனை- (< வடமொழி: புண்யாகவசனம்) புதுமனை புகுவிழா
 • புள்ள - (இளம்) பெண்
 • பிள்ளார்/பள்ளாரு - பிள்ளையார் - புடுச்சு வெச்சா புள்ளாரு (பிடித்து வைத்தால் பிள்ளையார்)
 • பெருக்கான் - பெருச்சாளி
 • பொக்கென்று - வருத்தமாக (மிட்டாய் தரேனென்று சொல்லிட்டுத் தராமல் இருந்தால் குழந்தை பொக்கென்று போயிடும்)
 • பொட்டாட்டம் - அமைதியாக
 • பொடக்காலி - புழக்கடை
 • பொடனி, பொடனை - (புடனி, பிடனி, பிடரி) பின்கழுத்து
 • பொறந்தவன் - உடன் பிறந்த சகோதரர்
 • பொறந்தவள் - உடன் பிறந்த சகோதரரி
 • பொழுதோட - பொழுது சாயும் முன்
 • பட்டி நோம்பி - மாட்டுப்பொங்கல்
 • படி -1 லிட்டர்
 • பொறகால - பின்னால்

[தொகு]

 • மச்சான் - அக்காவின் கணவர்
 • மச்சாண்டார் - கணவனின் அண்ணன்
 • முதலாளி - பண்ணைக்கு சொந்தக்காரன்
 • முட்டுவழி - முதலீடு
 • மெய்யாலும் − மெஞ்ஞாலும் புழப்பு - தொடர்வேலை
 • மலங்காடு - மலைக்காடு
 • மசையன் - விவரமற்றவன்
 • மழைக்காயிதம் - பாலிதீன் காகிதம்
 • மளார் - விரைவாக, சீக்கிரம் (மளார் என்று தனியாக சொல்லமாட்டார்கள். மளாரென்று வா\போ, மளாரென்று வேலையை முடி என்று அடுத்த சொல்லோடு இணைந்து தான் இச்சொல் வரும்)
 • முக்கு - வளைவு,
 • முச்சூடும் - முழுவதும்,
 • மேட்டுக்காடு - வானம் பார்த்த பூமி
 • மாத்து - விஷேச வீட்டில் உட்கார விரிக்கும் சேலை
 • மொண்ணை - மழுங்கிய (மொண்ணைக்கத்தி)
 • மக்கிரி - பெரிய கூடை (6கூடை-1மக்கிரி)
 • மறுக்கா - மறுமுறை, இன்னொரு முறை
 • மஞ்சி - நார் (தேங்காய் மஞ்சி - தேங்காய் நார்)
 • மம்முட்டி - மண்வெட்டி

[தொகு]

 • வட்டல் - தட்டு
 • வவுறு - வயிறு
 • வாக்கு - கோவிலில் கேட்கப்படும் ஒரு வகை சந்தேகங்கள்
 • விஷண்ணம்/வெசணம் - நோவுகை/மனக்கஷ்டம் (சம்ஸ்கிருதம்- மனஸ்தாபம்)
 • வெகு - அதிக
 • வெள்ளவெங்காயம் - பூண்டு
 • வெள்ளாமை (வேளாண்மை) - உழவு, விவசாயம்
 • வேகு வேகுன்னு - அவசரஅவசரமாய்
 • வள்ளம் - 4 படி (லிட்டர்) மரக்கால்
 • வாது - கிளை (அணில் வாது விட்டு வாது தாவியது)

[தொகு]

 • ரக்கிரி- பொரியலாகச் செய்யாது கடையப்படும் கீரை வகைகள்(எ-டு: பண்ண ரக்கிரி, தொய்ய ரக்கிரி, புளுமிச்ச ரக்கிரி)

து[தொகு]

 • துளிவேள / கொஞ்சமாக - குறைவாக

தெ[தொகு]

 • தெலுவு - பனை மற்றும் தென்னை மரத்தில் இருந்து கிடைக்கும் பதனீர் (போதை அற்றது)

மேற்கோள்கள்[தொகு]

 1. Severine Silva. Toponomy of Canara. பக். 34. https://books.google.com/books?id=e7c9AAAAMAAJ&q=kangiam+mysore&dq=kangiam+mysore&hl=en&ei=fDWtTeXUIYu8vQP8oejTCg&sa=X&oi=book_result&ct=result&resnum=2&ved=0CDkQ6AEwAQ. "In the southern part of Mysore the Tamil language is at this day named the Kangee, from being best known to them as the language of the people of Kangiam" 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொங்குத்_தமிழ்&oldid=3272635" இருந்து மீள்விக்கப்பட்டது