காந்திபுரம்
காந்திபுரம் | |
— நகராட்சி — | |
அமைவிடம் | 11°12′N 77°12′E / 11.2°N 77.2°Eஆள்கூறுகள்: 11°12′N 77°12′E / 11.2°N 77.2°E |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கோயம்புத்தூர் |
ஆளுநர் | பன்வாரிலால் புரோகித்[1] |
முதலமைச்சர் | எடப்பாடி க. பழனிசாமி[2] |
மாவட்ட ஆட்சியர் | |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
• 411 மீட்டர்கள் (1,348 ft) |
குறியீடுகள்
|
காந்திபுரம் (ஆங்கிலம்: Gandhipuram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாநகராட்சியில் இருக்கும் ஓர் நகராட்சி ஆகும். இது கோவை மாநகராட்சியில் மிக முக்கியமான வணிக நிறுவனங்களும் வணிக பகுதியாகும்.கோவையில் உள்ள 10 பேருந்து நிலையங்களில் இங்கு 4 பேருந்து நிலையங்கள் செயல்படுகிறது.
ஒரு குடியுருப்பு பகுதியாகவே கருதபட்ட இவ்விடம், இப்பொழுது நகரின் முக்கிய வணிகப்பகுதியாக மாறியுள்ளது. நகரின் மத்தியில் இருப்பதினால் வணிகம், பொழுதுபோக்கு மற்றும் உள்-நகர பேருந்து சேவைக்கு மையமாக செயல்படுகிறது.
நிலவியல்[தொகு]
காந்திபுரம், கோயம்புத்தூர் விமான நிலையத்தில் இருந்து சுமார் 14 கிமீ துரத்திலும், நகர ரயில்நிலையம் மற்றும் வட-கோவை சந்திப்பில் இருந்து தலா 3 கீ.மீ மற்றும் 5 கீ.மீ தொலைவில் அமைந்துள்ளது. கோவை நகரின் அனேக பகுதிகளுக்கும் உள்ளூர் பேருந்து சேவைகள் மூலமாக இணைக்கபட்டுள்ளது.
மக்கள் தொகை[தொகு]
2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு படி காந்திபுரம் நகராட்சியில் மொத்த மக்கள் தொகை 4,13,769 பேர் வசிக்கின்றனர். இது 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பு விட 8.38% அதிகமாகும்.காரணம் வெளிமாவட்ட மக்கள் பிழைப்புக்காக கோவை மாநகருக்கு வருவதே ஆகும். மேலும் இந்த மக்கள் தொகை 2021 ம் ஆண்டில் 9.59% சதவிகிதம் அதிகமாகி 7,00,000 இலட்சத்தை தாண்டும் என ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. மேலும் ஆண்கள் 54.12% எனவும் பெண்கள் 55.88% பேர் வசிக்கின்றனர்.
பொருளாதாரம்[தொகு]
காந்திபுரம், கோயம்புத்தூர் நகரின் மிகப்பெரிய வர்த்தக மையம். கோயம்புத்தூர் மற்றும் அதை சுற்றியுள்ள ஊர்களில் உள்ள அனேக தொழிற்சாலைகளின் நிறுவன அலுவலகங்கள் காந்திபுரத்தில் தான் செயல்படுகின்றன. காந்திபுரம் உள்ள கிராஸ் கட் சாலை கோயம்புத்தூர் நகரில் இரண்டாவது மிகப்பெரிய வணிக மையமாக உள்ளது.
உசாத்துணை[தொகு]
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.