வெள்ளியங்கிரி மலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வெள்ளியங்கிரி மலை
வெள்ளியங்கிரி மலை is located in Tamil Nadu
வெள்ளியங்கிரி மலை
வெள்ளியங்கிரி மலை
Location in Tamil Nadu
ஆள்கூறுகள்: 10°59′20″N 76°41′14″E / 10.9888°N 76.6873°E / 10.9888; 76.6873ஆள்கூற்று: 10°59′20″N 76°41′14″E / 10.9888°N 76.6873°E / 10.9888; 76.6873
பெயர்
தமிழ்: வெள்ளியங்கிரி மலை
அமைவிடம்
நாடு: India
மாநிலம்: தமிழ்நாடு
மாவட்டம்: கோயம்புத்தூர்
அமைவு: கோயம்புத்தூர்
ஏற்றம்: 1,778 m (5,833 ft)
கோயில் தகவல்கள்
மூலவர்: சிவன்
சிறப்பு திருவிழாக்கள்: தமிழ் மற்றும் தெலுங்கு வருட பிறப்பு, சித்ரா பௌர்ணமி, கார்த்திகை விளக்கீடு[1]
வரலாறு
அமைத்தவர்: Natural formation

வெள்ளியங்கிரி மலை (Velliangiri Mountains) தமிழ்நாடு கோயம்புத்தூரிலிருந்து 40 கிமீ தொலைவில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர். தென்கயிலை என பக்தர்களால் அழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலையானது கொட்டும் பனியும், கை தொட்டு விளையாடும் உயரத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலை ஒரு புனிதத் தலமாகவும், சுற்றுலாத்தலமாகவும் இருந்து வருகிறது. இது மேகங்களும் சூழ, வெள்ளி வார்ப்படத்தால் மூடியது போல தோற்றமளிப்பதால் "வெள்ளியங்கிரி" என்ற பெயர் பெற்றது. இம் மலையடிவாரம் பூண்டி என அழைக்கப்படுகிறது. சுமார் 3500 அடி உயரமுடைய (கடல் மட்டத்திலிருந்து 5000 அடி,1524 m) இம்மலை ஏழு சிகரங்களைக் கொண்டுள்ளது. ஐந்தரை கிலோ மீட்டர் தூரம் செல்லும் இப்பாதையில் வெள்ளை விநாயகர் கோயில், பாம்பாட்டி சுனை, கைதட்டி சுனை, சீதைவனம், அர்ச்சுனன் வில், பீமன் களி உருண்டை, ஆண்டி சுனை போன்ற இடங்களை கண்டு மகிழ்ந்து செல்லலாம்.இரவில், மலையில் காட்டு யானைகள் மற்றும் விலங்குகளின் நடமாட்டம் தொடங்கிவிடும் என்பதால் இங்கிருந்து மாலையிலேயே திரும்பி விடுதல் பாதுகாப்பானது என்று சொல்லபடுகிறது ஆனால் அனைவரும் இரவில் பயணத்தை தொடங்கி அதிகாலை மலை உச்சிக்கு சென்று சேர்கிறார்கள். அதிக மக்கள் நடமாட்டத்தால் வனவிலங்குகள் அங்கு இருப்பதை தவிர்க்கின்றன.

வெள்ளி மலை[தொகு]

வெள்ளி மலை எனப்படும் வெள்ளியங்கிரியே கயிலை மலை என்று போற்றப்படுகிறது. உத்தர கயிலை, மத்திய கயிலை, தட்சிண கயிலை எனக் கயிலை மூன்றாகும். உத்தர கயிலை வடக்கே நீர்ப்பகுதியில் உள்ளது. மத்திய கயிலை இமயமலையில் உள்ளது. வெள்ளியங்கிரியே தட்சிய கயிலையாகும்.[2]

கோயில் வரலாறு[தொகு]

கச்சியப்பர் பேரூர் புராணத்தில், கயிலை மலையில் இருந்த சிவபெருமானை, மலர்களைத் தூவி அர்ச்சனை செய்து, மனமுருகி வணங்கினார் திருமால். அவர் முன் சிவன் தோன்றி, "நீ விரும்பியது என்னவென்று' கேட்டார். "என் உடல் உங்களது திருநடனத்தை இதுவரை காணவில்லை. ஆகையால் தங்களது நடனத்தை காட்ட அருள்புரியுங்கள்' என, பணிந்து வணங்கினார் திருமால். இதற்கு பதிலளித்த சிவபெருமான், "பதஞ்சலி, வியாக்கிரபாதர் ஆகிய இரு முனிவர்களும் சில புண்ணியங்களை சலிக்காமல் செய்ததால், எனது தாண்டவத்தை சிதம்பரத்தில் அவர்களுக்கு நிகழ்த்தி காட்டினேன். அதே நாடகத்தை மீண்டும் உனக்கு நடத்தி காட்டுவது, ஆதிமூலமாகிய எனக்கு முறையல்ல.

மேலைச்சிதம்பரம் (பேரூர்), முனிவர்கள் வழிபட்டு உய்யும் அரசவனம். இங்குள்ள வெண்மையான வெள்ளிங்கிரி மலையை விரும்பி, அதில் அழகிய கோவில் கொண்டு எழுந்தருளி விளங்குவது எமக்கென்றும் மகிழ்ச்சி மிக்கது. மேலைச்சிதம்பரத்தில், என்னோடு வாதிட்ட காளிதேவியும், தவம் செய்து இருக்கிறாள். ஆணவ மலமானது தன்னை விட்டு நீங்கி முக்தி அடைந்த காலவ முனிவனும் இத்தலத்தில் என்னை வழிபடுகிறான். இங்கு யாகம் செய்து புண்ணியம் பெற்றோர் பலர். இப்போதும் தவம் செய்வோர் எண்ணிக்கை கணக்கிலடங்காதவை. எனவே, நீ ஒரு கோமுனியாய் அத்தவத்தை அடைந்து எம்மைப் பூசித்தால், அங்கு உனக்கு என் தாண்டவத்தை காட்டுவேன், நீ அங்கு செல்க' என்றார்.

திருமாலும் இறைவனின் கட்டளையை ஏற்று, பீதாம்பரத்தை பூமியில் வீசி, ருத்ராட்சம் அணிந்து, சடைமுடி தரித்து, விபூதியை உடலெங்கும் பூசி, உணர்ச்சி பொங்க சிவன் நாமத்தை உச்சரித்தான். பின், காஞ்சிமாநதியில் நீராடி, தென்கயிலாயமான வெள்ளிங்கிரி மலைமீதி ஏறி இறைவன், இறைவியை தரிசித்தார். காஞ்சியாற்றின் கரையில், அரசவனத்தை அடைந்து வணங்கினார். பிறகு, பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்கு தென்திசையில் தென்கயிலாயநாதர் கோயிலை நிறுவினார். அதில், எழுந்தருளிய பெருமானை, தன் கையால் தோண்டிய, சக்கர தீர்த்த நீரால் அபிஷேகம் செய்து, பூஜித்தான். பின்னர் காலவமுனிவரோடு கலந்து சிவயோகத்தில் இருந்தான்.

தென்கயிலாயம் சிவபெருமானின் திருவுருவமாக விளங்குகிறது. ஆன்மிக சான்றோர், இதை யோகமலை எனவும் கூறுவது வழக்கம். "கோமுனி பூஜித்த தென்கயிலாயத்தை, வணங்கி வந்தால் துன்பங்கள் நீங்கும். தேவர்கள் விரும்பும் சிவலோகத்தை அடையலாம்' என்கிறது, பேரூர்ப்புராணம்

[3]

பேருந்து வசதி[தொகு]

கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து மலை அடிவாரமான பூண்டி என்னும் ஊர் வரை பேருந்து வசதி இருக்கிறது.

இவற்றையும் பார்க்க[தொகு]

உசாத்துணைகள்[தொகு]

  1. http://temple.dinamalar.com/en/new_en.php?id=1614
  2. ஆ.செல்லப்பா, உமையவள் உகந்த முக்கண்ணன் நடனம்,குமுதம் ஜோதிடம், 5. மார்ச் 2004
  3. கோமுனி (திருமால்) வழிபட்ட தென்கைலாயம்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெள்ளியங்கிரி_மலை&oldid=2417873" இருந்து மீள்விக்கப்பட்டது